செய்தி: ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவின் கச்சா எண்ணெய், எரிவாயு நம்பி இயங்கி வந்த நிலையில், தற்போது ரஷ்யா உக்ரைன் போருக்கு பின்பு, Nors Stream என்னும் எரிவாயு பைப்லைன்-ஐ பராமரிப்பு பணிகளுக்காக மொத்த எரிவாயு விநியோகத்தை 20 சதவீதமாகக் குறைத்துள்ளது. ஐரோப்பாவில் குளிர்காலம் நெருங்கி வரும் நிலையில் எரிவாயு இல்லாமல் மக்களும், நிறுவனங்களும் எரிவாயு இல்லாமல் குளிர் காலத்தில் முடங்க வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது. இந்த நிலையில் ஐரோப்பா பல முறை விநியோகத்தை அதிகரிக்கப் பேச்சுவார்த்தை நடத்தியும் … பொருளாதாரத் தடைகள் உலகை மாற்றுமா?-ஐ படிப்பதைத் தொடரவும்.
குறிச்சொல்: சீனா
இந்தியாவின் அரசியல் பொருளாதார பாதை
நிலைகுலைக்கப்படும் தெற்காசியா! பகுதி 3 மிகைடாலர் அச்சடிப்பால் ஏற்கனவே எரிந்துகொண்டிருந்த விலைவாசி உயர்வு பிரச்சினையை உக்ரைன் போர் எண்ணெய் ஊற்றி கொழுந்துவிட்டு எரியச் செய்திருக்கிறது. அமெரிக்காவின் டாலர் வர்த்தகத்தை ஆயுதமாக்கும் நடவடிக்கையும் அதற்கு எதிரான ரஷ்ய - சீன நாடுகளின் சொந்த நாணய வர்த்தக மாற்று முன்னெடுப்பும் இதுவரையிலான உலக வர்த்தகக் கட்டமைப்பை உலுக்கி உடைக்க ஆரம்பித்திருக்கிறது. இது உலகம் முழுக்க விலைவாசி உயர்வு, டாலர் கடன் கொடுப்பனவுப் பற்றாக்குறை பிரச்சினைகளை ஏற்படுத்தி உள்நாட்டுக் குழப்பங்கள், போராட்டங்களை … இந்தியாவின் அரசியல் பொருளாதார பாதை-ஐ படிப்பதைத் தொடரவும்.
மின்னணு பொருளாதாரம்: இந்தியாவின் வரமா?சாபமா? 8
என்னவாகும் அண்ணாச்சிக் கடைகள்? உலகம் முழுவதும் விற்பனையாகும் சில்லறை வணிகத்தில் மதிப்பு 3.25 ட்ரில்லியன் டாலர்கள் (2017). இந்திய சில்லறை வணிகத்தின் மதிப்பு 2019 மதிப்பின்படி 700 பில்லியனாகவும், 2025க்குள் 1.3 ட்ரில்லியன் டாலர் மதிப்பு கொண்டதாகவும் வளரும் என்றும் கணக்கிட்டு இருக்கிறார்கள். எனில், இந்திய சில்லறை வணிகத்தின் பரிமாணத்தை நாம் புரிந்துகொள்ளலாம். தற்போது இந்தியாவில் இந்த வணிகத்தில் ஈடுபடும் கடைகளின் எண்ணிக்கை 1.2. கோடி. இவர்களில் பாதி பேரை மட்டும் வெளியேற்றி அதை மூன்று பேர் … மின்னணு பொருளாதாரம்: இந்தியாவின் வரமா?சாபமா? 8-ஐ படிப்பதைத் தொடரவும்.
மின்னணு பொருளாதாரம்: இந்தியாவின் வரமா, சாபமா? 4
இந்தியாவில் மின்னணு பொருளாதாரத்துக்கான வாய்ப்பும் அடிப்படைகளை உருவாக்குதலும்! புதிய மின்னணு பொருளாதார முறையை பொறுத்தவரை தொழில்நுட்பத்திலும் உற்பத்தியிலும் இந்தியாவுக்குப் பெரிய குறிப்பிடும்படியான முக்கிய பாத்திரம் வகிக்க இடமில்லை. ஆனால் சந்தை என்ற அளவில் இது மிகப்பெரியது. ஆதலால் அமெரிக்க - சீன நிறுவனங்களுமே இந்த 130 கோடி மக்களை சந்தையைக் கைப்பற்ற போட்டியிட்டன. இதற்குள் செல்வதற்குமுன் இந்தப் பொருளாதாரத்துக்கு இந்தியாவில் உள்ள வாய்ப்பு என்ன என்று அறிந்துகொள்வது அவசியம். இந்தியாவில் மின்னணு பொருளாதாரத்துக்கான வாய்ப்பு: மற்ற வளர்ந்த … மின்னணு பொருளாதாரம்: இந்தியாவின் வரமா, சாபமா? 4-ஐ படிப்பதைத் தொடரவும்.
மின்னணு பொருளாதாரம்: இந்தியாவின் வரமா சாபமா? 3
போட்டியை ஊக்குவித்து எழுச்சி பெற்ற சீனா! அமெரிக்காவில் தோன்றிய தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி, பொருட்களை சந்தைபடுத்துவதிலும் விற்பனையிலும் ஒரு பாய்ச்சலை நிகழ்த்தி இந்த தொழில்நுட்பத்தைக் கைகொண்ட நிறுவனங்களை சிறு வணிகர்களை எல்லாம் ஒழித்துக்கட்டி முற்றுரிமை (Monopoly) கொண்ட பெருவணிக நிறுவனங்களாக (Wholesale) மாற்றியது. அது பொருட்களின் உற்பத்தி பெருக்கத்துக்கான முனைப்பைக் குறைத்து பொருட்களின் விலையை உயர்த்தி மக்களின் வாங்கும் ஆற்றலைக் குறைத்து சந்தை சுருக்கத்துக்கு காரணமானதையும் அந்தச் சிக்கலைத் தீர்க்க அந்நிறுவனங்கள் கார் முதல் காய்கறிகள் வரையான … மின்னணு பொருளாதாரம்: இந்தியாவின் வரமா சாபமா? 3-ஐ படிப்பதைத் தொடரவும்.
கலையும் இலக்கியமும்
கலையும் இலக்கியமும் யாருக்கானது? எனும் கேள்வி கலை, இலக்கியத்தைப் போலவே பழமை வாய்ந்தது. அதேநேரம் மிகக் குழப்பமாகவும், நீர்த்துப் போன தன்மையிலும், தெளிவாகச் சொன்னால் அந்தக் கேள்வியின் உட்கிடையை இல்லாமல் ஆக்குவதாகவே அந்தக் கேள்விக்கான பதில் வழங்கப்பட்டு வந்திருக்கிறது. என்றால் அந்தக் கேள்விக்கான சரியான, பொருத்தமான பதில் என்ன? இன்றைய சூழல் மிக மோசமானதாக இருக்கிறது. மக்கள் நிலையிலிருந்து கூட அல்ல, அவர்களே சொல்லிக் கொள்ளும் நடு நிலைமையிலிருந்து கூட அல்ல, அரசுக்கு ஆதரவான, வலதுசாரி நிலையிலிருந்து … கலையும் இலக்கியமும்-ஐ படிப்பதைத் தொடரவும்.
இந்திய சீனப் போர்
இந்தியாவும் சீனாவும் எல்லைகளில் படையை குவித்து வருவதாக செய்திகள் வந்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில் 1962ல் நடந்த இந்திய சீனப் போர் குறித்து அறிந்து கொள்வது தேவையாக இருக்கிறது. இன்று இரு நாடுகளிடையே இருக்கும் முறுகலான இந்த சூழலில் ஊடகங்களில் இரண்டு பக்க செய்திகளும் இடம்பெறுகிறதா என்றால் கேள்விக்குறிதான். அது மட்டுமல்ல, சீனா பக்க செய்தியை வெளியிட்டால் அது தேச விரோதமான செய்தியாக தேச விரோத ஊடகமாக பார்க்கப்படும் அளவுக்கு இங்கு சூழல் திட்டமிட்டு கெடுக்கப்பட்டிருக்கிறது. அமைச்சர்களின், … இந்திய சீனப் போர்-ஐ படிப்பதைத் தொடரவும்.
டெக்னிக்கல் பிழைகளின் சோதனை எலிகளா நாம்?
குறிப்பு 1 : சினிமாவில் அடிக்கடி நாம் பார்க்கும் விஷயம் facial recognizition. அதுவும் ஹாலிவுட்டுக்கே சவால் விடும் விவேகம் மாதிரியான டெக்னாலஜி த்ரில்லர் படங்களில் அதிகம் பார்த்திருப்போம். சிசிடிவி ஃபுட்டேஜில் ஒருவரின் முகத்தை ஃப்ரீஸ் செய்து, அதை கணினியில் இருக்கும் ஒட்டுமொத்த மக்களின் டேட்டாபேஸில் பொருத்திப் பார்ப்பார்கள். சில விநாடிகளில், இவர்தான் அவர் என கணிணி குற்றவாளியைக் கண்டுபிடித்துவிடும். இந்த முறையில் கடந்த 15 ஆண்டுகளாக உலகில் பல்வேறு நபர்களைக் கைது செய்து நீதியை நிலைநாட்டி … டெக்னிக்கல் பிழைகளின் சோதனை எலிகளா நாம்?-ஐ படிப்பதைத் தொடரவும்.
எல்லைச் சிக்கலின் முரண்பாடுகள்
சீனப் பொருட்களைப் புறக்கணிப்போம் என்று கூறிக் கொண்டு, பயன்பாடு தீர்ந்த அல்லது பயன்பாடு குறைந்த பொருட்களை ஒளிப்பதிவு கருவிகளின் முன் உடைத்துக் கொண்டிருக்கிறார்கள் சங்கிகள். அதாவது, அரசு சீனாவுக்கு எதிராக இருக்கிறது என்றும், சீனாவின் பொருளாதாரத்தை குலைக்கும் நடவடிக்கைகளில் இந்தியா இறங்கியிருக்கிறது என்றும் நாம் புரிந்து கொள்ள வேண்டுமாம். மெய்யாகவே, இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான எல்லைச் சிக்கலில், சீனாவுக்கு எதிரான நிலைப்பாட்டை இந்தியா கொண்டிருக்கிறது என்றால், இந்தியாவுக்கான சீனத் தூதரை அழைத்து கண்டிக்கலாம், சீனாவுக்கான இந்தியத் தூதரை … எல்லைச் சிக்கலின் முரண்பாடுகள்-ஐ படிப்பதைத் தொடரவும்.
இந்தியாவிடமிருந்து விலகிச் செல்கிறதா நேபாளம்?
நேபாளத்தின் அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம்செய்யும் முடிவில் இருக்கிறார் அந்நாட்டின் பிரதமர் கே.பி.ஷர்மா ஒலீ; இந்தத் திருத்தத்தின்படி, எல்லைத் தாவாவில் இருக்கும் இந்தியப் பகுதிகளையும் உள்ளடக்கும்படி நேபாளத்தின் அதிகாரபூர்வ வரைபடத்தில் மாற்றம் செய்யப்படவிருக்கிறது. இதனால், நேபாளத்தின் தெற்குப் பகுதியில் உள்ளவர்கள் பயந்தது மாதிரியே நடந்துவிடும்போல் இருக்கிறது. சில ஆண்டுகளாகவே ஒலீயின் தேசிய அரசியல் நேபாளத்தை இந்திய எதிர்ப்பு நிலைப்பாட்டுக்குத் தள்ளிவிடும் என்று அவர்கள் அச்சப்பட்டார்கள். லிம்பியதுரா, லிபுலேக், காலாபாணி ஆகிய பகுதிகளை மீட்பதற்கான அறைகூவலாகட்டும், சீனாவிலிருந்து வந்த வைரஸைவிட … இந்தியாவிடமிருந்து விலகிச் செல்கிறதா நேபாளம்?-ஐ படிப்பதைத் தொடரவும்.