தேசியக்கொடியில் புரளும் மலந்தின்னிகள்

1947 ஆகஸ்ட் 15ல் கிடைத்தது விடுதலை அல்ல, அதுவொரு ஆட்சி மாற்றமே என்று கம்யூனிஸ்டுகள் தொடக்கத்திலிருந்தே சொல்லி வருகிறார்கள். அரசியல், பொருளாதாரம், சமூகம் ஆகிய அனைத்திலுமே ஒரு சிறு கூட்டத்துக்கு மட்டுமே விடுதலை கிடைத்துள்ளது, ஏனைய எவருக்கும் இல்லை. இது தான் கடந்த 75 ஆண்டு கால வரலாறு. ஆனால் இந்த நாளின் மீது மிகைப்படுத்தப்பட்ட புனிதத்தை ஏற்றி வைத்திருப்பதால் அனைவரையும் உள்ளடக்க முடிகிறது. அதில் ஒன்று தான் தேசியக் கொடி. அது நாட்டைக் குறிக்கும் கொடி … தேசியக்கொடியில் புரளும் மலந்தின்னிகள்-ஐ படிப்பதைத் தொடரவும்.

நாங்கள் கேட்கும் விடுதலை என்ன?

நாங்கள் கேட்கும் விடுதலை என்ன?- தந்தை பெரியார் "100க்கு 97 பேராயுள்ள மக்களைக் கீழ் ஜாதி என்று கூறி அடக்கி ஒடுக்கி வைத்திருக்கும் கட்டிலிருந்து விடுதலை பெறவேண்டும் என்பதுதான் நமது சமதர்மக் கொள்கையும் முதல் விடுதலையுமாகும். நம் நாட்டில் தங்கம், செம்பு, பித்தளை, துணி முதலிய வியாபாரங்களிலும் வட்டிக்கடையிலும் வியாபாரத்தின் எல்லாத் துறைகளிலும் மார்வாரி, குஜராத்திகள், பனியாக்கள் இவர்கள் ஆதிக்கம் செலுத்திக் கொள்ளை லாபம் பெற்று நம்நாட்டுப் பணத்தை சுரண்டிக் கொண்டு போகிறார்களா இல்லையா? இதைத்தானே வெள்ளையன் … நாங்கள் கேட்கும் விடுதலை என்ன?-ஐ படிப்பதைத் தொடரவும்.

கொடியேற்று, கொண்டாடு. குடியரசு தினம்

நாளை 61 வது குடியரசு தினமாம். பாதுகாப்பு ஏற்பாடுகள், பய பீதிகள் என கடந்த வாரம் முதலே பரபரப்பு காட்டப்படுகிறது. ஒரு கொண்டாட்ட மனோநிலைக்கு மக்கள் ஆயத்தப்படுத்தப்படுகிறார்கள். கொண்டாட்டங்களை நுகர்வைக்கொண்டே அள‌க்கமுடியும் என்பதால் வர்த்தக நிறுவனங்கள் தங்கள் விழாக்கால தள்ளுபடியை குடியரசு தினத்திற்கும் நீட்டுகின்றன. தொலைக்காட்சி நிறுவனங்கள் 'தேசபக்த' நடிகைகளை "வந்தே மாட்றோம்" என்று கூறவைத்து நம்மை கொண்டாட தூண்டுகின்றன. இதையே இன்னும் விரிவான அளவில் யாராவது வெளிநாட்டு தலைவர்களை அழைத்துவந்து இராணுவ தளவாடங்களை ஓடவிட்டுக் காட்டி … கொடியேற்று, கொண்டாடு. குடியரசு தினம்-ஐ படிப்பதைத் தொடரவும்.

சுதந்திரம் என்றொரு கற்பிதம்

இன்று 64 ஆம் சுதந்திர தினமாம். உள்ளீடற்று சடங்காய் பின்பற்றப்படும் பண்டிகை போல் ஆண்டுதோறும் ஆகஸ்டு 15 வந்துவிட்டால் சுதந்திரமும் நினைவுக்கு வந்துவிடுகிறது. சில நாட்களுக்கு முன்பிருந்தே ஊடகங்கள் கொண்டாட்டங்கள் பற்றியும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றியும் நீட்டி முழக்கி வருகின்றன. சென்னையை மட்டும் 5000 காவலர்கள் பாதுகாக்கப் போகிறார்களாம். கண்காணிப்பு கேமராக்கள் ஆயுதப் படை உள்ளிட்ட கெடுபிடிகளுக்கு மத்தியில் கொண்டாடப்படப்போகும் விழாவின் பெயர் சுதந்திர தின விழா. முரண்தொடைக்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு இது. சுதந்திரம் என்றால் என்ன? … சுதந்திரம் என்றொரு கற்பிதம்-ஐ படிப்பதைத் தொடரவும்.