எகானமிக் அண்ட் பொலிடிகல் வீக்லி எனும் ஆங்கில இதழ் தன்னுடைய இணைய தளத்தில் தற்போது தமிழிலும் கட்டுரைகளை மொழிபெயர்த்துத் தருகிறது. மார்க்சிய சொல்லாடல்களை தாங்கி ஏராளமான கட்டுரைகளைத் தந்திருக்கிறது என்றாலும், இது மார்க்சிய இதழல்ல. இந்தக் கட்டுரையில் மேற்கோள் காட்டப்பட்டிருக்கும் ஆய்வுரையும், அதன் புள்ளி விவரங்களும் முதலாளித்துவ விழுமியங்களை தாங்கிக் கொண்டிருப்பவை தான். அந்த ஆய்வுரையை எழுதியவர்களுக்கும், அதை கட்டுரையாக எழுதிய இ.பி.டபிள்யு இதழுக்கும் ஏதேனும் உள்நோக்கம் இருந்திருக்கக் கூடும். இவை எல்லாவற்றையும் மீறி இந்தக் … வெள்ளையர்களிடமிருந்து கொள்ளையர்களுக்கு-ஐ படிப்பதைத் தொடரவும்.
குறிச்சொல்: சுரண்டல்
ரொக்கமற்ற பொருளாதாரம் எதற்காக கொண்டு வரப்படுகிறது?
உயர் மதிப்பு கொண்ட ரூபாய்த் தாள்கள் மதிப்பிழந்தவைகளாக அறிவித்து நாற்பது நாட்களைக் கடந்து விட்டது. கருப்புப் பணம் என்றார்கள், கள்ளப்பணம் என்றார்கள், ஊழலை ஒழிக்க என்றார்கள் சல்லடையில் அள்ளிய தண்ணீர் போல் எதுவும் நிற்கவில்லை மக்களிடம். கடைசியில் நிதியமைச்சரின் வாயிலிருந்தே பூனைக்குட்டி வெளியே வந்தது, கேஷ்லெஸ் எகானமி தான் எங்கள் நோக்கம் என்று. அதாவது கருப்புப் பணத்தை, கள்ளப்பணத்தை ஒழிப்பதெல்லாம் எங்கள் நோக்கமல்ல நாட்டில் ரொக்கமற்ற பொருளாதாரத்தை கொண்டு வருவதே எங்கள் நோக்கம் என்கிறார்கள். கடந்த நாற்பது … ரொக்கமற்ற பொருளாதாரம் எதற்காக கொண்டு வரப்படுகிறது?-ஐ படிப்பதைத் தொடரவும்.
அடிமை – பண்ணையடிமை வேறுபாடு என்ன?
தோழர் செங்கொடி, ஆண்டான் - அடிமை சமூகத்திற்கும் நிலப்பிரபுத்துவ சமூகத்திற்கும் இடையிலான வேறுபாடுகள் என்ன? அதைப்பற்றி விளக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். திரு பிரசன்னா கேள்வி பதில் பகுதியிலிருந்து சமூக மாற்றம் என்பது அடிப்படையில் உற்பத்தி முறை மாறியதன் விளைவாக ஏற்படும் உற்பத்தி சக்திகளின் உறவு மாற்றத்தைக் குறிக்கும். ஆண்டான் அடிமை சமூகத்துக்கும், நிலப்பிரபுத்துவ சமூகத்துக்கும் இடையிலான வேறுபாடுகள் என்றால் அதன் பொருள் அடிமை உற்பத்திமுறையில் இருந்த மக்களின் உறவுநிலைக்கும், நிலப்பிரபுத்துவ உற்பத்தி முறையில் இருந்த மக்களின் உறவு நிலைக்கும் இடையிலான … அடிமை – பண்ணையடிமை வேறுபாடு என்ன?-ஐ படிப்பதைத் தொடரவும்.
கம்யூனிசமே வெல்லும்
கம்யூனிசம் என்றால் என்ன? நாட்டில் இருக்கும் பல ஓட்டுக்கட்சிகளை போல அதுவும் ஒரு ஓட்டுக்கட்சி. உலகில் இருக்கும் பல கொள்கைகளை போல அதுவும் ஒரு கொள்கை. பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு உலகியல் பார்வை. முதலாளித்துவத்திற்கு எதிரான கூட்டு நடவடிக்கை. இப்படி பலவாறான மதிப்பீடுகள் கம்யூனிசத்தைப் பற்றி மக்களிடம் இருக்கிறது. ஆனால் கம்யூனிசம் என்பது ஒரு இயல்பு. மனிதர்களின் இயல்பான ஒரு உணர்வு. சாலையில் நடந்து செல்லும் ஒருவர் அங்கு ஒருவன் மற்றொருவனை அடித்து உதைத்துக்கொண்டிருப்பதை கண்டால், … கம்யூனிசமே வெல்லும்-ஐ படிப்பதைத் தொடரவும்.