செம்மொழி மாநாட்டின் ஆரவாரத்தில் அடங்கிப் போனது தமிழ்

எங்கும் செம்மொழி, எதிலும் செம்மொழி. மன்னிக்கவும், எங்கும் செம்மொழி மாநாடு, எதிலும் செம்மொழி மாநாடு. அனைத்து வகை ஊடகங்களும் அரசின் கவனிப்பில் (அல்லது கண்காணிப்பில்) திக்குமுக்காடிப் போய் செம்மொழி மாநாடு என்றே தீர்க்கின்றன. திருவிழாக்கூட்டம் போல் கோவை நிறைந்திருக்கிறது. பல்நாட்டு அறிஞர்கள் ஆய்வேடுகள் சாற்றுகிறார்கள். கலைச்சொற்கள் காற்றில் பரவுகின்றன. அக்கால மன்னர்கள் பரிசில் வழங்கியது போல், அறிஞர்கள் பட்டமும் விருதும் பெறுகிறார்கள். மக்கள் அரங்க அமைப்பையும், ஆரவாரத்தையும் கண்டு பேருவகை அடைகிறார்கள். ஆனால் தமிழ்? ஆய்வேடுகள் ஒப்பிக்கப்பட்டு … செம்மொழி மாநாட்டின் ஆரவாரத்தில் அடங்கிப் போனது தமிழ்-ஐ படிப்பதைத் தொடரவும்.

வழக்குறைஞர்கள் பட்டினிப் போராட்டம்: தமிழ் வாழ்க, தமிழர் மடிக

பத்தாவது நாளாக தொடர்ந்துகொண்டிருக்கிறது வழக்குறைஞர்களின் பட்டினிப் போராட்டம். நீதிமன்றங்களில் வழக்கு மொழியாகவும், அலுவல் மொழியாகவும் தமிழையும் அங்கீகரிக்கவேண்டும் எனும் கோரிக்கையுடன் மதுரையில் தொடங்கிய இந்த பட்டினிப் போர் சென்னை, புதுவை, கோவை, புதுக்கோட்டை என விரிவடைந்து கொண்டிருக்கிறது. பல்வேறு அமைப்புகளும், மக்களும் ஆதரவளித்து வருகிறார்கள். தமிழ் மொழி பேசும் மக்கள் வாழும் மாநிலத்தில் தமிழ் மொழியையும் வழக்கு மொழியாக செயல்படுத்துங்கள் என போராடும் நிலை என்பது முரண்பாடான ஒன்றாய் தோன்றலாம், ஆனால் இந்த முரண்பாடு மொழியோடு மட்டும் … வழக்குறைஞர்கள் பட்டினிப் போராட்டம்: தமிழ் வாழ்க, தமிழர் மடிக-ஐ படிப்பதைத் தொடரவும்.