வீடு மாற்றும் சடங்கு

சடங்கு எனும் சொல்லுக்கும் வழமை எனும் சொல்லுக்கும் இடையில் பொருள் மாறுபாடு உண்டு. இயல்பாக ஒரு செயலை மீண்டும் மீண்டும் செயல்படுத்த நேர்வதை வழமை என்று குறிப்பிடுகிறோம். சடங்கு எனும் போது அதில் ஒரு திணிப்பு ஏற்றப்படுகிறது. மதம் அல்லது வேறு ஏதோ ஒரு நம்பிக்கை சார்ந்த கட்டாயத்தினால் திரும்பத் திரும்ப செயல்படுத்த நேர்வதை சடங்கு எனக் குறிப்பிடலாம். ஆனால், கருத்து முதல் வாதம் சார்ந்த சடங்குகளில் இருக்கும் ஈர்ப்பு, வேறு வகைகளினால் ஏற்படும் சடங்குகளில் இருப்பதில்லை. … வீடு மாற்றும் சடங்கு-ஐ படிப்பதைத் தொடரவும்.

குடும்பம் 6

குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகிவற்றின் தோற்றம் – பகுதி 11 4. ஒருதார மணக் குடும்பம். அநாகரிக நிலையின் இடைக் கட்டம் தலைக்கட்டத்துக்கு மாறிச் செல்லும் காலப் பகுதியில் இணைக் குடும்பத்திலிருந்து இது தோன்றுகிறது என்பதை ஏற்கெனவே சுட்டிக் காட்டினோம். அதன் இறுதி வெற்றி நாகரிகம் தொடங்குவதற்குரிய அடையாளக் குறிகளில் ஒன்று. அது ஆணின் மேலாதிக்கத்தை அடிப்படையாக்க் கொண்டது. அதன் தெளிவான நோக்கம் விவாதத்திற்கு இடமில்லாத தந்தைமுறையுள்ள குழந்தைகளைப் பெறுவதுதான். இக்குழந்தைகள் உரிய காலத்தில் தமது தகப்பனாரின் இயற்கையான … குடும்பம் 6-ஐ படிப்பதைத் தொடரவும்.

500, 1000 செல்லாது: மோடியை கழுவி ஊற்றிய மக்கள்

நேற்று (08/11/2016) மாலையில் திடீரென 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மோடியால் அறிவிக்கப்பட்டது. இரவு 12 மணிக்குள் மாற்றாவிட்டால் வைத்திருக்கும் பணம் ஒன்றுமில்லாமல் காற்றில் கரைந்து விடுமோ எனும் பரிதவிப்பில் மக்கள் அலைந்ததை பார்க்கையில் கண்களில் கண்ணீர் வந்து விட்டது. தமிழில் இதுவரை செவியுற்றிருக்காத சொற்களை உருவாக்கி மக்கள் மோடியை அர்ச்சித்துக் கொண்டிருந்தார்கள். மக்களே! பதட்டம் வேண்டாம். ஓரிரு நாட்களில் வங்கிகள் இயங்க தொடங்கியதும் உங்கள் கையிலிருக்கும் பழைய 500, 1000 ரூபாய் தாள்களை … 500, 1000 செல்லாது: மோடியை கழுவி ஊற்றிய மக்கள்-ஐ படிப்பதைத் தொடரவும்.

அல்லாவின் சட்டங்கள் எக்காலத்துக்கும் பொருத்தமானவைகளா? 3. சொத்துரிமை சட்டம்

சொத்துரிமை எனும் சொல்லுக்கு பொருள் தெரியாதவர்கள் பெரும்பாலும் இருப்பதற்கு வாய்ப்பில்லை. தனியுடமையின் பொருளை உணர்த்துவதற்கு உதவும் மிகத் துல்லியமான சொல் சொத்துரிமை. தான் அனுபவிக்கும் உடமையின் வசதிகளை தனக்குப் பின் தன்னுடைய வாரிசுகளுக்கு கடத்துவது தான் சொத்துரிமை. ஆனால் வாரிசு என்பது யார்? எந்த அடிப்படையில் அவர்களுக்கு கடத்துவது என்பதற்கு உலகின் ஒவ்வொரு சமுதாயத்துக்கும் மரபு சார்ந்து வெவ்வேறு வழிமுறைகள் இருக்கின்றன. அவர்கள் கொண்டிருக்கும் நம்பிக்கை தொடங்கி வாழ்ந்து கொண்டிருக்கும் கலாச்சார விழுமியங்கள் வரை அனைத்தும் சேர்ந்தே … அல்லாவின் சட்டங்கள் எக்காலத்துக்கும் பொருத்தமானவைகளா? 3. சொத்துரிமை சட்டம்-ஐ படிப்பதைத் தொடரவும்.

யார் சொத்துக்கு யார் சண்டை போடுவது?

மதுரை ஆதீனத்தின் அடுத்த மடாதிபதியாக “ரஞ்சிதா” புகழ் நித்யானந்தா நியமிக்கப்பட்டதிலிருந்து ஆகமங்களின்படி விதிகளின்படி நியமிக்கப்பட்டது சரியா? தவறா? என்றொரு விவாதம் சூடாக நடந்து கொண்டிருக்கிறது. நித்தி நியமிக்கப்பட்டதில் எந்த விதி மீறல்களும் இல்லை என்று மதுரை மூத்த ஆதீனம் அருணகிரிநாத ஞானசம்பந்த தேசிகர் கூறுகிறார். சொத்துகளை அபகரிப்பதற்காகவே இந்த நியமனம் நடந்திருக்கிறது, நித்தியின் கட்டுப்பாட்டில் ஆதீனம் இருக்கிறார் என்று இந்து அமைப்புகள் கூறுகின்றன. இதற்கிடையே பிடதி சொத்துக்களை விட்டுவிட்டு வரத் தயார். ஏனைய ஆதீனங்கள் விட்டுவிட்டு வரத்தயாரா? … யார் சொத்துக்கு யார் சண்டை போடுவது?-ஐ படிப்பதைத் தொடரவும்.

அல்லாவின் பார்வையில் பெண்கள் 2. சொத்துரிமை

இஸ்லாம் ஆண் பெண் சமத்துவத்தை போதிக்கிறது என்பவர்கள் அதற்கு ஆதாரமாக கூறுவது பெண்களுக்கும் சொத்துரிமை வழங்கப்பட்டுள்ளது என்பது தான். பொதுவாக மனிதனின் தொடக்க காலத்திலிருந்து இன்றுவரை பெண்களுக்கு சொத்துரிமை என்பது முழுமையான அளவில் இல்லை. இன்று பல நாடுகள் சட்டரீதியாக பெண்களுக்கு சொத்துரிமையை ஏற்படுத்தியிருக்கின்றன. என்றாலும், நடைமுறையில் ஆணாதிக்க உலகம் பெண்களுக்கான சொத்துரிமையை அதன் முழுமையான பொருளில் அங்கீகரிக்கவில்லை என்பதே மெய். சமூகத்தை பெண் தலைமை தாங்கி வழி நடத்திய போதும் அவளுக்கு தனித்த சொத்துரிமை ஒன்றுமில்லை. … அல்லாவின் பார்வையில் பெண்கள் 2. சொத்துரிமை-ஐ படிப்பதைத் தொடரவும்.

இவர்களின் சொத்துப் பட்டியல்களின் பின்னே சொத்தையாகிப் போன மக்கள்

அண்மையில் பிரதமரே வியந்து போனார் எனும் அடைமொழியோடு கருணாநிதியின் ஒட்டுமொத்த குடும்ப சொத்துப் பட்டியல் என்று ஒன்று வெளியாகி உலாவந்து கொண்டிருக்கிறது. இந்தியர்கள் வெளிநாட்டு வங்கிகளில் வைத்திருக்கும் கருப்புப் பண பட்டியல் என்று அசாஞ்சே ஒரு பட்டியல் வெளியிட்டிருக்கிறார். பட்டியல்கள் வெளிவந்து கொண்டே இருக்கின்றன. ஆனால் அதிலிருந்து பெற வேண்டிய படிப்பினைகள் ....... ?   உழைத்த களைப்பும் வெளியேறிய வியர்வையும் ஒரு தேநீர் வேண்டும் என்று தொண்டையில் போராட்டம் நடத்த அனிச்சைச் செயலாய் சட்டைப்பையை தடவிப்பார்த்துவிட்டு … இவர்களின் சொத்துப் பட்டியல்களின் பின்னே சொத்தையாகிப் போன மக்கள்-ஐ படிப்பதைத் தொடரவும்.