கலீபாக்கள் ஆட்சி .. .. .. (!)

எது சைத்தானின் படை? பகுதி 3 எது சைத்தானின் படை? எனும் தொடரின் மூன்றாம் பகுதியான இது, ரஷாதிய கலீபாக்களின் ஆட்சி குறித்த விளக்கங்களைக் கொண்டிருக்கிறது. ‘தாவா ஃபார் முஸ்லீம்ஸ்’ன் அந்த காணொளியில் ரஷாதிய கலீபாக்களின் ஆட்சியில் இஸ்லாமிய சட்டதிட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு மக்கள் நல்வாழ்வு வாழ்ந்தனர் எனும் பொருளில் கூறப்பட்டிருந்தது. அதாவது, கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியில் அமர்ந்த பிறகும் கம்யூனிசத்தை நடைமுறைப் படுத்த முடியவில்லை. ஆனால் இஸ்லாமிய ஆட்சி அமைந்ததும் முகம்மது நபியும் ரஷாதிய கலீபாக்களும் தங்கள் … கலீபாக்கள் ஆட்சி .. .. .. (!)-ஐ படிப்பதைத் தொடரவும்.

இதிலிருந்து படிப்பினை பெறலாமா?

எது சைத்தானின் படை? பகுதி 2 ‘தாவா ஃபார் முஸ்லீம்ஸ்’ எனும் இஸ்லாமிய பரப்புரை வலையொளி கம்யூனிஸத்தையும் இஸ்லாத்தையும் ஒப்பிட்டு பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தது. மட்டுமல்லாமல், அதில் இஸ்லாம் தான் உயர்ந்தது என கூறப்பட்டிருந்தது என்பதையும் பார்த்தோம். அதற்கு மறுப்பாக கடந்த பதிவு வெளியிடப்பட்டிருந்தது. அதன் தொடர்ச்சியாக இரண்டாவது பதிவான இதில், “உழைக்காதவர்கள் உண்ணத் தகுதியில்லாதவர்கள் என்றால், உழைக்க இயலாதவர்கள் என்ன செய்வார்கள்?” என்று அவர்கள் எழுப்பிய கேள்விக்கான பதில் குறித்து விரிவாக பார்க்கலாம். மேலோட்டமாக பார்த்தால் … இதிலிருந்து படிப்பினை பெறலாமா?-ஐ படிப்பதைத் தொடரவும்.

எது சைத்தானின் படை? 1

கம்யூனிசமும் இஸ்லாமும் ஓர் ஒப்பீடு செங்கொடி வலையொளி தொடங்கிய பின்னர் நண்பர் ஒருவர் ஒரு யூடியூப் வலையொளிப் பதிவு ஒன்றை சுட்டிக் காட்டினார். அது ஒரு மத பரப்புரை வலையொளி. இஸ்லாமிய மத பரப்புரை பதிவுகள் பலநூறு வெளிவந்து கொண்டிருக்கின்றன. என்றாலும், இது வெறுமனே பரப்புரையை மட்டும் செய்யாமல், கம்யூனிசத்தையும் இஸ்லாத்தையும் ஒப்பு நோக்குகிறது. இஸ்லாம் எனும் மதத்துக்கு எதிராக பல தலைப்புகளில் செங்கொடியில் விவாதங்கள் நடந்துள்ளன. மட்டுமல்லாமல், ‘உணர்வு’ இதழில் இஸ்லாத்தை நோக்கி வா தோழா … எது சைத்தானின் படை? 1-ஐ படிப்பதைத் தொடரவும்.

மார்க்ஸின்றி அமையாது உலகு

தெளிவான விஞ்ஞானபூர்வமான பொருள் புரிதலின்றிச் சமூக நீதி குறித்து மொந்தையாகப் பொதுப்பட பேசுவது என்பது இன்றைக்கு ஒரு நாகரீகமாகிவிட்டது.  சமூகச் சமத்தன்மை மற்றும் சமூக நீதி என்பது எப்போதும் மனிதர்களின் பெருமுயற்சியின் விளைவாக இருக்கிறது. தாங்கள் படும் துன்பங்களுக்குத் தீர்வு காண மனிதர்கள் உலகியல் வழியில் போராடவும் வானத்துத் தேவர்களிடம் வேண்டவும் செய்கிறார்கள். சமூக வரலாறு நெடுக அநீதிகளும், சமத்துவமின்மையும் பெரிதும் காணப்படுகின்றன. இன்று முரண்பாடுகள் முற்றி நிலைமையை மோசமாக்க, குறிப்பாக நமது தேசத்தில், சமூக நீதி … மார்க்ஸின்றி அமையாது உலகு-ஐ படிப்பதைத் தொடரவும்.

மக்களியம்

உலகம் முழுவதிலும் உள்ள மக்களை கொரோனா எனும் நுண்ணுயிரி கடும் நெருக்கடிக்குள் தள்ளி இருக்கிறது. முன் காலங்களிலும் பலமுறை இது போல கொள்ளை நோய் உருவாகி மக்களை வதைத்திருக்கிறது. ஆனாலும், கொரோனா போல முன் எப்போதும் அரசே மக்களை முடக்கும் நடவடிக்கைகள் எடுத்ததில்லை. கொரோனா அச்சம் அந்த அளவுக்கு மக்களின் மனதை ஆட்கொண்டிருக்கிறது அல்லது, ஆட்கொள்ள வைக்கப்பட்டிருக்கிறது. இந்த தொற்று நோயினால் பத்து லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இரண்டு லட்சம் பேர் மரணமடைந்திருக்கிறார்கள். இது இந்த நோயினால் … மக்களியம்-ஐ படிப்பதைத் தொடரவும்.

மார்க்சியம் மட்டுமே தீர்வு

இன்று நவம்பர் ஏழு. உலகப் பாட்டாளி வர்க்கத்தின் மிகவும் மதிப்பு வாய்ந்த நாள் இன்று. அரசு தோற்றம் கொண்ட காலத்திலிருந்து உழைக்கும் வர்க்கம் சுவைத்தறியாத நிர்வாக அதிகாரத்தை சமைத்தறிந்த நாள். மனிதன் உருவாகி வந்த தொடக்கத்திலிருந்து சாதாரண மக்கள் பாவித்திராத வசதிகளையும் வாய்ப்புகளையும் அவர்களுக்கு உருவாக்கித் தந்த நாள். 102 ஆண்டுகளுக்கு முந்திய அந்த நாளின் தனித் தன்மை இன்றும் மக்களின் உயிரோடு கலந்திருக்கிறது. மீண்டும் அந்த நாள் வாராதா? எனும் ஏக்கத்தை மக்களின் மனதில் ஏற்றிக் … மார்க்சியம் மட்டுமே தீர்வு-ஐ படிப்பதைத் தொடரவும்.

உழைக்கும் மக்களின் வெற்றியைச் சாதிப்போம்!

தோழர்கள் நண்பர்கள் அனைவருக்கும் நவம்பர் புரட்சி தின வாழ்த்துக்கள். இந்தியாவிலும் அப்படியான புரட்சியைக் கட்டியமைக்க நாம அனைவரும் செங்கற்களாவோம்.   https://youtu.be/jtis45ReK5k    

மார்ச் 8 நம்மை போராடச் சொல்கிறது

  உலகம் முழுவதும் மார்ச் 8 ம் நாள் உழைக்கும் பெண்கள் தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. ஆண்டு முழுவதிலும் இது போல் பல நாட்கள் பல்வேறு சிறப்புகளாக கூறப்பட்டு, கொண்டாடப்பட்டு வருகின்றன. அவற்றில் ஒரு நாளாக கடந்து போக முடியாத நாள் இது. இன்றில் கொண்டாடப்படுவது போல் கோலப் போட்டியாகவோ, பூனை நடை அழகிப் போட்டியாகவோ, சமையல் போட்டியாகவோ, பெண்களுக்கு மட்டும் என்று அரங்குக்குள் ஆட்டம், பாட்டு என கேளிக்கை கொண்டாட்டமாகவோ முடித்துவிட முடியாத, முடித்து விடக் … மார்ச் 8 நம்மை போராடச் சொல்கிறது-ஐ படிப்பதைத் தொடரவும்.

இந்தியாவிற்குத் தேவை புரட்சி – தோழர் மருதையன் உரை

  “கார்ல் மார்க்சின் மூலதனம் நூல் – 150 வது ஆண்டு ! ரசியப் புரட்சி – 100 வது ஆண்டு !!” சிறப்புக் கூட்டம் சென்னை ஒய்.எம்.சி.ஏ. நந்தனம் அரங்கில் நவம்பர் 19, 2017 அன்று நடைபெற்றது. அக்கூட்டத்தில் மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் தோழர் மருதையன்சிறப்புரையாற்றினார். அவர் தனது உரையில் “இந்த வருடம் மார்க்சின் மூலதனம் நூலின் 150 -வது ஆண்டு மற்றும் நவம்பர் புரட்சியின் நூற்றாண்டு மட்டுமல்ல சீனத்தின் கலாச்சாரப் புரட்சிக்கும், … இந்தியாவிற்குத் தேவை புரட்சி – தோழர் மருதையன் உரை-ஐ படிப்பதைத் தொடரவும்.

ஏன் சோசலிசம்? – ஐன்ஸ்டீன்

  உலகப் புகழ்பெற்ற இயற்பியலாளரான ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் எழுதிய இந்தக் கட்டுரை, அமெரிக்காவின் ‘மன்த்லி ரிவியூ’ என்ற பத்திரிக்கையின் முதல் இதழில் (மே 1949) வெளியிடப்பட்டது. பொருளாதார சமூக பிரச்சனைகளில் நிபுணராக இல்லாத ஒருவர் சோசலிசம் குறித்து தனது கருத்துகளை வெளியிடுவது சரி தானா? பல காரணங்களுக்காக அது சரி தான்  என்று நான் கருதுகிறேன். முதலில், அறிவியல் கண்னோட்டத்தில் இந்தக் கேள்வியைப் பரிசீலிக்கலாம். முதல் பார்வையில் வானவியலுக்கும்  பொருளாதாரவியலுக்கும் அடிப்படையில் முறையியல் வேறுபாடுகள் இல்லாதது போலத் … ஏன் சோசலிசம்? – ஐன்ஸ்டீன்-ஐ படிப்பதைத் தொடரவும்.