பார்ப்பனிய பயங்கரம் எல்லா இடங்களிலும் புகுந்து தன் பொய்களை கடைவிரித்துக் கொண்டிருக்கிறது. காடாத்துணியில் வடிகட்டிய பொய்களே ஆர்.எஸ்.எஸ்ஸின் மூலதனம் என்பது எல்லோரும் அறிந்தது தான். ஆனாலும் தொடர்ந்து கொண்டே இருக்கிறார்கள். அண்மையில் வந்த பகிரி (வாட்ஸ்ஆப்) செய்தி ஒன்று, அய்யன்காளி சனாதனம் தழைத்தோங்க பாடுபட்டவர் என்று குறிப்பிடுகிறது. வரலாற்றை புரட்டுவதிலும் திரிப்பதிலும் ‘சங்கிகள்’ முனைவர் பட்டம் பெற்றவர்கள் தான் என்றாலும், சாதிப்படிநிலைக் கொடுமைகளுக்கு எதிராக போராடிய அய்யன்காளியை அதற்கு நேர்மாறாக சனாதனத்துக்காக பாடுபட்டவர் என்று கூறுவதற்கு எவ்வளவு … மகாத்மா அய்யன்காளி-ஐ படிப்பதைத் தொடரவும்.
குறிச்சொல்: ஜாதி
‘நீட்’டா .. ? ‘தீட்’டா .. ?
செய்தி: எம்.பி.பி.எஸ்., பி.டி. எஸ். ஆகிய மருத்துவ படிப்புகளில் மாணவர்களை சேர்ப்பதற் கான 'நீட்' எனப்படும் தேசிய தகுதி நுழைவுத் தேர்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. நீட் தேர்வு அச்சம் காரணமாக மதுரை மாணவி ஜோதி துர்கா, தருமபுரி மாணவர் ஆதித்யா ஆகிய மாணவர்கள் தற்கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், மற்றொரு மாணவர் தற்கொலை செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு மலை சுற்றி ரோடு இடையன் பரப்பு பகுதியை சேர்ந்த எலக்ட்ரிக் … ‘நீட்’டா .. ? ‘தீட்’டா .. ?-ஐ படிப்பதைத் தொடரவும்.
அடிமைப்படுத்தும் குலதெய்வங்கள்
சாதி தீண்டாமைக் கொடுமைகள் ஒழித்துக் கட்டப்பட வேண்டும் என்பது நீண்ட நெடுங் காலமாக மக்களின் தேவையாக இருந்து கொண்டிருக்கிறது. பார்ப்பனியக் கொடுமைகளுக்கு எதிராக புத்தர் தொடங்கி பூலே, அம்பேத்கர், பெரியார் வரை நெடிய போராட்ட வரலாறும் இருக்கிறது. சம காலத்தில் புதிய போக்குகளும் கிளம்பி இருக்கின்றன. பார்ப்பனிய பெருந் தெய்வ புராணக் கதைகளை வரலாறாக மாற்றுருவாக்கம் செய்து நிருவுவது ஒருபக்கம் என்றால், மறுபக்கம் பார்ப்பனிய பெருந் தெய்வங்களுக்கு எதிராக கிராமத்து குலதெய்வ வழிபாட்டை மீட்டுருவாக்கம் செய்து நிருவுவதும் … அடிமைப்படுத்தும் குலதெய்வங்கள்-ஐ படிப்பதைத் தொடரவும்.
நான் இந்து அல்ல, நீங்கள்..?
கொரோனாவின் கோரம் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருக்கும் இந்த நேரத்திலும் காவி பாசிசங்களும் அவர்களின் காலாட்படையான சங்கிகளும் தங்களின் வன்மத்தை கைவிடவில்லை, கைவிட மாட்டார்கள் என்பதை தப்லீக் மாநாடு விதயத்தில் பார்த்தோம். வரலாறு நெடுகிலும் அவர்களின் நோக்கம் திட்டம் எல்லாம், சாதியக் கொடுங்கோன்மையை மீண்டும் பழைய விதத்தில் அட்டியின்றி நடப்புக்கு கொண்டு வர வேண்டும் என்பது மட்டும் தான். இந்து என்றொரு மதமே இல்லை என்பதும், பார்ப்பன மதத்தின் மீது போர்த்தப்பட்டிருக்கும் போர்வை தான் அது என்பதும் … நான் இந்து அல்ல, நீங்கள்..?-ஐ படிப்பதைத் தொடரவும்.
ஜாதி மத ஒழிப்பில் முதல் எட்டு வைக்க விருப்பமா?
கண்களில் பொறி பறப்பதை வெறுங்கண்ணால் காண முடிகிற அளவுக்கு ஜாதி வெறி பிடித்து அலையும் மிருகங்களுக்கு மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். பெற்ற மகளையே எந்த சஞ்சலமும் இல்லாமல் ஒரு ஆட்டுக் குட்டியை அறுக்கும் நிதானத்துடன் அறுத்து வீசி விட்டு அதற்கு கௌரவக் கொலை என்று பெயர் சூட்டும் வன்மங்களுக்கு மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இதை ‘வன்மையாக கண்டிக்கும்’ யாரும் தன் சுய ஜாதி அபிமானத்தை விட்டொழிக்க தயாராக இருக்கிறார்களா? என்பது முக்கியமானது. சுயஜாதி அபிமானத்தை பேணி பாதுகாத்துக் … ஜாதி மத ஒழிப்பில் முதல் எட்டு வைக்க விருப்பமா?-ஐ படிப்பதைத் தொடரவும்.
மீண்டும் படரும் சாதீய நெருப்பு
மருது சகோதரர்கள், சுந்தரலிங்கம், வ,உ.சிதம்பரம் உள்ளிட்ட சுதந்திரப் போராட்ட வீரர்கள் முதல் திருமலை நாயக்கர் போன்ற குறுநில மன்னர்கள், பாளையக்காரர்கள் ஈறாக வரலாற்றில் தெரிந்த தெரியாத, அறிந்த அறியாத அனைவரும் தத்தம் சாதி அடையாளங்களோடு சிரித்துக் கொண்டிருக்கிறார்கள் சுவரொட்டிகளில். தங்கள் பெயரின் பின்னே பட்டங்களைப் போல் பெருமையுடன் போட்டுக் கொள்ளும் நிலை பெரியாரின் வீச்சுகளின் பின்னே மறைந்திருந்தது. ஆனால் அந்தப் பெருமை(!) தற்போது மீண்டு வந்து கொண்டிருக்கிறது. உலகமயக் கொள்கைகளின் விளைவுகளால் ஓட்டுக் கட்சிகள் சாயமிழக்க சாயமிழக்க … மீண்டும் படரும் சாதீய நெருப்பு-ஐ படிப்பதைத் தொடரவும்.
மதம் ஜாதியைக் கடந்த மக்களாய் நம் குழந்தைகள்
அன்பார்ந்த உழைக்கும் மக்களே! கோடை விடுமுறை கடந்து பள்ளிகள் மீண்டும் திறக்கும் காலம் வந்துவிட்டது. பிள்ளைகளை பள்ளியில் சேர்ப்பதென்பது பெற்றோர்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று என்பதை யாரும் தனிப்பட்டு கூறத் தேவையில்லை. ஆனால் மனிதர்களாய் பிறக்கும் நம் குழந்தைகள் மதம் ஜாதி என்றால் என்னவென்றே அறியாமல் பெற்றோர்களின் விருப்பத்தால் மரபால் அதற்குள் திணிக்கப்படுகிறார்கள். விதையிலேயே ஏற்றப்படும் நஞ்சைப் போல் அவர்கள் உருவாகுமுன்னே அவர்களின் சிந்தனை வழியை கைப்பற்றிவிடத் துடிக்கிறோம். ஜாதிகளும், மதங்களுமே எல்லாவற்றையும் வழிநடத்தத் … மதம் ஜாதியைக் கடந்த மக்களாய் நம் குழந்தைகள்-ஐ படிப்பதைத் தொடரவும்.