மரணத்திலிருந்தா மதிப்பிடுவது?

  கடந்த 75 நாட்களாக அப்பலோவை மையம் கொண்டிருந்த மர்மம் ஒன்று கரை கடந்து விட்டதாக அறிவிக்கப்பட்டதை அடுத்து முடிவுக்கு வந்திருக்கிறது.   ஜெயலலிதா.   இவரை எப்படி மதிப்பிடுவது? மரணம் அவர் உடலைக் குடித்து விட்டது என்பதற்காக, அந்தக் கோப்பையில் நிரம்பியிருந்த வஞ்சக நஞ்சு அமுதமாக மாறிவிடுமா?   மரணத்தின் பொருட்டு தான் ஒருவரை மதிப்பிட வேண்டுமென்றால் யாரும் இங்கே அயோக்கியர்கள் அல்லர். அல்லது, மரணத்தை முன்வைத்து ஒருவரை புனிதராக்கிக் கொள்ள முடியுமென்றால் அற்பனென்றோ, அற்புதனென்றோ … மரணத்திலிருந்தா மதிப்பிடுவது?-ஐ படிப்பதைத் தொடரவும்.

போதையிலிருந்து தமிழகத்தை மீட்போம்! திருச்சிக்கு வாருங்கள்!

அன்புடையீர், வணக்கம்! டாஸ்மாக் போதையால் சீரழிந்த குடும்பங்களின் எண்ணிக்கை கணக்கிட முடியாது. கணவனை இழந்த விதவைகளின் துயரங்களை சொல்லி மாளாது. பள்ளி மாணவிகள் - மாணவர்கள் குடிப்பதும், குழந்தைகளை குடிக்க வைப்பதும், குடிப்பது தவறில்லை என்ற பண்பாட்டுச் சீரழிவும் புற்றுநோயாக நம் சமூகத்தை அழித்து வருகிறது. தாய்மார்கள் கதறுகிறார்கள். டாஸ்மாக்கால் உயிரிழந்தவர்கள், சாலை விபத்தில் செத்து மடிந்தவர்கள்,விதவைகளாகிப் போனவர்கள் ஏராளம். பாம்பைக் கண்டவுடன் அலறியடித்து கொல்ல முயலுவதைப் போல, டாஸ்மாக்கை மூடினால் தான் அழிவிலிருந்து மீண்டு வாழ … போதையிலிருந்து தமிழகத்தை மீட்போம்! திருச்சிக்கு வாருங்கள்!-ஐ படிப்பதைத் தொடரவும்.

எது கொண்டாட்டம்?

நீங்கள் புத்தாண்டு கொண்டாட்டத்தில் களைத்துப் போய் இருப்பீர்கள், இவ்வாண்டு செய்ய வேண்டிய வேலைகள், அது குறித்த திட்டங்கள், விட வேண்டிய பழக்க வழக்கங்கள், அது குறித்த வரம்புகள் உள்ளிட்ட விபரங்களை எழுதித் தொகுத்து ஒன்றுக்கும் மேற்பட்ட முறைகள் படித்துப் பார்த்து ஒருவித பரவச நிலையில் இருப்பீர்கள். நான் நினைப்பது சரியானால் கடந்த ஆண்டும் இதையே செய்திருந்திருப்பீர்கள். ஆனால் கடந்த ஆண்டு திட்டமிட்டதை செய்திருக்கிறோமா? எவ்வளவு விகிதம் நிறைவேற்றியிருக்கிறோம்? ஏன் முழுமையாக நிறைவேறவில்லை? என்ன காரணம்? எது தடையாக … எது கொண்டாட்டம்?-ஐ படிப்பதைத் தொடரவும்.

கோடிக்கணக்கான மக்களின் வாழ்வோடு விளையாடிய அரசு

தலைமைச் செயலாளர் ஞானதேசிகன் சொல்வது சரியா? அவருடைய அறிக்கையில் முக்கியமாகக் கவனிக்க வேண்டியதாக ஏதாவது இருக்கிறதா? ‘‘செம்பரம்பாக்கம் ஏரியின் உபரிநீரை ஒரே சமயத்தில் பெருமளவில் திறந்துவிட உத்தரவிட்டது யார் என்கிற விவகாரத்தில் பொதுப்பணித் துறை இன்ஜினீயர்கள், தலைமைச் செயலக அதிகாரிகள்... என இரு தரப்பினரும் மோதிக்கொள்ள ஆரம்பித்துவிட்டார்கள். தலைமைச் செயலாளர் ஞானதேசிகன் வெளியிட்ட அறிக்கையைப் பார்த்தால், பொதுப்பணித் துறையினர்தான் பொறுப்பு என்கிற தொனியில் வார்த்தைகள் இருப்பதைப் பார்த்து சம்பந்தப்பட்ட இன்ஜினீயர்கள் டென்ஷன் ஆகியிருக்கிறார்கள்’’  ‘‘பொதுப்பணித் துறை தலைமைப் … கோடிக்கணக்கான மக்களின் வாழ்வோடு விளையாடிய அரசு-ஐ படிப்பதைத் தொடரவும்.

மக்களின் சமாதியே நீதிமன்றங்கள்

மண்சோறு, தீமிதி, அலகு குத்தல் காட்சிகள் எவ்வளவு ஆபாசமாக இருந்ததோ, அதைவிட பலமடங்கு ஆபாசமாக இருக்கிறது இன்றைய ஜெயா விடுதலைக்கு பின்னான நீதி வென்றது என்பன போன்ற அலட்டல்கள். இது போன்றே முடிச்சுகள் அவிழ்ந்து விட்டனவா? வாங்கப்பட்ட தீர்ப்பு, கருப்பு நாள் போன்றவையும் ஆபாசமாகவே தெரிகின்றன. இன்று மகிழ்ச்சியில் கூத்தாடும், அல்லது கூத்தாடுவது போல் நடித்துக் கொண்டிருக்கும் அனைவருக்குமே தெரியும் ஜெயா ஊழல் குற்றவாளிதான் என்பது. ஜெயா கும்பலும் இதை ஒப்புக் கொண்டிருக்கிறது. பதினெட்டு ஆண்டுகளாக வழக்கை … மக்களின் சமாதியே நீதிமன்றங்கள்-ஐ படிப்பதைத் தொடரவும்.

எழுவர் விடுதலை: சிக்கலும் விடுதலையும் ஒன்றே

ராஜிவ் கொலைக் குற்றவாளிகள்(!) எழுவரின் விடுதலை நீதி மன்றத் தீர்ப்பாலும், ஜெயாவின் அறிவிப்பாலும் மீண்டும் பற்றி எறிந்து கொண்டிருக்கிறது. காங்கிரஸ், பிஜேபி விடுதலைக்கு எதிராகவும், திமுக சற்றே அடக்கி வாசித்தும், அதிமுக, தமிழினவாதிகள் விடுதலைக்கு ஆதரவாகவும் குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அண்மையில் திமுகவை, கருணாநிதியை திட்டுவது தான் தமிழினவாதிகளின் ஈழ ஆதரவாளர்களின் தொல்காப்பியமாக ஆகியிருக்கிறது. அந்த அடிப்படையில் எழுவர் விடுதலை குறித்த குரல்கள், மெய்யாக அவர்களின் விடுதலை எனும் எல்லையை கடந்து, அதிமுக அமைச்சர்களே (அமைச்சர்கள் என்பது … எழுவர் விடுதலை: சிக்கலும் விடுதலையும் ஒன்றே-ஐ படிப்பதைத் தொடரவும்.

தனியார்மயக் கொள்ளையைத் தடுப்போம் வாருங்கள்.

  அன்பார்ந்த உழைக்கும் மக்களே,   மே தினம் - முதலாளி வர்க்கத்திற்கு எதிராக தொழிலாளி வர்க்கம் தனது உரிமைகளை ரத்தம் சிந்தி போராடி நிலை நாட்டிக் கொண்ட நாள். எட்டு மணிநேர வேலை என்ற உரிமை மட்டுமல்ல, குறைந்தபட்ச ஊதியம், பணி நிரந்தரம், இலவசக் கல்வி, இலவச மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு உரிமைகளை உலகெங்கும் மக்கள் போராடித்தான் பெற்றிருக்கிறார்கள். அவ்வாறு போராடிப் பெற்ற பல உரிமைகள் இன்று நேரடியாக பறிக்கப்படுவதுடன், பல மறைமுகமான வழிகளிலும் நம் … தனியார்மயக் கொள்ளையைத் தடுப்போம் வாருங்கள்.-ஐ படிப்பதைத் தொடரவும்.

கூடங்குளத்துடன் போர் தொடுத்திருக்கும் தமிழ்நாடு

கடந்த ஏழு மாதங்களாக கூடங்குளம் அணு உலையை எதிர்த்து மக்கள் அமைதி வழியில் போராடிக் கொண்டிருக்கிறார்கள் என்பது அனைவரும் அறிந்தது தான்.  இதில் அந்த பகுதிக்கு வெளியில் உள்ள மக்களில் மாற்றுக் கருத்து கொண்டவர்களும் இருக்கிறார்கள் என்பது வேறு விசயம். கூடங்குளம் அமைந்திருக்கும் பகுதியில் உள்ள மக்களில் ஆகப் பெரும்பான்மையினர் அணு உலை அமைவதை தீரத்துடன் எதிர்க்கிறார்கள் என்பதில் மாற்றுக் கருத்து ஒன்றுமில்லை. 200 நாட்களுக்கும் மேலாக அவர்கள் தொடர் போராட்டங்களை நடத்திக் கொண்டிருப்பதே அதற்குச் சான்று. … கூடங்குளத்துடன் போர் தொடுத்திருக்கும் தமிழ்நாடு-ஐ படிப்பதைத் தொடரவும்.