குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகிவற்றின் தோற்றம் – பகுதி 28 நமக்குக் கிடைத்திருக்கும் செய்திகளில் மிகப் பெரும்பான்மை கோல் பற்றியவையே. அங்கே கொலோன்களுக்குப் பக்கத்திலேயே சுதந்திரமுள்ள சிறு விவசாயிகளும் இன்னும் இருந்தார்கள். அதிகாரிகள், நீதிபதிகள், கந்துவட்டிக்காரர்கள் ஆகியவர்களின் கொடுமையான கட்டாய வசூல்களிலிருந்து தற்காத்துக் கொள்ளும் பொருட்டு அவர்கள் அதிகாரத்திலிருந்த நபர்களின் பாதுகாப்பிலும் ஆதரவிலும் பெரும்பாலும் ஒட்டிக் கொண்டனர். அவர்கள் தனித்தனியாக மட்டுமல்ல, முழு கூட்டுச் சமூகங்களாக இப்படி செய்தார்கள். 4ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சக்கரவர்த்திகள் இந்தச் செயலைத் தடை … ஜெர்மானியர்கள் மத்தியில் அரசு அமைதல் 2-ஐ படிப்பதைத் தொடரவும்.
குறிச்சொல்: ஜெர்மனி
ஜெர்மானியர்கள் மத்தியில் அரசு அமைதல் 1
குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகிவற்றின் தோற்றம் – பகுதி 27 டாசிட்டஸ் கூறுகிறபடி, ஜெர்மானியர்கள் எண்ணிக்கையில் மிகவும் அதிகமாக இருந்தார்கள். வெவ்வேறு ஜெர்மன் மக்களினங்களின் தொகையைப் பற்றி சீஸர் உத்தேசமான கணக்கைத் தந்திருக்கிறார். ரைன் நதியின் இடது கரையில் தோன்றிய உசிபேதன்கள், தென்க்தெரன்களின் எண்ணிக்கை (பெண்கள், குழந்தைகள் உட்பட) 1,80,000 என்று அவர் கூறுகிறார். ஆக, ஒரே மக்களினத்தில் சுமார் ஒரு லட்சம் பேர் [கோல் நாட்டின் கெல்டுகள் குறித்து டியாடோரஸ் நூலில் உள்ள ஒரு பகுதி இந்த … ஜெர்மானியர்கள் மத்தியில் அரசு அமைதல் 1-ஐ படிப்பதைத் தொடரவும்.
கெல்டுகள் மற்றும் ஜெர்மானியர்கள் மத்தியில் குல அமைப்பு 3
குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகிவற்றின் தோற்றம் – பகுதி 26 டாசிட்டஸ் காலத்தைச் சேர்ந்த ஜெர்மானியர்கள் ஏற்கெனவே விளை நிலங்களை முடிவாகப் பங்கீடு செய்திருந்தார்களா, இல்லையா, அது சம்பந்தப்பட்ட நூல் பகுதிகளின் சரியான அர்த்தம் என்ன என்பவற்றைப் பற்றி நடைபெற்ற உணர்ச்சிகரமான, இடைவிடாத சர்ச்சை இப்பொழுது பழைய சங்கதியாகி விட்டது. அநேகமாக எல்லா மக்களினங்களிலும் விளை நிலங்கள் குலங்களினால் பொதுவில் உழுது பயிர் செய்யப்பட்டன, பிற்காலத்தில் பொதுவுடைமைக் குடும்பச் சமூகங்களினால் பொதுவில் உழுது பயிர் செய்யப்பட்டன (இந்த வழக்கம் … கெல்டுகள் மற்றும் ஜெர்மானியர்கள் மத்தியில் குல அமைப்பு 3-ஐ படிப்பதைத் தொடரவும்.
பெய்ரூட் வெடிப்பு: சதியே காரணம்.
செய்தி: லெபனான் தலைநகர் பெய்ரூட்டிலுள்ள துறைமுகத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த மாபெரும் வெடிப்பில் சிக்கி இதுவரை குறைந்தது 135 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 4,000க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். மேலும், லெபனானில் இரண்டு வாரங்களுக்கு அவசரநிலை அமல்படுத்தப்பட்டுள்ளது. துறைமுகத்தில் இருந்த கிடங்கில் உரிய பாதுகாப்பு இல்லாமல் வைக்கப்பட்டிருந்த 2,750 டன் எடை கொண்ட அமோனியம் நைட்ரேட் காரணமாகவே இந்த வெடிப்பு சம்பவம் நிகழ்ந்ததாகக் கூறுகிறார் அந்த நாட்டு அதிபர் மைக்கேல் ஆன். செய்தியின் பின்னே: ஜப்பானில் வீசப்பட்ட அணு … பெய்ரூட் வெடிப்பு: சதியே காரணம்.-ஐ படிப்பதைத் தொடரவும்.
அய்லான் குர்தி – முதலைக் கண்ணீர் நாடகங்கள்
கடந்த வாரம் முழுவதும் உலகெங்குமுள்ள ஊடகங்களின் ஒட்டுமொத்தச் செய்தியும் இது தான் - உலகை உறைய வைத்த அய்லான் குர்தி. துருக்கியின் கடற்கரை ஒன்றில் மணலில் முகம் புதைந்தபடி குப்புறக் கிடந்த ஒரு சிறுவனின் உடல். இந்தப் புகைப்படம் வெளியானதிலிருந்து அகதிகளின் மேல் உலகின் கவனம் குவிக்கப்பட்டதைப் போல ஒரு பிம்பம் ஏற்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. எப்போதும் அகதிகளை வரவேற்கும் ஜெர்மனியின் இளக்கம் எடுத்துக் காட்டப்படுவதில் தொடங்கி, உலக நாடுகள் அகதிகள் குறித்த தங்கள் பார்வையை மறுபரிசீலனை செய்ய … அய்லான் குர்தி – முதலைக் கண்ணீர் நாடகங்கள்-ஐ படிப்பதைத் தொடரவும்.
மூன்றாம் உலகப் போர்: உண்மைகளை வளைக்கும் வைரமுத்து
அண்மையில் நாளிதழை புரட்டிக் கொண்டிருக்கும் போது ஒரு விளம்பரம் கண்ணில் பட்டது. வைரமுத்து எழுதி வெளியிட்ட ‘மூன்றாம் உலகப் போர்’ எனும் நாவலை ஒரே வாரத்தில் மூன்றாம் பதிப்பு வெளியிட்டார்களாம். ஆச்சரியமாக இருந்தது. முதல் பதிப்பை வெளியிடும் போதே, இது இரண்டாம் பதிப்புக்கு, இது மூன்றாம் பதிப்புக்கு என்று ஒதுக்கி வைத்து விட்டார்களோ. கவிஞர் வைரமுத்து வெகுவாக அறியப்பட்டவர் தான். இன்னும் பாட்டெழுதிக் கொண்டிருக்கும், போன தலைமுறை திரைப்பட பாடலாசிரியர். பாரதிராஜா போன்ற இயக்குனர்களுக்கு … மூன்றாம் உலகப் போர்: உண்மைகளை வளைக்கும் வைரமுத்து-ஐ படிப்பதைத் தொடரவும்.