மீண்டும் பெட்ரோல் டீசல் விலை உயர்வு: மக்களை வயிற்றிலடித்து தாளமாய் ரசிக்கும் கொடூரம்

இந்த ஆண்டில் மூன்றாவது முறையாக பெட்ரோல் டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலை உயர்த்தப்பட்டிருக்கிறது. இதற்கு வழக்கம் போல சர்வதேச அளவில் கச்சா எண்ணெயின் விலை உயர்ந்துவிட்டது, பெட்ரோலிய நிறுவனங்களின் இழப்பு அதிகரிக்கிறது, நட்டம் என்று காரணங்கள் கூறப்படுகின்றன. இதிலும், தவிர்க்கவியலாத நிலையில் சிறிதளவே உயர்த்தியிருப்பதாகவும், பெட்ரோல் பயன் படுத்துவோர் இதைத் தாங்கும் அளவுக்கு சக்தி படைத்தவர்கள் என்றும் சமாதானம் வேறு. அப்படி என்ன தவிர்க்கவியலாத நிலை அரசுக்கு? கடந்த சில ஆண்டுகளாகவே பன்னாட்டளவில் கச்சா எண்ணெயின் விலை … மீண்டும் பெட்ரோல் டீசல் விலை உயர்வு: மக்களை வயிற்றிலடித்து தாளமாய் ரசிக்கும் கொடூரம்-ஐ படிப்பதைத் தொடரவும்.

லாரிகள் வேலைநிருத்தம் விலக்கிக்கொள்ளப்பட்டது முடிவா? தொடக்கமா?

எட்டு நாட்களாக நீடித்த லாரி உரிமையாளர், அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் வேலைநிருத்தம் விலக்கிக்கொள்ளப்பட்டது கண்டு மக்கள் நிம்மதியடைந்திருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. பண்டிகை காலங்களில் லாரிகள் வேலைநிருத்தத்தினால் ஏற்பட்ட பொருட்தட்டுப்பாடும், விலையேற்றமும் மக்களை வதைத்திருக்கும் என்பதில் ஐயமில்லை. பொதுவாக பண்டிகைகள் என்பது ஓய்வின்றி உழைத்துக்களைக்கும் மக்களுக்கு கொஞ்சம் இழைப்பாறலை தருகின்ற இடைவெளி. அந்த இடைவெளியில் உண‌வுப்பொருட்கள் உள்ளிட்ட தட்டுப்பாடும் விலையேற்றமும் அவர்களை கலக்கமடையச்செய்தன. ஆனால் மத்தியதரவர்க்கத்திற்கோ காரில் சென்று ரிலையன்ஸ் பிரஷில்(!) வாங்கி பொம்மைகளைப்போல் குளிர்பெட்டிகளில் அடுக்கிவைத்திருப்பதால் … லாரிகள் வேலைநிருத்தம் விலக்கிக்கொள்ளப்பட்டது முடிவா? தொடக்கமா?-ஐ படிப்பதைத் தொடரவும்.