காலக் கணக்கை கொரோனாவுக்கு முன் கொரோவுக்கு பின் என பிரிக்க வேண்டும் போலிருக்கிறது. ஒரு தொற்று நோயாக தொடங்கிய கொரோனா, நாட்டின் நிதி நெருக்கடி தொடங்கி எளிய மக்களின் அன்றாட வாழ்வில் தலையிட்டு மாற்றியமைத்தது வரை வாழ்வின் அனைத்து பகுதிகளிலும் தன்னுடைய பாதிப்பை நிகழ்த்தி இருக்கிறது. ஆனால் உலகையே மாற்றியமைத்த இந்த அனைத்து சுமைகளையும் கொரோனா கிருமியின் தலையில் ஏற்றி வைத்தால் அது குருவி தலையில் இமயமலையை ஏற்றி வைத்தது போலாகும். கொரோனாவின் பெயரால் இவை அனைத்தையும் … மீண்டும் மீண்டும் ஆபத்து-ஐ படிப்பதைத் தொடரவும்.
குறிச்சொல்: தடுப்பூசி
தடுப்பூசி அறிவாளிகளும், கட்டாய எதிர்ப்பு அறிவிலிகளும்
கட்டாயாமாக திணிக்கப்படும் தடுப்பூசி மருத்துவத்துக்கு எதிராக உலகமெங்கும் மக்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். அமெரிக்காவில் கட்டாயத் தடுப்பூசிக்கு எதிரான ஓர் இயக்கமே இயங்கி வருகிறது. கட்டாயத் தடுப்பூசி எனும் நிலை, நேரடியாகவோ மறைமுகமாகவோ உலகின் எந்த நாட்டிலும் இல்லை. என்றாலும் கூட கட்டாயத் தடுப்பூசி என்று அவ்வப்போது அரசுகள் பூச்சாண்டி காட்டுவதும், மக்கள் அதற்கு எதிராக போராடுவதும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. உலகமெங்கும் இருக்கும் இந்தப் போக்கு தற்போது இந்தியாவிலும் குறிப்பாக தமிழ்நாட்டிலும் தொடங்கி இருக்கிறது. கொரோனாவுக்கு … தடுப்பூசி அறிவாளிகளும், கட்டாய எதிர்ப்பு அறிவிலிகளும்-ஐ படிப்பதைத் தொடரவும்.
கட்டாயத் தடுப்பூசி: ஒரு விவாதம்
கொரொனா எனும் பெருந்தொற்று தொடங்கியதிலிருந்து அலோபதி மருத்துவத்துக்கு எதிராக நான் தொடர்ந்து எழுதி வருகிறேன். அரசின் பெருந்தொற்று நடவடிக்கைகளின் உச்சகட்டமாக தடுப்புசி போடாதவர்கள் வீடுகளுக்குள்ளே முடங்கிக் கிடக்க வேண்டும் எனும் நிலை கொஞ்சம் கொஞ்சமாக ஏற்படுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் பொது இடங்களுக்கு வரக்கூடாது என்று அறிவிக்கிறார்கள். கேரளாவிலோ முதல்வரே அரசு மருத்துவமனைகளில் தடுப்பூசி போடாதவர்களுக்கு இடமில்லை என்று அறிவித்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து நேற்று தடுப்பூசி நோயைத் தடுக்கவா மக்களைத் தடுக்கவா? என்றொரு பதிவை … கட்டாயத் தடுப்பூசி: ஒரு விவாதம்-ஐ படிப்பதைத் தொடரவும்.
நோயை தடுக்கும் ஊசியா? மக்களை தடுக்கும் ஊசியா?
செய்தி: பள்ளிகள், கல்லூரிகள், திரையரங்குகள்,மார்க்கெட், விளையாட்டு மைதானங்கள், மால்கள் உள்ளிட்ட பொது இடங்களில் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்க வேண்டும் என்று சுகாதாரத் துறை கடந்த நவம்பர் 19ஆம் தேதி உத்தரவிட்டது. உத்தரவு பிறப்பிக்கப்பட்டு 10 நாட்களுக்கு மேலான பிறகு தற்போதுதான் அதை அமல்படுத்துவதற்கான நடவடிக்கைகள் ஆங்காங்கே நடைபெற்று வருகிறது. இதற்கு ஒமிக்ரான் வைரஸ் அச்சமும் ஒரு காரணம். முதலில் தொழில் நிறுவனங்களில் பணிபுரியும் அனைவரும் தடுப்பூசி செலுத்தியிருப்பதை உரிமையாளர்கள் உறுதி செய்யவேண்டும். இல்லையென்றால் கடுமையான … நோயை தடுக்கும் ஊசியா? மக்களை தடுக்கும் ஊசியா?-ஐ படிப்பதைத் தொடரவும்.
தடுப்பூசியை காட்டி கொள்ளையிடலாமா?
தடுப்பூசி குறித்து ஏதேனும் கேள்வி எழுப்பி விட்டால் போதும், உடனேயே அது அறிவியலுக்கு எதிரான பார்வை என்று ஒரேயடியாக முத்திரை குத்திவிடும் போக்கு தற்போது பரவலாக இருக்கிறது. இந்த தடுப்பூசிக்கு பிரச்சார முகவர்களாக செயல்படும் அலோபதி மருத்துவர்கள், தடுப்பூசியை சுற்றி நிகழும் எது குறித்தும் நாங்கள் அக்கரைப்படமாட்டோம் என்று வாய் மூடி இருப்பார்களானால் தடுப்பூசி குறித்து பிரச்சாரம் செய்யும் உரிமை மட்டும் அவர்களுக்கு எங்கிருந்து வரும்? தடுப்பூசிகளின் பின்னுள்ள அரசியலையையும், கொள்ளையையும் விளக்குகிறார் தோழர் கலையரசன். பாருங்கள் … தடுப்பூசியை காட்டி கொள்ளையிடலாமா?-ஐ படிப்பதைத் தொடரவும்.
தடுப்பூசியா? கடுப்பூசியா?
செய்தி: கரோனா தடுப்பு மருந்துகள் 100 சதவீதம் பாதுகாப்பானவை என இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம், அஸ்ட்ராஜென்கா நிறுவனத்துடன் இணைந்து சீரம் இன்ஸ்ட்டியூட் ஆப் இந்தியா நிறுவனம் கோவிஷீல்ட் என்ற கரோனா தடுப்பு மருந்தையும், ஐசிஎம்ஆர், புனேயில் உள்ள வைரலாஜி நிறுவனத்துடன் இணைந்து பாரத் பயோடெக் நிறுவனம் கோவாக்ஸின் எனும் தடுப்பு மருந்தையும் தயாரித்து வருகின்றன. இந்த நிறுவனங்களின் கரோனா தடுப்பு மருந்துகளை அவசர காலத்துக்கு பயன்படுத்திக் கொள்ள மத்திய மருந்துக் … தடுப்பூசியா? கடுப்பூசியா?-ஐ படிப்பதைத் தொடரவும்.