மறந்து போய்விட்ட வாச்சாத்தி வழக்கு கடந்த சில நாட்களாக மீண்டும் வலம் வரத் தொடங்கியிருக்கிறது. இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே வழங்கப்பட்டிருக்க வேண்டிய தீர்ப்பு குற்றம் சாட்டப்பட்டவர்களில் சிலர் வரவில்லை என்பதால் மேலும் இரண்டு நாட்கள் தள்ளிவைக்கப்பட்டது. தீர்ப்பை கேட்கத் திரண்டிருந்த வாச்சாத்தி மக்களில் ஒருவர் கூறினார், “இருபது ஆண்டுகள் காத்திருந்து விட்டோம் இரண்டு நாட்கள் காத்திருப்பதில் ஒன்றும் பிரச்சனையில்லை” இத்தனை ஆண்டுகள் கடந்து வந்தாலும் அனைவரையும் குற்றவாளிகள் என அறிவித்திருப்பதில் பலர் அமைதி கொள்ளலாம். ஆனால் இந்த … வாச்சாத்தியைக் குதறிய வெறிநாய்களை 19 ஆண்டுகளுக்குப் பிறகு கட்டிப்போட உத்தரவு-ஐ படிப்பதைத் தொடரவும்.
குறிச்சொல்: தண்டனை
பினாயக் சென் தேசத்துரோகி என்றால் தேசபக்தனாகும் தகுதி யாருக்குண்டு?
கடந்த 24/12/2010 வெள்ளியன்று ராய்ப்பூர் மாவட்ட அமர்வு நீதிமன்றம் மருத்துவர் பினாயக் சென்னுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்திருக்கிறது. நாட்டின் மீதும் மக்கள் மீதும் நேசம்கொண்டு உழைக்கும் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாகியிருக்கிறது இந்தத்தீர்ப்பு. அதேநேரம் இந்த அரசு யாருக்காக இருக்கிறது, யாரின் நலன்களுக்காக செயல்படுகிறது என்பதையும் அம்பலப்படுத்தியிருக்கிறது. தேசத்துரோக குற்றச்சாட்டின்கீழ் குற்றம் நிருப்பிக்கப்பட்டதாகக் கருதி இந்தத்தீர்ப்பை வழங்கியிருக்கிறது நீதிமன்றம். அதாவது மாவோயிஸ்டுகளுடன் தொடர்பு கொண்டிருந்ததாகவும், அவர்களுக்கு ஆதரவாக செயல்பட்டதாகவும் கூறப்படும் பொய்யான குற்றச்சாட்டின் கீழ் இந்த தண்டனையை வழங்கியிருக்கிறது. … பினாயக் சென் தேசத்துரோகி என்றால் தேசபக்தனாகும் தகுதி யாருக்குண்டு?-ஐ படிப்பதைத் தொடரவும்.