அண்மையில் தமிழ்நாடு அரசு மின் கட்டணத்தை உயர்த்த முடிவெடுத்திருப்பதாக அறிவித்திருந்தது. இதற்கு மக்களிடமிருந்து கடும் எதிர்ப்புகள் கிளம்பின. இதனைத் தொடர்ந்து மின்சாரத்துறை அமைச்சர், ஒன்றிய அரசு மின் கட்டண உயர்வை அறிவிக்கச் சொல்லி எங்களை கட்டாயப்படுத்துகிறது என்று தெரிவித்திருந்தார். அமைச்சர் சொல்வது உண்மை தான் என்று கடந்த எட்டாம் தேதி நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட மின்சாரத் திருத்தச் சட்டம் 2022 வெளிப்படையாக அறிவித்து விட்டது. தற்போது மின் பகிர்மானம் மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. இதை தனியாருக்கு மாற்றுவதை … மின்சார தூக்குக் கயிறு-ஐ படிப்பதைத் தொடரவும்.
குறிச்சொல்: தனியார்மயம்
ரயில்வேயை ஏழைகள் பயன்படுத்தக் கூடாது: மத்திய அரசு அறிவிப்பு
செய்தி: ரயில்வேயில் தனியாரை அனுமதிக்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன் ஒரு பகுதியாக, 109 தடங்களில், தனியார் இயக்குவதற்கு அனுமதி அளிக்க, ரயில்வே முடிவு செய்துள்ளது. ரயில்களை இயக்கும் தடத்தில், எந்தெந்த ஸ்டேஷன்களில் ரயிலை நிறுத்துவது என்பதை, தனியாரே முடிவு செய்து கொள்ளலாம் என, ரயில்வே தெரிவித்துள்ளது. மேலும், ரயில்வேயின் உள்கட்டமைப்பு வசதிகளை பயன்படுத்துவதற்காக, கிலோமீட்டருக்கு, 512 ரூபாயை கட்டணமாக, தனியார் செலுத்த வேண்டும். செய்தியின் பின்னே: தனியார்மயம் என்பதே அடித்தட்டு மக்களுக்கு எதிரானது என்பது … ரயில்வேயை ஏழைகள் பயன்படுத்தக் கூடாது: மத்திய அரசு அறிவிப்பு-ஐ படிப்பதைத் தொடரவும்.
கற்க கசடற விற்க அதற்குத் தக
பத்தாம் வகுப்புத் தேர்வுகள் கிடையாது, அனைவருக்கும் தேர்ச்சி என அரசு அறிவித்திருப்பதை தொடர்ந்து, எல்லோரும் தங்கள் உவகையை வெளிப்படுத்தி வருகிறார்கள். இந்த கொரோனா அச்சத்திலும் தேர்வை நடத்தியே தீர்வது என்று அரசு கடைசி வரை முயன்றது. இதற்கு மேலும் இழுத்துப் பிடித்தால் இருக்கும் கொஞ்ச மதிப்பையும் இழக்க நேரிடலாம் என்பதால் வேறு வழியின்றியே இந்த அறிவிப்பு வந்திருக்கிறது. இதற்குப் பின்னால் தனியார் கல்வி நிறுவனங்களின் வேட்டை எனும் காரணம் இருக்கிறது. மறுபக்கம், புதிய கல்விக் கொள்கை என்பதன் … கற்க கசடற விற்க அதற்குத் தக-ஐ படிப்பதைத் தொடரவும்.
நமக்கு ஊரடங்கு, அரசுக்கு விற்றடங்கு
கொரோனாவை முன்வைத்து பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு 50 வது நாளை நெருங்கிக் கொண்டிருக்கிறது. வேறு வழி இல்லாமல் அல்லது வேறு வழி தெரியாமல் மக்கள் தங்களை வீடுகளுக்குள் முடக்கிக் கொண்டிருக்கிறார்கள். இதே இந்த ஊரங்கு நேரத்தில் அரசு என்ன செய்து கொண்டிருக்கிறது? கைதட்டு, விளக்கணை, தீவட்டி ஏற்று, பூத்தூவு என்று மக்களை கேலி செய்வதை விடுத்து அரசு வேறு என்ன செய்து கொண்டிருக்கிறது? ஏற்கனவே கொரோனா மக்களை வதைத்துக் கொண்டிருக்கிறது. அந்த வதை நெருப்புக்கு எண்ணெய் ஊற்றுவது போன்ற … நமக்கு ஊரடங்கு, அரசுக்கு விற்றடங்கு-ஐ படிப்பதைத் தொடரவும்.
பொது வேலை நிறுத்தத்தை ஆதரிப்போம்
இன்று ஜனவரி 8. பத்து மத்திய தொழிற்சங்கங்கள் இணைந்து இந்திய அளவிலான பொது வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளன. பொதுவாக, 1991 க்குப் பிறகு இந்திய அளவிலான பொது வேலை நிறுத்தங்கள் நடந்ததே இல்லை. ஆனால், பொது வேலை நிறுத்தங்களை நடத்த வேண்டிய தேவை முன்னெப்போதையும் விட 1991க்குப் பிறகு அதிகம் ஏற்பட்டுள்ளது என்பதே உண்மை. இந்த முரண்பாடான சமூக நிலைக்கு இரண்டு காரணங்கள் இருக்கின்றன. ஒன்று, எண்பதுகளின் பிற்பகுதியில் தீவிரமாக அமல்படுத்தப்பட்ட உலகமயக் கொள்கையால், வேலை செய்தால் … பொது வேலை நிறுத்தத்தை ஆதரிப்போம்-ஐ படிப்பதைத் தொடரவும்.
என் சொத்தை எவண்டா விற்பது?
பொதுத்துறை நிறுவனங்களை விற்பது எனும் மோசடி, காங்கிராசால் தொடங்கி வைக்கப்பட்டு பாஜகவில் வாஜ்பேயி வழியாக இன்று மோடியிடம் புதிய விரைவு பெற்று தறிகெட்டு ஓடிக் கொண்டிருக்கிறது. ஐந்து ஆண்டுகளில் ஐந்து டிரில்லியன் பொருளாதாரம் என்று வாயில் வடை சுற்றிய மோடி, இன்று நடப்பு பொருளாதார அலகான 2.7 டிரில்லியனில் நீடிக்க வைப்பதற்கே தலை கீழாக நின்று தண்ணீர் குடிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார். இதற்காகத் தான் வேக வேகமாக பொதுத்துறை நிறுவனங்களை விற்றுத் தள்ளும் ஊதாரியாக மோடி காட்சி … என் சொத்தை எவண்டா விற்பது?-ஐ படிப்பதைத் தொடரவும்.
ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்
"உலகமயமாக்கல் மூலமாக உலகமே இன்றொரு சிறிய கிராமமாக மாறி விட்டது...மக்கள் அனைவரின் நலன்களும் மேம்படுத்தப்பட்டுக் கொண்டு இருக்கின்றன...நாடுகள் முன்னேற்றம் அடைந்து கொண்டு இருக்கின்றன" என்று சிலர் ஓயாது கூறிக் கொண்டு இருக்கும் பொழுது அக் கூற்றினை மறுக்கின்றார் இந்த நூலின் ஆசிரியரான ஜான் பெர்கின்ஸ் அவர்கள். "உலகமயமாக்கல் என்ற பெயரில் உங்களின் நாட்டினை நாங்கள் கொள்ளையிட்டுக் கொண்டு இருக்கின்றோம். உங்கள் நாட்டின் இயற்கை வளங்கள், நீர் ஆதாரங்கள், மனித வளங்கள் ஆகியவற்றை உலகில் உள்ள பெரு … ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்-ஐ படிப்பதைத் தொடரவும்.
மக்கள் போராட்டங்களை ஒன்றிணைப்போம்!
8 மணிநேர வேலை உரிமைக்கான போராட் டம் துவங்கி 130 ஆண்டுகளாகி விட்டது. அதற்கு முன்னதாகவே பல போராட்டங்கள் நடந்திருந்தாலும், மே முதல் தினத்தன்று நடந்த போராட்டம் நூற்றுக்கணக்கான தொழிலாளர்களது இரத்தத்தில் நனைந்து தியாக வரலாறாக பதிவாகி இருக்கிறது. இந்தியாவில் தொழிற்சங்கம் துவங்குவதற்கான சட்டம் போடப்பட்டு 90 ஆண்டுகளாகி விட்டது. இந்த சட்டமும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களது தியாகத்தால் போடப்பட்டதுதான். 8 மணிநேர வேலை என்கிற உரிமையும், தொழிற்சங்க உரிமையும் நடைமுறையில் இருக்கிறதா? இல்லை.. இல்லை.. இல்லவே இல்லை … மக்கள் போராட்டங்களை ஒன்றிணைப்போம்!-ஐ படிப்பதைத் தொடரவும்.
பன்னீர் சசி எடப்பாடி, விவசாயி போகுறான் பாடையேறி
கடந்த ஒரு மாதமாக தமிழகத்தின் அனைத்து பிரச்சனைகளும் மறக்கடிக்கப்பட்டு அதிமுக அடிமைக் கூடாரத்தின் கொள்ளைக் கூட்டத் தலைவனாக கோலோச்சப் போவது யார்? எனும் பிரச்சனையே முதன்மையான மக்கள் பிரச்சனையாக மாற்றப்பட்டது. ஊடக விலங்குகள் அப்படிக் கருதிக் கொண்டதால் மக்களும் அவ்வாறே கருதும்படி ‘வைத்து’ செய்யப்பட்டனர். ஆனால் மக்கள் பிரச்சனைகள் மேலும் மேலும் தீவிரமடைந்தன. அவற்றில் குறிப்பானதும், முதன்மையானதுமான பிரச்சனை விவசாயிகளின் மரணம். விவசாயிகள் மரணமடைவது இந்தியாவில் புதிய விடயமல்ல. கடந்த 25 ஆண்டுகளில் சற்றேறக் குறைய … பன்னீர் சசி எடப்பாடி, விவசாயி போகுறான் பாடையேறி-ஐ படிப்பதைத் தொடரவும்.
கொள்ளயடிக்கணும் கொஞ்சம் செத்துப் போறீங்களா?
தமிழ்நாடு மின்சார வாரியம் நட்டமடைந்த வரலாற்றை பேசும் ஆவணப் படம் இது. இது ஏற்கனவே பலராலும், குறிப்பாக மின்சாரத்துறையில் இருக்கும் திரு. காந்தி போன்றவர்களால் கட்டுரைகளாக எழுதப்பட்டு, பரவலாக கவனத்துக்கு உள்ளான விசயம் தான் என்றாலும் தற்போது ஆவணப்படமாக வெளிவந்திருப்பது வெகு மக்கள் கவனத்தை பெறும், பெற வேண்டும். மின்சாரம் என்பது மக்களுக்கு இன்றியமையாத ஒரு உற்பத்திப் பொருள் என்பதிலிருந்து மாறி அரசியல்வாதிகளும், அதிகார வர்க்கமும் கொள்ளையடிப்பதற்கான கருவி என எப்படி மாறிப்போனது என்பதை ‘ஊழல் மின்சாரம்’ … கொள்ளயடிக்கணும் கொஞ்சம் செத்துப் போறீங்களா?-ஐ படிப்பதைத் தொடரவும்.