அன்பார்ந்த உழைக்கும் மக்களே! பதினாறு மணி நேர மின்வெட்டால் இருண்ட தமிழகத்தில் தினந்தோறும் மக்கள் புழுங்கி சாகிறார்கள். மின்சாரம் இன்றி கண் முன்னே அழியும் பட்டறை, விசைத்தறி, மற்றும் சிறு குறுந்தொழில் நிறுவனங்கள், தண்ணீரின்றி கருகும் பயிர்கள், கண்ணீரிலும் கடனிலும் தத்தளிக்கும் விவசாயங்கள், தூக்கமின்றி தவிக்கும் நோயாளிகள், முதியவர்கள். தூங்காமல் அழும் குழந்தைகள், வேலையிழந்து, இரவில் தூக்கமிழந்து பட்டினிச்சாவை நெருங்கும் லட்சக்கணக்கான கூலி தொழிலாளி வர்க்கம். நாள்தோறும் டெங்குவிற்கு பலியாகும் எண்ணற்ற அப்பாவி உழைக்கும் மக்கள். எப்போது … பவரை (அதிகாரத்தை) கையிலெடுப்போம்! பவரை (மின்சாரத்தை) வரவைப்போம்-ஐ படிப்பதைத் தொடரவும்.
குறிச்சொல்: தனியார் மயம்
பேருந்து, பால், மின்சாரம் – விலை உயர்வு! பாசிச ஜெயாவின் பேயாட்டம்!!
ஜெயலலிதா பதவியேற்றதும்தான் எத்தனை எத்தனை நலத் திட்டங்கள்…! சமச்சீர் கல்வியை ஒழிக்க சில நூறு கோடி செலவு செய்து வீம்பாட்டம் ஆடிய கொடுமை; பல நூறு கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட புதிய தலைமைச் செயலகம் இழுத்து மூடப்பட்டு, முகமது பின் துக்ளக்கே வெட்கப்படும் அளவுக்கு சிறப்பு மருத்துவமனை என்ற அறிவிப்பு; அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகம் குழந்தைகள் மருத்துவமனையாக்கப்படுமென்ற ஹிட்லர் பாணி உத்திரவு; ஆயிரக்கணக்கான மக்கள் நலப் பணியாளர்களை வீட்டுக்கு அனுப்பிய வக்கிர முடிவு; பரமக்குடியில் … பேருந்து, பால், மின்சாரம் – விலை உயர்வு! பாசிச ஜெயாவின் பேயாட்டம்!!-ஐ படிப்பதைத் தொடரவும்.
உள்ளாட்சித் தேர்தல்: ஊழலுக்கு துணை போவது தான் ஜனநாயகமா?
தேர்தல் அல்லாத காலங்களில் எல்லாவிதமான ஜனநாயகமற்ற வழிகளிலும் மக்களை சூறையாடுவதும், சூறையாட துணைபோவதுமாய் இருந்துவிட்டு, தேர்தல் காலங்களில் மட்டும் மக்களுக்கு ஜனநாயக பாடம் எடுக்க வந்து விடுகிறார்கள் இந்த ஓட்டுப் பொறுக்கி அரசியல் வியாதிகள். மக்களும் தாங்கள் வாழ்வதற்காக படும்பாடுகளுக்கு யார் காரணம் என்பதையோ, அதில் ஜனநாயகத்திற்கு ஒட்டும் தொடர்பிருக்கிறதா என்பதையோ அறியாமல், ஓட்டுப் போட மறுப்பது ஜனநயகத்தை மறுப்பது என்பது போன்ற மயக்கத்தில் இழுபட்டு விடுகிறார்கள். நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல்கள் மேல்மட்ட அளவிலான … உள்ளாட்சித் தேர்தல்: ஊழலுக்கு துணை போவது தான் ஜனநாயகமா?-ஐ படிப்பதைத் தொடரவும்.
சுதந்திரம் என்றால் என்ன? குச்சி மிட்டாய்
ஆகஸ்ட் 15. இன்று சுதந்திர தினாமாம். அதாவது இந்தியா விடுதலை அடைந்த நாளாம். இன்று கொண்டாட்ட தினம். இன்றைய இந்த கொண்டாட்டத்தை எப்படி கொண்டாடுகிறார்கள் என்பதை விட்டு விடுவோம். ஏனென்றால் அது நமீதாக்களின் பல்லிடுக்குகளில் சிக்கிக் கொண்ட உச்சரிப்புகளுக்கு சிக்கெடுப்பது போன்றது. எனவே, ஏன் கொண்டாடுகிறார்கள் என்று கேட்போம். 1947ல் நடந்தது விடுதலையல்ல, ஆட்சி மாற்றம் மட்டுமே. இங்கிலாந்து வெள்ளை அரசின் நேரடி காலனி நாடாக வைத்து இந்தியாவை சுரண்டிக் கொண்டிருந்த வெள்ளையர்கள், மக்களின் எழுச்சியும் கிளர்ச்சியும் … சுதந்திரம் என்றால் என்ன? குச்சி மிட்டாய்-ஐ படிப்பதைத் தொடரவும்.