ரயில்வேயை ஏழைகள் பயன்படுத்தக் கூடாது: மத்திய அரசு அறிவிப்பு

செய்தி: ரயில்வேயில் தனியாரை அனுமதிக்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன் ஒரு பகுதியாக, 109 தடங்களில், தனியார் இயக்குவதற்கு அனுமதி அளிக்க, ரயில்வே முடிவு செய்துள்ளது. ரயில்களை இயக்கும் தடத்தில், எந்தெந்த ஸ்டேஷன்களில் ரயிலை நிறுத்துவது என்பதை, தனியாரே முடிவு செய்து கொள்ளலாம் என, ரயில்வே தெரிவித்துள்ளது. மேலும், ரயில்வேயின் உள்கட்டமைப்பு வசதிகளை பயன்படுத்துவதற்காக, கிலோமீட்டருக்கு, 512 ரூபாயை கட்டணமாக, தனியார் செலுத்த வேண்டும். செய்தியின் பின்னே: தனியார்மயம் என்பதே அடித்தட்டு மக்களுக்கு எதிரானது என்பது … ரயில்வேயை ஏழைகள் பயன்படுத்தக் கூடாது: மத்திய அரசு அறிவிப்பு-ஐ படிப்பதைத் தொடரவும்.

கொரோனா: அரசியல் செய்யலாமா?

“நாடு இருக்கும் இந்த இக்கட்டான நிலையில் அரசியல் செய்யலாமா?” சமூகம் குறித்து, மக்களைக் குறித்து அக்கரை கொள்ளும் எவரும் இந்தக் கேள்வியை தவிர்த்திருக்க முடியாது. அரசை விமர்சித்து, அர்சின் செயல்பாடுகளை எதிர்த்து எப்போதெல்லாம் கேள்விகள் எழுப்பப்படுகின்றனவோ அப்போதெல்லாம்; எப்போதெல்லாம் அரசிடம் அல்லது அரசின் ஆதரவாளர்களிடம் எழுப்பப்படும் கேள்விகளுக்கு பதில் இல்லையோ அப்போதெல்லாம், இந்தக் கேள்விதான் முன்வைக்கப்படுகிறது. ஏன்? செய்தால் என்ன? அரசியல் செய்வதற்கு இடம், பொருள், ஏவல், காலம் எல்லாம் உண்டா? அரசுக்கு, மக்களுக்கு ஒரு நெருக்கடி … கொரோனா: அரசியல் செய்யலாமா?-ஐ படிப்பதைத் தொடரவும்.

பி.எஸ்.என்.எல் ஏன் விற்கப்படுகிறது?

பொதுத்துறை நிறுவனங்களை விற்பனை செய்வது என்பது அரசுகள் பின்பற்றி வரும் பொருளாதாரக் கொள்கை. அந்தக் கொள்ளை, மன்னிக்கவும் கொள்கை சரியா தவறா? என்பது ஒரு பக்கம் இருக்கட்டும். நட்டமடைந்து விட்டது அதனால் விற்கிறோம் என்பது எளிதான பதிலாக இருக்கிறது. ஆனால் ஏன் நட்டமடைந்தது என்பதை அரசு மக்களுக்கு விளக்குவதே இல்லை. உலகிலேயே பொதுத்துறை நிறுவனங்களை விற்பதற்கென்றே ஒரு அமைச்சரவையை ஏற்படுத்திய முதல் அரசாங்கம் பாஜக அரசாங்கம் என்பது எத்தனை பேருக்குத் தெரியும். (வாஜ்பேயி அமைச்சரவையில் அருண்ஷோரி என்பவர் … பி.எஸ்.என்.எல் ஏன் விற்கப்படுகிறது?-ஐ படிப்பதைத் தொடரவும்.

பகத்சிங் நினைவு நாளில் மாணவர் கடமை என்ன?

ஓங்கட்டும் நாட்டுப்பற்று!                       ஒழியட்டும் மறுகாலனியாக்கம்! மார்ச்-23 பகத்சிங் நினைவுநாள்; மறுகாலனியாக்க எதிர்ப்பு தினம்!   அன்பார்ந்த மாணவர்களே, இளைஞர்களே, தனியார் கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் மீதான தாக்குதல்கள், தற்கொலைகள், படுகொலைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகின்றன. விழுப்புரம் கள்ளக்குறிச்சி எஸ்.வி.எஸ் மருத்துவக் கல்லூரி நிர்வாகத்தால் 3 மாணவிகள் படுகொலை செய்யப்பட்டது நாட்டையே உலுக்கியெடுத்தது. ஆனாலும் தனியார் கல்லூரிகளின் கொட்டம் அடங்கவில்லை. கடந்த … பகத்சிங் நினைவு நாளில் மாணவர் கடமை என்ன?-ஐ படிப்பதைத் தொடரவும்.

தேர்தல் சதுரங்கம்: காய் நகர்த்தும் கட்சிகள், வெட்டுப்படும் மக்கள்

            2011 தேர்தலின் போது எழுதப்பட்ட பதிவு இது.  காலம் கடந்திருக்கிறது. ஆனால், நிலமை இன்னும் அது தானே. எனவே, மீள்பதிவு. ************************************************************ வந்துவிட்டது தேர்தல் திருவிழா. சோம்பிக்கிடந்த தமிழகம் உதறி எழுந்து திரிகிறது. எல்லா இடங்களிலும் அரசியல்(!) அலசி உலர்த்த‌ப்படுகிறது. அணி மாற்றங்கள், கூட்டணிக் கணக்குகள், தொகுதி இழுபறிகள், வாக்காளர் புள்ளிவிபரங்கள், கட்சிக் கணிப்புகள் என எல்லோரும் தம் மனதுக்குகந்த கணக்குகளில் ஆழ்ந்திருக்கிறார்கள். கடந்து சென்ற இடைத்தேர்தல்களின் புண்ணியத்தில் … தேர்தல் சதுரங்கம்: காய் நகர்த்தும் கட்சிகள், வெட்டுப்படும் மக்கள்-ஐ படிப்பதைத் தொடரவும்.

கேஜரிவால், நோட்டோ – வழுக்குப் பாறைகள்

அண்மையில் நடந்து முடிந்த நான்கு மாநில தேர்தல் முடிவுகளின் மூலம் ஆம் ஆத்மி அரவிந்த் கேஜரிவாலும், யாருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை என்பதை வாக்காக அளிக்கலாம் எனும் நோட்டோ முறையும் விவாதத்தைக் கிளப்பி வரவேற்பை பெற்றிருகின்றன. தேர்தல் காலங்களில் வரிசையில் நின்று வாக்களிக்கும் மக்களிடம் இவை புதிய நம்பிக்கையை தோற்றுவித்திருக்கின்றன. அரசும் கட்சிகளும் அப்படித்தான் மக்களிடம் பிரச்சாரம் செய்ய விரும்புகின்றன. ஆனால் உண்மை வேறு விதமாக இருக்கிறது.   அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் தேர்தலில் வாக்களித்து, ஜனநாயகக் … கேஜரிவால், நோட்டோ – வழுக்குப் பாறைகள்-ஐ படிப்பதைத் தொடரவும்.

பவரை (அதிகாரத்தை) கையிலெடுப்போம்! பவரை (மின்சாரத்தை) வரவைப்போம்

அன்பார்ந்த உழைக்கும் மக்களே! பதினாறு மணி நேர மின்வெட்டால் இருண்ட தமிழகத்தில் தினந்தோறும் மக்கள் புழுங்கி சாகிறார்கள். மின்சாரம் இன்றி கண் முன்னே அழியும் பட்டறை, விசைத்தறி, மற்றும் சிறு குறுந்தொழில் நிறுவனங்கள், தண்ணீரின்றி கருகும் பயிர்கள், கண்ணீரிலும் கடனிலும் தத்தளிக்கும் விவசாயங்கள், தூக்கமின்றி தவிக்கும் நோயாளிகள், முதியவர்கள். தூங்காமல் அழும் குழந்தைகள், வேலையிழந்து, இரவில் தூக்கமிழந்து பட்டினிச்சாவை நெருங்கும் லட்சக்கணக்கான கூலி தொழிலாளி வர்க்கம். நாள்தோறும் டெங்குவிற்கு பலியாகும் எண்ணற்ற அப்பாவி உழைக்கும் மக்கள். எப்போது … பவரை (அதிகாரத்தை) கையிலெடுப்போம்! பவரை (மின்சாரத்தை) வரவைப்போம்-ஐ படிப்பதைத் தொடரவும்.

உணவுப் பாதுகாப்பு சட்டம்: உணவை வழங்குவதற்கா? பறிப்பதற்கா?

கடந்த வாரத்தில் அமைச்சரவை கூடி உணவுப் பாதுகாப்பு சட்டத்தை கொண்டுவருவதிலுள்ள சிக்கல்களை களைவது குறித்து விவாதித்தது. வறிய மக்கள் அனைவருக்கும் உணவு கிடைப்பதை உறுதி செய்யும் விதத்தில் இந்த சட்டம் நடைமுறைப் படுத்தப்படும் என்று அரசு கூறுகிறது. ஓரிரு மாதங்களுக்கு முன்னர் தான் கிடங்குகளில் சேமிக்கப்பட்டிருக்கும் உணவு தானியங்கள் வீணாய் கெட்டுப் போனாலும் போகலாமேயன்றி ஏழைகளுக்கு அதை வழங்க முடியாது என்று மண்மோகன் சிங் முழங்கியிருந்தார். அப்படியிருக்க திடீரென்று என்ன மாற்றம் எப்படி நேர்ந்தது? மாற்றமோ மாறுதலோ … உணவுப் பாதுகாப்பு சட்டம்: உணவை வழங்குவதற்கா? பறிப்பதற்கா?-ஐ படிப்பதைத் தொடரவும்.

ஊழலை ஒளிக்க உருளும் ரத யாத்திரைகள்

இன்றைய தேதியில் இந்தியாவில் ஊழல் தான் செல்லுபடியாகும் சரக்கு. அதனால் தான் அன்னா ஹஸாரே முதல் அத்வானி வரை அதைக் கொண்டு கல்லா கட்ட துடிக்கிறார்கள்.  இவர்களின் ஊழல் ஒழிப்பு நாடகங்களில், ஊழல் ஒழிப்பைத் தவிர மற்ற எல்லாம் இருக்கிறது.  ஏற்கனவே அயோத்தியில் ராமனுக்கு கோவில் கட்ட ரத யாத்திரை நடத்தி பலருக்கு கல்லறை கட்டிய அனுபவம் இருப்பதால் இப்போது ஊழலுக்கு கல்லறை கட்ட ரத யாத்திரை நடத்தி அதற்கு கோவில் கட்டி எழுப்புவார் என எதிர்பார்க்கலாம். … ஊழலை ஒளிக்க உருளும் ரத யாத்திரைகள்-ஐ படிப்பதைத் தொடரவும்.

தேர்தல் சதுரங்கம்: காய் நகர்த்தும் கட்சிகள், வெட்டுப்படும் மக்கள்

வந்துவிட்டது தேர்தல் திருவிழா. சோம்பிக்கிடந்த தமிழகம் உதறி எழுந்து திரிகிறது. எல்லா இடங்களிலும் அரசியல்(!) அலசி உலர்த்த‌ப்படுகிறது. அணி மாற்றங்கள், கூட்டணிக் கணக்குகள், தொகுதி இழுபறிகள், வாக்காளர் புள்ளிவிபரங்கள், கட்சிக் கணிப்புகள் என எல்லோரும் தம் மனதுக்குகந்த கணக்குகளில் ஆழ்ந்திருக்கிறார்கள். கடந்து சென்ற இடைத்தேர்தல்களின் புண்ணியத்தில் பொதுத்தேர்தலை மிகுந்த ஆர்வத்துடன் எதிர்பார்க்க வைத்துவிட்டார்கள் பணநாயக ஓட்டுத்தலைவர்கள். நாங்களும் செயல்படுகிறோம் என அங்கொன்றும் இங்கொன்றுமாய் பணத்தையும், பொருட்களையும் பறிமுதல் செய்யும் தேர்தல் கமிசன் மீது 'குடி'மக்கள் தாக்குதல் தொடுக்க … தேர்தல் சதுரங்கம்: காய் நகர்த்தும் கட்சிகள், வெட்டுப்படும் மக்கள்-ஐ படிப்பதைத் தொடரவும்.