முகம்மது சொல்லிய சாத்தானின் வசனங்கள் 1

சல்மான் ருஸ்தி என்றொரு அற்பவாத ஆங்கில எழுத்தாளரை அறியாதவர்கள் குறைவு. தமிழில் வாசிக்கும் பழக்கமே இல்லாதவர்களைக் கூட ஆங்கில எழுத்தாளர் ஒருவரை மறக்க முடியாமல் நினைவில் வைத்திருக்க முடிந்திருக்கிறதென்றால் அதற்கு “சத்தானிக் வெர்ஸஸ்” எனும் நூலே காரணம். அதற்காகவே ஈரானின் கொமேனியால் மரண தண்டனை விதிக்கப்பட்டு இன்றுவரை அரசுகளின் தயவிலும், வெளிப்படையாக உலவ முடியாமலும் இருந்து வருகிறார். அப்படி என்ன தான் எழுதிவிட்டார் அவர் அந்த நூலில்? இந்தியா உட்பட பல நாடுகள் அந்நூலுக்கு தடை விதித்திருப்பதால் … முகம்மது சொல்லிய சாத்தானின் வசனங்கள் 1-ஐ படிப்பதைத் தொடரவும்.

அல்லாவின் சட்டங்கள் எக்காலத்துக்கும் பொருத்தமானவைகளா? 3. சொத்துரிமை சட்டம்

சொத்துரிமை எனும் சொல்லுக்கு பொருள் தெரியாதவர்கள் பெரும்பாலும் இருப்பதற்கு வாய்ப்பில்லை. தனியுடமையின் பொருளை உணர்த்துவதற்கு உதவும் மிகத் துல்லியமான சொல் சொத்துரிமை. தான் அனுபவிக்கும் உடமையின் வசதிகளை தனக்குப் பின் தன்னுடைய வாரிசுகளுக்கு கடத்துவது தான் சொத்துரிமை. ஆனால் வாரிசு என்பது யார்? எந்த அடிப்படையில் அவர்களுக்கு கடத்துவது என்பதற்கு உலகின் ஒவ்வொரு சமுதாயத்துக்கும் மரபு சார்ந்து வெவ்வேறு வழிமுறைகள் இருக்கின்றன. அவர்கள் கொண்டிருக்கும் நம்பிக்கை தொடங்கி வாழ்ந்து கொண்டிருக்கும் கலாச்சார விழுமியங்கள் வரை அனைத்தும் சேர்ந்தே … அல்லாவின் சட்டங்கள் எக்காலத்துக்கும் பொருத்தமானவைகளா? 3. சொத்துரிமை சட்டம்-ஐ படிப்பதைத் தொடரவும்.

பேசுதற்கெளிய பண்டம் மட்டுமா பெண்ணியம்?

சூரியன் உதிப்பதைப்போல், காற்று வீசுவதைப்போல் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கும் செயல் என்று கம்யூனிசத்தின் மீதான அவதூறுகளைக் கூறலாம். அந்த அளவுக்கு குப்பை வீசியே மறைத்துவிடும் எத்தனத்தில் விதவிதமான புனைவுகளும், பொருளற்ற பொய்களும், பொருந்தா விளக்கங்களும் நாளும் பொழிந்து கொண்டே இருக்கின்றன. இது போன்ற அவதூறுகளுக்கு விளக்கமளிக்க முனைந்தால், வேறு எதையும் செய்யமுடியாத அளவுக்கு கம்யூனிஸ்டுகளின் நேரம் அவர்களுடையதாக இருக்காது. அதேநேரம் அத்தனை அவதூறுகளுக்கும் மறுக்கவியலா முறையில் தகர்ப்புகளும், தரவுகளும் தரப்பட்டிருக்கின்றன. என்றாலும் அவதூறுகளுக்கான தேவை குறைவதே இல்லை. … பேசுதற்கெளிய பண்டம் மட்டுமா பெண்ணியம்?-ஐ படிப்பதைத் தொடரவும்.