பாராளுமன்ற முறை, ஜனநாயகம், ஓட்டுக் கட்சிகள் போன்ற விமர்சனங்களையும், யார் வென்றாலும் தோற்கப் போவது மக்கள் தான் போன்ற பொதுமைகளையெல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு சொல்லுங்கள். கடந்த ஐந்து ஆண்டு கால அதிமுகவின் ஆட்சியை மக்கள் அமைதியாக அங்கீகரித்திருக்கிறார்கள் என்று எடுத்துக் கொள்ளலாமா? திரு. மணி கேள்வி பதில் பகுதியில் நண்பர் மணி, பாராளுமன்ற முறை மீது வைக்கப்படும் விமர்சனங்கள், தோற்கப் போவது மக்கள் தாம் என்பதெல்லாம் நாங்கள் கூறுபவை என்பதைத் தாண்டி அவை சமூகத்தில் நிலவும் யதார்த்தம் … அதிமுக வெற்றி மக்கள் முடிவா?-ஐ படிப்பதைத் தொடரவும்.
குறிச்சொல்: தமிழகம்
தேர்தல் சதுரங்கம்: காய் நகர்த்தும் கட்சிகள், வெட்டுப்படும் மக்கள்
2011 தேர்தலின் போது எழுதப்பட்ட பதிவு இது. காலம் கடந்திருக்கிறது. ஆனால், நிலமை இன்னும் அது தானே. எனவே, மீள்பதிவு. ************************************************************ வந்துவிட்டது தேர்தல் திருவிழா. சோம்பிக்கிடந்த தமிழகம் உதறி எழுந்து திரிகிறது. எல்லா இடங்களிலும் அரசியல்(!) அலசி உலர்த்தப்படுகிறது. அணி மாற்றங்கள், கூட்டணிக் கணக்குகள், தொகுதி இழுபறிகள், வாக்காளர் புள்ளிவிபரங்கள், கட்சிக் கணிப்புகள் என எல்லோரும் தம் மனதுக்குகந்த கணக்குகளில் ஆழ்ந்திருக்கிறார்கள். கடந்து சென்ற இடைத்தேர்தல்களின் புண்ணியத்தில் … தேர்தல் சதுரங்கம்: காய் நகர்த்தும் கட்சிகள், வெட்டுப்படும் மக்கள்-ஐ படிப்பதைத் தொடரவும்.
வறளும் காவிரி, வற்றாத சிக்கல்கள்
சில ஆண்டுகளாக மேல்மட்டத்துக்கு வராமல் அடங்கியிருந்த காவிரிச் சிக்கல் இந்த ஆண்டு மீண்டு வந்திருக்கிறது. மேட்டூர் அணையில் போதிய தண்ணீர் இருப்பு இல்லாததால் குறுவை சாகுபடிக்காக வழக்கமாக திறக்க வேண்டிய நேரத்தில் தண்ணீர் திறந்து விடப்படவில்லை. காவிரியில் தண்ணீர் திறந்து விடப்பட வேண்டும் எனும் விவசாயிகளின் குரல் எப்போதும் போல கன்னடத்தின் முறுக்கலாய் முடிந்திருக்கிறது. சில ஆண்டுகளாய் கூட்டப்படாமலிருந்த காவிரி நதிநீர் ஆணையத்தை கூட்ட வைப்பதற்கே நீதிமன்றத்தை நாட வேண்டிய அவலம் நேர்ந்தது. காவிரி … வறளும் காவிரி, வற்றாத சிக்கல்கள்-ஐ படிப்பதைத் தொடரவும்.
கல்வி தனியார்மய ஒழிப்பு மாநாடு
கல்வியில் தனியார்மயத்தை ஒழித்தாலே உயர்ரக கல்வி வரை அனைவரும் இலவசமாக கல்வி பெற முடியும்! நக்சல்பாரி பாதையில் புதிய ஜனநாயகப் புரட்சியே இதற்கு ஒரே வழி! அன்பார்ந்த மாணவர்களே, பெற்றோர்களே, உழைக்கும் மக்களே, குறைந்த கட்டண நிர்ணயம், தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கு 25 சதவீதம் இட ஒதுக்கீடு என்பதெல்லாம் இருக்கின்ற அரசுப் பள்ளிகளையும் ஒழித்து தனியார் பள்ளிகளை ஊக்குவிக்கவே. தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்ற பெயரில் கடந்த 20 ஆண்டுகளாக புகுத்தப்பட்டு வரும் … கல்வி தனியார்மய ஒழிப்பு மாநாடு-ஐ படிப்பதைத் தொடரவும்.
பெயரில் குடியரசு செயலில் முடியரசு
வரிசையான பண்டிகை கொண்டாட்டங்களுக்கு மத்தியில் இன்னுமொரு பண்டிகையாக வந்திருக்கிறது குடியரசு தினம். ஆனால் ஏனைய பண்டிகைகளை விட இந்த பண்டிகைக்கு அரசு காட்டும் முனைப்பு மக்களிடையே பீதியூட்டுவதாக இருக்கும். தொடர்ந்து அப்படித்தான் இருந்து கொண்டிருக்கிறது. குடிமக்களுக்கான அரசு இது அதை குலைப்பதற்காக தீவிரவாதிகள் முயல்கிறார்கள், அவர்களிடமிருந்து மக்களை பாதுகாக்கவே இத்தகைய கெடுபிடிகள் என்பது வழக்கமாக அரசு கூறும் காரணம். சென்னையில் மட்டும் கடந்த சில நாட்களில் 800 க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தியாவெங்கும் பாதுகாப்பு … பெயரில் குடியரசு செயலில் முடியரசு-ஐ படிப்பதைத் தொடரவும்.
முல்லை பெரியாறு: கேரள அடாவடியும் தமிழகத்தில் எழுச்சியும்
நீறு பூத்து கனன்று கொண்டிருந்த முல்லைப் பெரியாறு அணை பிரச்சனையை கேரளாவில் நடக்கவிருக்கும் இடைத்தேர்தல் விசிறிவிட்டு வெடித்துப் பரவச் செய்திருக்கிறது. எதிர்க்கட்சியும் ஆளும்கட்சியும் சம எண்ணிக்கையில் இருக்கும் கேரள சட்டமன்றத்தில் வரப்போகும் ஒரு தொகுதிக்கான இடைத்தேர்தல் அவைகளுக்கான இழுபறியை வாழ்வா சாவா நிலைக்கு கொண்டு வந்து விட, இரண்டுக்குமே முல்லை பெரியாறு ஆயுதமாகி இருக்கிறது. ஓட்டுக்கட்சி பன்றித் தொழுவத்தில் களறியிடுவது என்று ஆனபின் கம்யூனிஸ்டுகள் என்று பெயரை மட்டும் தாங்கியிருப்பதால் கட்சி நிலைபாடு குறித்து பரிசீலனை ஏற்பட்டுவிட … முல்லை பெரியாறு: கேரள அடாவடியும் தமிழகத்தில் எழுச்சியும்-ஐ படிப்பதைத் தொடரவும்.
சீல் வைக்கப்பட்ட கடைகளும், சீல் வைக்கப்படாத பாராட்டுகளும்
சில நாட்களுக்கு முன்னர் சென்னை தியாகராய நகரிலுள்ள சென்னை சில்க்ஸ், சரவணா ஸ்டோர்ஸ் உட்பட பல வணிக வளாகங்கள் கட்டிட விதிமுறைகளை மீறி கட்டப்பட்டிருப்பதால் இழுத்து மூடப்பட்டன. இதற்கு முன்னரும் இதுபோன்ற சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன. அவ்வப்போது இதுபோன்ற கண்துடைப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படுவதும், அபராதம் வசூலித்துவிட்டு கண்டுகொள்ளாமல் விடுவதும் தொடர்ந்தே வந்திருக்கிறது. ஒவ்வொருமுறை இதுபோன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும் போதும் அதற்கு உடந்தையாக இருந்த அதிகாரிகள், அரசியல்வாதிகள், பின்னணிகள் மீது எந்த விசாரணைகளும் மேற்கொள்ளப்படுவதில்லை. ஆனால் இந்தமுறை … சீல் வைக்கப்பட்ட கடைகளும், சீல் வைக்கப்படாத பாராட்டுகளும்-ஐ படிப்பதைத் தொடரவும்.
தேர்தல் சதுரங்கம்: காய் நகர்த்தும் கட்சிகள், வெட்டுப்படும் மக்கள்
வந்துவிட்டது தேர்தல் திருவிழா. சோம்பிக்கிடந்த தமிழகம் உதறி எழுந்து திரிகிறது. எல்லா இடங்களிலும் அரசியல்(!) அலசி உலர்த்தப்படுகிறது. அணி மாற்றங்கள், கூட்டணிக் கணக்குகள், தொகுதி இழுபறிகள், வாக்காளர் புள்ளிவிபரங்கள், கட்சிக் கணிப்புகள் என எல்லோரும் தம் மனதுக்குகந்த கணக்குகளில் ஆழ்ந்திருக்கிறார்கள். கடந்து சென்ற இடைத்தேர்தல்களின் புண்ணியத்தில் பொதுத்தேர்தலை மிகுந்த ஆர்வத்துடன் எதிர்பார்க்க வைத்துவிட்டார்கள் பணநாயக ஓட்டுத்தலைவர்கள். நாங்களும் செயல்படுகிறோம் என அங்கொன்றும் இங்கொன்றுமாய் பணத்தையும், பொருட்களையும் பறிமுதல் செய்யும் தேர்தல் கமிசன் மீது 'குடி'மக்கள் தாக்குதல் தொடுக்க … தேர்தல் சதுரங்கம்: காய் நகர்த்தும் கட்சிகள், வெட்டுப்படும் மக்கள்-ஐ படிப்பதைத் தொடரவும்.
தமிழக மீனவர்களை கொல்லச்சொல்வது இந்திய அரசுதான்.
கடந்த ஏழாம்தேதி இரவு கோடியக்கரைக்கு தென்கிழக்கே கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த வேதாரண்யம் பகுதியைச் சேர்ந்த மீனவர் செல்லப்பன் என்பவர், இலங்கை கடற்படையினரால் அடித்துக் கொல்லப்பட்டிருக்கிறார். கடந்த காலங்களில் நாநூறுக்கும் மேற்பட்ட மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கொல்லப்பட்டிருக்கின்றனர். படகுகளை சேதம் செய்வதும், வலைகளை அறுத்தெறிவதும், மீனவர்களை துன்புறுத்துவதும் கொல்வதும் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன. கருணாநிதி 3 லட்சம் கொடுத்தர், கண்டனக் கூட்டம் நடத்தினார், கடிதம் எழுதினார். வைகோ 25 ஆயிரம் கொடுத்தார். ஜெயலலிதா பதவி விலகச் சொன்னார். நாளிதழ்கள் இரண்டு நாள் … தமிழக மீனவர்களை கொல்லச்சொல்வது இந்திய அரசுதான்.-ஐ படிப்பதைத் தொடரவும்.
மீனவர்கள் வலையில் சிக்காத கச்சத்தீவு.
மீனவர்கள் வலையில் சிக்காத கச்சத்தீவு. மீண்டும் கச்சத்தீவு செய்திகளில் முக்கியத்துவம் பெறத்தொடங்கிவிட்டது. 1974ல் தொடங்கி இன்றுவரை ஓட்டுக்கட்சிகளுக்கு ஒரு உபரி வசதி போல் தேவைப்பட்டால் கைக்கொள்ளும் பிரச்சனை போல் இருந்துவருகிறது. தற்போது இலங்கையில் இனவெறிப்போர் முடிந்து விடுதலைப்புலிகளை அழித்துவிட்டோம் என்று அறிவிக்கப்பட்டுவிட்ட பின்னரும்; தமிழக மீனவர்களை சிங்கள ராணுவம் தாக்குவதும் சுட்டுவீழ்த்துவதும் தொடர்ந்து கொண்டிருப்பதால், கச்சத்தீவை மீட்பதன் அவசியம் குறித்த சொல்லாடல்கள் உலவத் தொடங்கியிருக்கின்றன. நூற்றுக்கணக்கான மீனவர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட போதினிலும், தினம் தினம் மீனவர்கள் தாக்குதலுக்குள்ளாகி வாழ்வு … மீனவர்கள் வலையில் சிக்காத கச்சத்தீவு.-ஐ படிப்பதைத் தொடரவும்.