அண்மையில் சென்னை சென்றிருந்த போது பழங்காசு. சீனிவாசன் ஐயாவை சந்தித்திருந்தேன். அதுவரை, அவரின் சேகரிப்பில் அரிய நூல்கள் பல இருக்கின்றன என்பது தெரியும் என்றாலும், நேரில் பார்த்த போது பெருவியப்பாக இருந்தது. எத்தனையெத்தனை தலைப்புகளில், எவ்வளவு நூல்கள் .. .. ஒரு தனி மனிதரால் சாத்தியமா? என்பதைவிட அவரின் மன ஓட்டம், அதற்கு முழுமையாய் ஒத்துழைக்கும் அவரின் குடும்ப உறுப்பினர்கள் என யாராலும் வியக்காமல், நம்மிடம் இது போன்ற உத்வேகம் இல்லையே எனும் ஏக்கம் எழாமல் தவிர்க்கவே … 35 ஆயிரம் புத்தகங்கள்-ஐ படிப்பதைத் தொடரவும்.
குறிச்சொல்: தமிழ் இந்து
எவ்வளவு கொழுப்புடா உங்களுக்கு?
இன்றைய (15 பிப்ரவரி 2020 சனிக்கிழமை) தமிழ் இந்து நாளிதழின் கூட வரும் சொந்த வீடு இணைப்பிதழின் முதல் பக்கத்தில் பயோ செப்டிக் டேங்க் விளம்பரம் ஒன்று வெளியிடப்பட்டிருக்கிறது. அதன் வாசகங்களைப் பாருங்கள். .. .. .. இந்த அசுத்தத்தின் மூலம் அசுரர்கள் நாம் குடிக்கும் நீர், உண்ணும் உணவு, சுவாசிக்கும் காற்று மூலம் நம் உடலில் புகுந்து ஆதிக்கம் செய்து .. .. .. .. .. .. நம் வேதத்தில் கண்டுள்ள முறைப்படி தேவ … எவ்வளவு கொழுப்புடா உங்களுக்கு?-ஐ படிப்பதைத் தொடரவும்.
நூலகம்: அறிவு வளங்களை பாதுகாப்போம்
சிறு வயதில் ஒருவன் கற்கும் நூல்களே பின்னர் அவனை ஆற்றுப்படுத்துகின்றன, அவனுக்கான கண்ணோட்டத்தை வந்தடைய உதவுகின்றன. வழி நடத்தும் தோழனாகின்றன. நூல்களின் சுவை கண்ட யாரும் ஒற்றை ஒரு நாளேனும், இந்த வாசிப்புப் பழக்கத்தை மக்களிடம் எப்படி ஏற்படுத்துவது என்று சிந்திக்காமல் இருந்திருக்க முடியாது. அந்த அளவுக்கு சரியான நூல்கள் மக்களின் உள்ளொளியை பற்றிக் கொள்கின்றன. இதை விரிவாக்குவதும், அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு கடத்துவதும் யார் பொறுப்பு? ஐயம் சிறிதும் இல்லாமல், இது அரசின் கடமையே. ஆனால் அரசு … நூலகம்: அறிவு வளங்களை பாதுகாப்போம்-ஐ படிப்பதைத் தொடரவும்.
அம்பேத்கர், குஹா, தமிழ் இந்து, சாதியம்: ஏதாவது புரிகிறதா?
சாதியப் பிரச்சனைக்குத் தீர்வு: புத்தர் போதாது, அம்பேத்கரும் போதாது, மார்க்ஸ் அவசியத் தேவை எனும் நூல், ரங்கநாயகம்மா என்பவர் எழுதி கொற்றவை தமிழில் மொழி பெயர்த்து அண்மையில் வெளிவந்தது. இதனைத் தொடர்ந்து அம்பேத்கர் மீதான விமர்சனம் எனும் பெயரில் முன்கூட்டியே திட்டமிடப்பட்ட நிகழ்ச்சிநிரல்கள் வரிசையாக வலம் வந்து கொண்டிருக்கிறதோ என்று ஐயுறும் வண்ணம் நிகழ்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன. அம்பேத்கர் மீதான விமர்சனம் மெல்ல மார்க்ஸுடனான ஒப்பீடாக மாறியது. பின் அம்பேத்கரா மார்க்ஸா என்று உருவெடுத்தது. தொடர்ந்து அது … அம்பேத்கர், குஹா, தமிழ் இந்து, சாதியம்: ஏதாவது புரிகிறதா?-ஐ படிப்பதைத் தொடரவும்.
உக்ரைன் பிரச்சனையில் மூக்குடைபட்டது யார்?
உக்ரைன் – உண்மைகளை மறைக்கும் ‘தமிழ் இந்து’ தொடர் – 6 தமிழ் இந்துவின் உக்ரைன் தொடரைப் படிக்க உக்ரைன் தொடரை, ‘தமிழ் இந்து’ கீழ்க்கண்டவாறு முடித்திருக்கிறது. "தன்னுடைய எல்லையைப் பல்வேறு திசைகளில் அதிகரித்துக் கொள்ள ரஷ்யா முயற்சி செய்கிறது. முதலில் ஜார்ஜியா, அடுத்ததாக கிரிமியா இப்போது கிழக்கு உக்ரைன். உக்ரைனிலேயே ரஷ்ய ஆதரவாளர்கள் கணிசமாக இருப்பதால் பிரச்சினை இப்போ தைக்குத் தீரப் போவதில்லை" அதாவது ரஷ்யா ஒவ்வொரு நாடாக ஆக்கிரமித்து வருவதால் … உக்ரைன் பிரச்சனையில் மூக்குடைபட்டது யார்?-ஐ படிப்பதைத் தொடரவும்.
பொய்மை நின்றிட வேண்டும் – தமிழ் இந்துவின் முழக்கம்
உக்ரைன் - உண்மைகளை மறைக்கும் ‘தமிழ் இந்து’ தொடர் - 5 தமிழ் இந்துவின் உக்ரைன் தொடரைப் படிக்க தொடரின் கடந்த பகுதியில் உக்ரைன் பிரச்சனையின் மையம் என்ன என்பதைப் பார்த்தோம். இன்னும் சற்று நுணுக்கமாக அதைப் பார்க்கலாம். 2004 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்ற ரஷ்யா ஆதரவு அதிபர் யனுகோவிச், மேற்கத்திய நாடுகளின் ‘திட்டமிட்ட’ கலவரங்கள் மூலம் தூக்கி வீசப்பட்டு அமெரிக்க, ஐரோப்பிய ஆதரவாளரான யுஷென்கோ பதவியில் அமரவைக்கப்பட்டார். ஆனால் மீண்டும் … பொய்மை நின்றிட வேண்டும் – தமிழ் இந்துவின் முழக்கம்-ஐ படிப்பதைத் தொடரவும்.
‘தமிழ் இந்து’வின் விசமத்தனம்
உக்ரைன் - உண்மைகளை மறைக்கும் ‘தமிழ் இந்து’ தொடர் - 4 தமிழ் இந்துவின் உக்ரைன் தொடரைப் படிக்க உக்ரைன் தொடர் நான்காம் பகுதியில் உக்ரைன் பிரச்சனையின் மையத்தை, வழக்கம் போல உண்மைக்கு எதிரான தன்மையிலிருந்து அலசியிருக்கிறது ‘தமிழ் இந்து’ உக்ரைன் பிரச்சனையில் அமெரிக்கா ஏன் தலையிட வேண்டும் என்பதற்கு ரஷ்யாவின் அதிகாரம் அதிகமாவதை அதனால் சகித்துக் கொள்ள முடியாது என்று பதிலளித்திருந்தது ‘தமிழ் இந்து’ இந்த அறுவறுப்பான பொய்யை புரிந்து கொள்ள உக்ரைன் பிரச்சனையை பல … ‘தமிழ் இந்து’வின் விசமத்தனம்-ஐ படிப்பதைத் தொடரவும்.
‘தமிழ் இந்து’வின் அமெரிக்க ஆவர்த்தனம்
உக்ரைன் - உண்மைகளை மறைக்கும் ‘தமிழ் இந்து’ தொடர் - 3 தமிழ் இந்துவின் உக்ரைன் தொடரைப் படிக்க தமிழ் இந்து வின் உக்ரைன் தொடர் மூன்றாம் பகுதியில் சோவியத் யூனியன் சிதறுண்டதை விவரித்திருக்கிறது, தன்னுடைய வழக்கமான வேலையுடன். முன்னதாக இரண்டாம் பகுதியின் கடைசியில், \\\சோவியத் யூனியன் என்பது பல குடியரசுகளைக் கொண்டது. அவை ஒவ்வொன்றும் ஒரு காலத்தில் தனித்தனி நாடுகளாக இருந்தன. தன் அதீத வலிமையால் அவை ஒவ்வொன்றையும் தன் பிடிக்குள் கொண்டு வந்திருந்தது ரஷ்யா … ‘தமிழ் இந்து’வின் அமெரிக்க ஆவர்த்தனம்-ஐ படிப்பதைத் தொடரவும்.
பொய் சொல்லக் கூட தெரியாத ‘தமிழ் இந்து’ நாளிதழ்
உக்ரைன் - உண்மைகளை மறைக்கும் ‘தமிழ் இந்து’ தொடர் - 2 தமிழ் இந்துவின் உக்ரைன் தொடரைப் படிக்க இத் தொடரின் முதல் பகுதியில் சோவியத் புரட்சியை, இந்தியாவில் சர்தார் வல்லபபாய் படேல் பல குறுநில மன்னர்களை இராணுவ பலத்தின் மூலம் மாநிலங்களாக இந்தியாவுடன் இணைத்ததைப் போன்ற தோற்றம் கொண்டு வருவதற்கு ‘பகீரதப் பிரயத்தனம்’ செய்திருந்தார்கள் என்பதை எடுத்துக் காட்டியிருந்தோம். இதற்கு மேலும் வலு கூட்டுவதற்காக அத் தொடரின் இரண்டாவது பகுதியில் இப்படி எழுதியிருக்கிறார்கள், \\\ரஷ்யப் புரட்சியின்போது … பொய் சொல்லக் கூட தெரியாத ‘தமிழ் இந்து’ நாளிதழ்-ஐ படிப்பதைத் தொடரவும்.
உக்ரைன் – உண்மைகளை மறைக்கும் ‘தமிழ் இந்து’
தமிழ் இந்துவின் உக்ரைன் தொடரைப் படிக்க உக்ரைன். ஒரு சில மாதங்களுக்கு முன்பு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனையாக உலகின் முன் இருந்தது. இன்றைய செய்திகளின் நிகழ்ச்சி நிரலில் உக்ரைன் இப்போது இல்லை. என்றாலும் உக்ரைன் தொடர்பான பேச்சு வார்த்தைகள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்த உக்ரைன் பிரச்சனை தொடர்பாக கடந்த இரண்டாம் தேதியிலிருந்து தமிழ் இந்து நாளிதழில் ஆறு நாட்கள் தொடராக ஒரு கட்டுரை வெளியானது. அந்தக் கட்டுரைத் தொடர் வாசகர்களுக்கு உக்ரைன் பிரச்சனை குறித்த செய்திகளை … உக்ரைன் – உண்மைகளை மறைக்கும் ‘தமிழ் இந்து’-ஐ படிப்பதைத் தொடரவும்.