நாம் திராவிட மரபைச் சேர்ந்தவர்கள்

கம்யூனிஸ்ட் எனும் அடிப்படையில் நான் ஒரு சர்வதேசியவாதி. வரலாற்றியல் பொருள்முதல்வாத அடிப்படையைத் தாண்டி, இனம், தேசியம் குறித்தெல்லாம் எனக்கு மயக்கங்கள் எதுவும் இல்லை. என்றாலும், நடப்பில் நடந்து கொண்டிருக்கும் விவாதம் என்ற விதத்தில், பார்ப்பனியத்துக்கு எதிர்க் கருத்தியல் என்ற முறையிலும், மக்களை மயக்கும் புதிய தமிழ்த்தேசியர்களுக்கு எதிர்க்கருத்தியல் எனும் முறையிலும், இதை உவந்து இங்கே பதிகிறேன். “நாம் திராவிட மரபைச் சேர்ந்தவர்கள்” WE BELONG TO DRAVIDIAN STOCK கரோனா என்னும் பெருந்தொற்று பரவிக் கொண்டிருக்கின்ற இந்நேரத்தில், … நாம் திராவிட மரபைச் சேர்ந்தவர்கள்-ஐ படிப்பதைத் தொடரவும்.

இந்தியா ஓர் இந்துத்துவ கட்டமைப்பு

நானும் ஒரு காலத்தில் இந்தியத்தில் கரைந்து போன பாரத பக்தன், ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் தீவிர உறுப்பினன். சொல்லப் போனால் பாபர் மசூதி இடிக்கச் சென்ற சங் பரிவார் கூட்டத்துடன் பங்கேற்க விரும்பியவன் .. .. .. பெரியார் தான் என் நெஞ்சை விட்டு பார்ப்பனிய நஞ்சை உறிஞ்சி எடுத்தார்

இந்திய ஆக்கிரமிப்பின் கரங்கள்

இலங்கைப் பிரச்சனை அல்லது தமீழீழப் பிரச்சனை அல்லது விடுதலைப் புலிகள் பிரச்சனை என்பதை அதற்காக போராடும் அமைப்புகளும், மக்களும் - இலங்கையில் இருக்கும் அமைப்புகளானாலும் தமிழகத்தில் இருக்கும் அமைப்புகளானாலும் - எப்படிப் பார்க்கிறார்கள் என்பது முதன்மையான விசயம். இராஜீவ் காந்திக்கு முன் இராஜீவ் காந்திக்குப் பின் என்று பிரித்துப் பார்ப்பவர்கள் உண்டு. அவர்களைப் பொருத்தவரையில் இராஜீவ் கொலை நடந்திராவிட்டால் .. .. .. என்றொரு கற்பனாவாதமே அனைத்திற்குமான மையப் புள்ளி. இலங்கையில் சீனா ஊடுருவிக் கொண்டிருக்கிறது. இந்தியா … இந்திய ஆக்கிரமிப்பின் கரங்கள்-ஐ படிப்பதைத் தொடரவும்.

ஆடு தாண்டும் காவிரியை மக்கள் தாண்டினால் .. .. ..

காவிரியின் குறுக்கே மேக்கே தாட்டு (ஆடு தாண்டும் காவிரி) எனும் இடத்தில் அணை கட்டுவது தொடர்பாக கர்நாடக அரசியல்வாதிகள் தொடர்ந்து பேசி வருகிறார்கள். இதற்கு எதிராக சில நாட்களுக்கு முன்னர் தமிழகத்தில் ஒரு நாள் கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. தமிழகம் முழுவதிலும் இப்போராட்டம் வெற்றிகரமாக நடந்தது. பெரும்பாலான இடங்களில் முழுவதுமாக கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. என்றாலும், மக்களின் உணர்வுபூர்வமான பங்களிப்புடன் நடந்தது என்று கூற முடியவில்லை. ஏன் இது உணர்வுபூர்வமான பிரச்சனை இல்லையா? தமிழகம் கடைமடை மாநிலமாக இருப்பதன் … ஆடு தாண்டும் காவிரியை மக்கள் தாண்டினால் .. .. ..-ஐ படிப்பதைத் தொடரவும்.

ஒரு பெண் புலியின் குமுறல் உணர்த்தும் புரிதல்கள்

  அண்மையில் ஆனந்த விகடன் இதழில் “ஒரு பெண் போராளியின் மனக் குமுறல்” என்ற தலைப்பில் ஒரு பெண் புலியின் செவ்வி வெளியாகியிருந்தது. பரவலாக கவனத்தை ஈர்த்த, அதிர்வலைகளை ஏற்படுத்திய கட்டுரையாக அது இருந்தது. அந்த செவ்வியின் மெய்த்தன்மையில் எனக்கு ஐயம் உண்டு. அது புனைவாகக் கூட இருக்கலாம். அதன் நோக்கம் பரிதாபம் காட்டுவது எனும் போர்வையிலான கேவலப்படுத்தலாகக் கூட இருக்கலாம். ஏனென்றால், உயிருடன் கைது செய்யப்பட்ட ஈழப் புலிப் போராளிகள் கைக்கூலிகளாக செயல்பட ஒப்புக் கொண்ட … ஒரு பெண் புலியின் குமுறல் உணர்த்தும் புரிதல்கள்-ஐ படிப்பதைத் தொடரவும்.