தமிழர்களின் புத்தாண்டு தையிலா அல்லது சித்திரையிலா என்ற ஒரு வழக்காடல் நீண்ட காலமாகவே நடைபெற்று வருகின்றது. அது தொடர்பான ஒரு பார்வையாகவே இக் கட்டுரை அமைகின்றது. முதலில் தமிழர்களிடம் ஆண்டு என்றொரு காலக்கணிப்பு முறை இருந்ததா? எனப் பார்ப்போம். ‘யாண்டு’ என்ற பழந்தமிழ்ச் சொல்லே மருவி ஆண்டு என வழங்கலாயிற்று. யாண்டு என்ற சொல்லானது தொல்காப்பியத்தின் முதற்பொருளான நிலம், பொழுது ஆகிய இரண்டையும் குறிக்கும். ‘யாண்டு’ என்ற சொல் இடம்பெற்ற சில பாடல்களைப் பார்ப்போம். “வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்குயாண்டும் இடும்பை இல.” (குறள் 4) … தை தான் தமிழ்ப் புத்தாண்டு-ஐ படிப்பதைத் தொடரவும்.
குறிச்சொல்: தமிழ்
அறியப்படாத தமிழ் மொழி
மொழி சார்ந்த மிகையுவப்புகள் (மிகை + உவப்பு = மிகையுவப்பு : பெருமிதம்) உலகெங்கும் உண்டு. ஆனாலும், தமிழர்களின் மிகையுவப்புக்கு அருகில் கூட ஏனையவை ஒரு போதும் நெருங்க முடியாது என்றே தோன்றுகிறது. அதில் தவறும் இல்லை. ஏனென்றால், புதிது புதிதான செய்திகள் அதனுள்ளிருந்து கிளைத்து வந்து கொண்டே இருக்கிறது. திராவிடம் எனும் சொல் குறித்த விவாதங்கல் இங்கு அதிகம். திராவிடம் எனும் சொல்லை தமிழுக்கு எதிராக நிறுத்தி ஒரு கூட்டம் செயல்பட்டுக் கொண்டே இருக்கிறது. திராவிடம் … அறியப்படாத தமிழ் மொழி-ஐ படிப்பதைத் தொடரவும்.
தமிழ் சங்கம் டு காவிச் சங்கம்
காவி கவ்வத் துடிக்கும் இன்றைய சூழலில் இந்த நூல் காவிகள் துரத்தியடிக்கப்பட்ட கதையை கூறுகிறது. ஆழமாக இல்லாமல் மேலோட்டமாக இருப்பது இந்நூலின் பெருங்குறை என்றாலும், ஒரு பருந்துப் பார்வையில் அந்த வரலாற்றை கூறுவதால், இன்றைய இளைஞர்கள் புரிந்து கொள்வதற்கும், ஆழமாக பயணிக்க தூண்டுதலாக அமையலாம் என்பதாலும் இந்நூல் இங்கு பதிவு செய்யப்படுகிறது. இது ஆதனூர் சோழன் எழுதி நக்கீரன் இணையத்தில் தொடராக வெளிவந்தது. முன்னுரையிலிருந்து .. .. .. ஆரியர்களைப் போற்றி சொந்த் மக்களை வாட்டிய காலம் … தமிழ் சங்கம் டு காவிச் சங்கம்-ஐ படிப்பதைத் தொடரவும்.
இந்திப் பூக்களில் தேனிருந்தால், தேனீக்கள் தேடிவரும்!
பலநூறு அரசுகளாக சிதறிக்கிடந்த இத்துணைக் கண்டத்தை ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனி தலைமையில் பிரிட்டானியர்கள் ’இந்தியா’ என்று, தனது துப்பாக்கி முனையால் ஒருங்கிணைத்தார்கள். அது நாள் வரை இந்துக்கள் என்றழைக்கப்படும் நால்வர்ணத்தாரில் பார்ப்பனர்கள் வட இந்தியப் பகுதிகளில் தனது பார்ப்பனிய சித்தாந்தத்தின் மூலம் ஆதிக்கம் செலுத்தி தலைமை சக்தியாக திகழ்ந்து வந்தனர். தென்னிந்தியாவில் அதிலும் குறிப்பாக தமிழ் பேசும் மக்களிடம், தமது பார்ப்பனிய சித்தாந்தத்தை ஆட்சியாளர்கள் மூலம் நிலை நாட்டியிருந்தனர். ஆனாலும் சித்தாந்த மற்றும் அரசியல் தலைமை சக்தியாக … இந்திப் பூக்களில் தேனிருந்தால், தேனீக்கள் தேடிவரும்!-ஐ படிப்பதைத் தொடரவும்.
தீபாவளியைக் கொண்டாடாதீர்
அன்பார்ந்த தொழிலாளர்களே! தீபாவளி எதற்காக கொண்டாடப்படுகிறது? மகாவிஷ்ணுவின் 10 அவதாரங்களில் ஒரு அவதாரத்தின் போது நரகாசுரன் என்ற அசுரன் கொல்லப்பட்டதைக் கொண்டாடுவதே தீபாவளி என்கிறது, வேதமதமாகிய இந்து மதம். யார் இந்த நரகாசுரன்? இரண்யாக்சன் என்றொரு ராட்சசன் பூமியை பாயாகச் சுருட்டி கடலுக்குள் ஒழித்து வைத்து விட்டான். பூமாதேவியை மீட்க மகாவிஷ்ணு பன்றியாக (வராக அவதாரம்) உருவெடுத்து கடலுக்குள் புகுந்து பூமியை மீட்டெடுத்தார். அப்போது விஷ்ணு பூமாதேவியின் மீது காமமுற்றதால், நரகாசுரன் பிறந்தானாம். அவன் தேவர்களைக் கொடுமை … தீபாவளியைக் கொண்டாடாதீர்-ஐ படிப்பதைத் தொடரவும்.
ஆந்திர துப்பாக்கிக் குண்டுகளை விடக் கொடிய குண்டுகள்
கடந்த 7ம் தேதி செம்மரக் கட்டைகளைக் கடத்தினார்கள் என்று கூறி ஆந்திர காவல்துறை ரவுடிகள் 20 தொழிலாளர்களை சுட்டுக் கொன்றார்கள். இந்தக் கொலைகள் போலியாக நடத்தப்பட்ட மோதல் கொலைகள் தாம் என்பது ஐயத்துக்கு இடமற்ற வகையில் தகவல்கள், ஆதாரங்கள் வெளிப்பட்டுள்ளன. இது குறித்து சமூக வலைதளங்களில் பொங்கித் தீர்த்து விட்டார்கள் மக்கள். பழைய செம்மரக் கட்டைகளைக் கிடங்குகளிலிருந்து கொண்டுவந்து பழைய பதிவு எண்களை அழித்துவிட்டு காட்டியிருப்பது தொடங்கி, உடல்களில் தீக்காயங்கள் இருப்பது வரை பல்வேறு ஆதாரங்கள் இவ்வளவு … ஆந்திர துப்பாக்கிக் குண்டுகளை விடக் கொடிய குண்டுகள்-ஐ படிப்பதைத் தொடரவும்.
செம்மொழி மாநாட்டின் ஆரவாரத்தில் அடங்கிப் போனது தமிழ்
எங்கும் செம்மொழி, எதிலும் செம்மொழி. மன்னிக்கவும், எங்கும் செம்மொழி மாநாடு, எதிலும் செம்மொழி மாநாடு. அனைத்து வகை ஊடகங்களும் அரசின் கவனிப்பில் (அல்லது கண்காணிப்பில்) திக்குமுக்காடிப் போய் செம்மொழி மாநாடு என்றே தீர்க்கின்றன. திருவிழாக்கூட்டம் போல் கோவை நிறைந்திருக்கிறது. பல்நாட்டு அறிஞர்கள் ஆய்வேடுகள் சாற்றுகிறார்கள். கலைச்சொற்கள் காற்றில் பரவுகின்றன. அக்கால மன்னர்கள் பரிசில் வழங்கியது போல், அறிஞர்கள் பட்டமும் விருதும் பெறுகிறார்கள். மக்கள் அரங்க அமைப்பையும், ஆரவாரத்தையும் கண்டு பேருவகை அடைகிறார்கள். ஆனால் தமிழ்? ஆய்வேடுகள் ஒப்பிக்கப்பட்டு … செம்மொழி மாநாட்டின் ஆரவாரத்தில் அடங்கிப் போனது தமிழ்-ஐ படிப்பதைத் தொடரவும்.
வழக்குறைஞர்கள் பட்டினிப் போராட்டம்: தமிழ் வாழ்க, தமிழர் மடிக
பத்தாவது நாளாக தொடர்ந்துகொண்டிருக்கிறது வழக்குறைஞர்களின் பட்டினிப் போராட்டம். நீதிமன்றங்களில் வழக்கு மொழியாகவும், அலுவல் மொழியாகவும் தமிழையும் அங்கீகரிக்கவேண்டும் எனும் கோரிக்கையுடன் மதுரையில் தொடங்கிய இந்த பட்டினிப் போர் சென்னை, புதுவை, கோவை, புதுக்கோட்டை என விரிவடைந்து கொண்டிருக்கிறது. பல்வேறு அமைப்புகளும், மக்களும் ஆதரவளித்து வருகிறார்கள். தமிழ் மொழி பேசும் மக்கள் வாழும் மாநிலத்தில் தமிழ் மொழியையும் வழக்கு மொழியாக செயல்படுத்துங்கள் என போராடும் நிலை என்பது முரண்பாடான ஒன்றாய் தோன்றலாம், ஆனால் இந்த முரண்பாடு மொழியோடு மட்டும் … வழக்குறைஞர்கள் பட்டினிப் போராட்டம்: தமிழ் வாழ்க, தமிழர் மடிக-ஐ படிப்பதைத் தொடரவும்.
ஐ நா விலா? ஆத்தாங்கரையிலா? ஓநாய்களின் துணையோடு எங்கு பேசினாலும் அது ஆடுகளுக்கு பாதுகாப்பல்ல.
கடந்த சில மாதங்களாக இலங்கையில் உக்கிரமாக நடைபெற்றுவந்த இன அழிப்புப்போரானது, பிரபாகரனையும் விடுதலைப்புலிகளையும் கொன்றொழித்ததன் மூலம் நிறைவடைந்து விட்டதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. புலிகளிடம் சிக்கிக்கொண்டிருந்த மக்களை மீட்டுவிட்டதாக ராணுவம் அறிவித்தாலும்; முகாம் என்று பொதுப்படையாக சொல்லப்படும் வதை முகாம்களில் மூன்று லட்சத்திற்கும் அதிகமானோர் வதைபட்டுக் கொண்டிருக்கின்றனர். காயமடைந்து உருக்குலைந்த பல ஆயிரக்கணக்கான மக்கள் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கின்றனர். குடியிருந்த இடங்களெல்லாம் மண்மேடாகிக் கிடக்கின்றன. பயங்கரவாதத்திற்கு எதிரான போர், புலிகளுக்கு எதிரான போர் என்ற போர்வையில் தமிழ் மக்களுக்கு எதிராக மிகப்பெரிய … ஐ நா விலா? ஆத்தாங்கரையிலா? ஓநாய்களின் துணையோடு எங்கு பேசினாலும் அது ஆடுகளுக்கு பாதுகாப்பல்ல.-ஐ படிப்பதைத் தொடரவும்.
நச்சுப்புகை குண்டுகளும் வெத்து வேட்டு தேர்தலும்
"சரணடைந்து விடுங்கள். உங்கள் உயிரை காப்பதற்கும் தமிழ் மக்களின் வாழ்வை காப்பதற்கும் இதுவே கடைசி வழி" விடுதலைப்புலிகளுக்கு ராச பக்சேவின் கடைசி எச்சரிக்கை இது. விடுதலை புலிகளுக்கு எதிரான போர் என்பதும் தமிழ் மக்களை கொன்று குவிப்பதும் இரண்டும் ஒன்றுதான் என்ற ஒப்புதல் வாக்கு மூலமும் இது தான். இதன் பொருள் விடுதலைப்புலிகள் சரணடையாவிட்டால் தமிழ் மக்கள் கொல்லப்படுவார்கள் என்பது தான். எவ்வளவு வெளிப்படையான அறிவிப்பு. எந்த நாடும் இதை கண்டு கொள்ளவில்லை. ஐநா சபையில் மீண்டும் … நச்சுப்புகை குண்டுகளும் வெத்து வேட்டு தேர்தலும்-ஐ படிப்பதைத் தொடரவும்.