அம்பேத்கரியர்கள்: நெருக்கடியும் சவால்களும்

அம்பேத்கரியர்களையும், கம்யூனிஸ்டுகளையும் எதிர்ரெதிராக நிறுத்தும் முயற்சி தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறது. அதன் பின்னாடும் அரசியல் சதிகளை காணாமல், காணச் செய்யாமல், தூண்டி விடப்படும் உணர்ச்சிகளை பற்றிக் கொள்வது இரண்டுக்குமே பலன் தரப்போவதில்லை. அம்பேத்கரா? மார்க்ஸா? யார் பெரியவர் எனும் கேள்வியும், சாதி ஒழிப்பா? புரட்சியா? எது முதலில் எனும் கேள்வியும், முட்டையா கோழியா எது முதலில்? எனும் கேள்வியின் தரத்துக்கு பொருளற்றும், ஊள்ளீடற்றும், நோக்கமின்றியும், திசையின்றியும் முன்வைக்கப்பட்டு விவாதிக்கப்பட்டு வருகிறது. ஆனால் தேவை என்ன? நாம் … அம்பேத்கரியர்கள்: நெருக்கடியும் சவால்களும்-ஐ படிப்பதைத் தொடரவும்.

கபாலி, காலா, அசுரன்… எங்கே தோற்கிறார்கள்?

சமூகம் தன் ஒவ்வாமைகளை உதறும் ஒரே வழியாக அறிவினை மட்டுமே கொள்ள முடியும். அவ்வகையில் தலித் என்ற அடையாளத்துக்கு வரலாற்று விளக்கங்களையோ வரிசைப்படுத்தப்பட்ட தரவுகளையோ அளிப்பதை இக்கட்டுரைகள் நோக்கமாக கொண்டிருக்கவில்லை. மாறாக அவ்வடையாளம் பெருஞ்சமூகத்தில் உருவாக்கும் மிக நுண்ணிய அசௌகரியத்தை உணர்ந்து அதற்கான காரணங்களை ஆராய முயல்கிறது. அதன் வழியே தரவுகளும் சமூக அசைவுகளும் விவரிக்கப்படுகின்றன. தலித்துக்கள் குறித்து வாசிக்க ஒவ்வாமை உடைய பேரரறிவாளிகளும் அணுகுவதற்கு அஞ்சும் சிக்கலான அதே நேரம் மயக்கம் தரும் வசீகரமான மொழிநடையைக் … கபாலி, காலா, அசுரன்… எங்கே தோற்கிறார்கள்?-ஐ படிப்பதைத் தொடரவும்.

இலுமினாட்டி: நகைக்கவும் தகுதியற்றது

வணக்கம் ராஜ்ரம்யா, ஆம். நீங்கள் குறிப்பிடுவது போல இலுமினாட்டி எனும் சொல் சமூக வலைதளங்களில் அதிகம் உச்சரிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. இதை விளக்குவதற்கு வேறொரு புள்ளியிலிருந்து தொடங்கலாம். ராஜ்ரம்யா கேள்வி பதில் பகுதியிலிருந்து உலகெங்கும் தற்போது வலதுசாரி அமைப்புகள் தலை தூக்கி வருகின்றன. தேர்தல் வெற்றிகளை சம்பாதித்திருக்கின்றன. இதை ஆராய்வோர்கள், உலகின் இந்த போக்கு கம்யூனிசம் தோல்வியடைந்து வருவதன் குறியீடு என்கிறார்கள். அதாவது, கம்யூனிஸ்டுகளின் போராட்டங்களுக்கு மக்கள் பெருமளவில் ஆதரவளிப்பார்கள். தங்களுடைய பிரச்சனைகளை கம்யூனிஸ்டுகள் மூலம் தீர்த்துக் கொள்ள … இலுமினாட்டி: நகைக்கவும் தகுதியற்றது-ஐ படிப்பதைத் தொடரவும்.

பொது சிவில் சட்டம் முத்தலாக்குடன் முடிந்து விடுவதில்லை

பொது சிவில் சட்டம் முத்தலாக்குடன் மட்டும் தொடர்பு கொண்டதோ என சிந்திக்கும் அளவுக்கு பலரும் முத்தலாக் பற்றி மட்டுமே கருத்து கூறிக் கொண்டிருக்கிறார்கள். பொது சிவில் சட்டம் இஸ்லாமியர்களுக்கு எதிரானது மட்டும் தானா எனும் எண்ணமும் வருகிறது. ஏனென்றால் அவர்கள் மட்டும் தான் எதிர்ப்பு தெரிவித்துக் கொண்டு இருக்கிறார்கள். அண்மையில், பொது சிவில் சட்டம் பரவலாய் பேசப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்னால், நெல்லை மாவட்டத்தில் இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் சில ஊர்களில் பொது சிவில் சட்டம் குறித்த … பொது சிவில் சட்டம் முத்தலாக்குடன் முடிந்து விடுவதில்லை-ஐ படிப்பதைத் தொடரவும்.

அம்பேத்கர், குஹா, தமிழ் இந்து, சாதியம்: ஏதாவது புரிகிறதா?

சாதியப் பிரச்சனைக்குத் தீர்வு: புத்தர் போதாது, அம்பேத்கரும் போதாது, மார்க்ஸ் அவசியத் தேவை எனும் நூல், ரங்கநாயகம்மா என்பவர் எழுதி கொற்றவை தமிழில் மொழி பெயர்த்து அண்மையில் வெளிவந்தது. இதனைத் தொடர்ந்து அம்பேத்கர் மீதான விமர்சனம் எனும் பெயரில் முன்கூட்டியே திட்டமிடப்பட்ட நிகழ்ச்சிநிரல்கள் வரிசையாக வலம் வந்து கொண்டிருக்கிறதோ என்று ஐயுறும் வண்ணம் நிகழ்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன. அம்பேத்கர் மீதான விமர்சனம் மெல்ல மார்க்ஸுடனான ஒப்பீடாக மாறியது. பின் அம்பேத்கரா மார்க்ஸா என்று உருவெடுத்தது. தொடர்ந்து அது … அம்பேத்கர், குஹா, தமிழ் இந்து, சாதியம்: ஏதாவது புரிகிறதா?-ஐ படிப்பதைத் தொடரவும்.

கபாலி: சில கற்பிதங்களை முன்வைத்து

வழக்கமான ரஜினி பட அலம்பல்களைத் தாண்டி கபாலி எனும் புதிய படம் வேறொரு தளத்தில் ஆதரிக்கவும், எதிர்க்கவும் செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறது. தமிழ் திரை உலகைப் பொருத்தவரை பல்வேறு விதங்களில் விமர்சனங்கள் செய்யப்படுகின்றன. தொழில்நுட்பத்தை முதன்மையானதாக வைத்து, கலைஞர்களின் நடிப்புத்திறனை முதனமையானதாக வைத்து, கதையை, திரைக்கதையை, ஒளிப்பதிவை, இசையை, இயக்குனரை என பல அம்சங்களை முன்வைத்து திரைப்படங்கள் விமர்சிக்கப்படுகின்றன. இவை எல்லாவற்றையும் கபாலி தாண்டியிருக்கிறது. ஒருவேளை இதுவும் கூட சாதனை தானோ, என்னவோ.   பொதுவாக கலை என்பது, … கபாலி: சில கற்பிதங்களை முன்வைத்து-ஐ படிப்பதைத் தொடரவும்.

பெரியாரின் மண் என்பது மட்டும் போதுமா?

இந்தியா மூன்றுபுறம் கடலால் சூழப்பட்டிருக்கிறது, நான்கு புறமும் கடனால் சூழப்பட்டிருக்கிறது என்று வேடிக்கையாய் சொலவடை சொல்வார்கள். இப்போது எட்டுத் திக்கிலிருந்தும் பார்ப்பனியம் சூழ்ந்து கொண்டிருக்கிறது எனச் சொல்வது தகும். இந்தியாவில் அரசு இயந்திரம் பார்ப்பனமயமாகி இருக்கிறது என்பதை உணர்வதற்கு சான்றுகள் எதுவும் தேவையில்லை. ஆனால் குறிப்பாக மோடி பிரதமரான பிறகு இது மிகுந்த விரைவுடன் செயலாற்றுகிறது. சமஸ்கிருதமயமாக்கம், உயர்கல்விக் கூடங்களில் ஆக்கிரமிப்பு, மாட்டுக்கறி, பகுத்தறிவுவாத அறிஞர்களின் படுகொலை என இதற்கு பற்பல எடுத்துக்காட்டுகளைக் கூறலாம். இவைகளுக்கு பலரும், … பெரியாரின் மண் என்பது மட்டும் போதுமா?-ஐ படிப்பதைத் தொடரவும்.