கல்வி தனியார்மய ஒழிப்பு மாநாடு

கல்வியில் தனியார்மயத்தை ஒழித்தாலே உயர்ரக கல்வி வரை அனைவரும் இலவசமாக கல்வி பெற முடியும்!  நக்சல்பாரி பாதையில் புதிய ஜனநாயகப் புரட்சியே இதற்கு ஒரே வழி!   அன்பார்ந்த மாணவர்களே, பெற்றோர்களே, உழைக்கும் மக்களே,   குறைந்த கட்டண நிர்ணயம், தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கு 25 சதவீதம் இட ஒதுக்கீடு என்பதெல்லாம் இருக்கின்ற அரசுப் பள்ளிகளையும் ஒழித்து தனியார் பள்ளிகளை ஊக்குவிக்கவே. தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்ற பெயரில் கடந்த 20 ஆண்டுகளாக புகுத்தப்பட்டு வரும் … கல்வி தனியார்மய ஒழிப்பு மாநாடு-ஐ படிப்பதைத் தொடரவும்.

பெயரில் குடியரசு செயலில் முடியரசு

  வரிசையான பண்டிகை கொண்டாட்டங்களுக்கு மத்தியில் இன்னுமொரு பண்டிகையாக வந்திருக்கிறது குடியரசு தினம். ஆனால் ஏனைய பண்டிகைகளை விட இந்த பண்டிகைக்கு அரசு காட்டும் முனைப்பு மக்களிடையே பீதியூட்டுவதாக இருக்கும். தொடர்ந்து அப்படித்தான் இருந்து கொண்டிருக்கிறது. குடிமக்களுக்கான அரசு இது அதை குலைப்பதற்காக தீவிரவாதிகள் முயல்கிறார்கள், அவர்களிடமிருந்து மக்களை பாதுகாக்கவே இத்தகைய கெடுபிடிகள் என்பது வழக்கமாக அரசு கூறும் காரணம். சென்னையில் மட்டும் கடந்த சில நாட்களில் 800 க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தியாவெங்கும் பாதுகாப்பு … பெயரில் குடியரசு செயலில் முடியரசு-ஐ படிப்பதைத் தொடரவும்.

சிறுவணிகத்தில் அன்னிய முதலீடு, மக்கள் உயிர் குடிக்கும். போராடு

சிறு வணிகத்தில் 51 நூற்றுமேனி(சதவீதம்)  அளவிற்கு அன்னிய முதலீட்டை அனுமதிப்பது என்று தீர்மானித்திருப்பதாக கடந்த வாரத்தில் அரசு அறிவித்தது. அன்றிலிருந்து, எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தை நடத்த விடாமல் அமளித்து வருகின்றன. அதாவது, அப்படிச் செய்தால் அன்னிய முதலீட்டை அவர்கள் எதிர்ப்பதாக மக்கள் நம்புவார்களாம். மட்டுமல்லாது கருணாநிதி, மம்தா, மாயாவதி, ஜெயா உள்ளிட்டோர் தாங்களும் அன்னிய முதலீட்டை எதிர்ப்பதாக காட்டிக் கொண்டிருக்கிறார்கள். மறுபக்கத்தில் அரசு அன்னிய முதலீட்டால் வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும் என்றும், விலைவாசி குறையும் என்றும், சூடம் அணைக்காமல் … சிறுவணிகத்தில் அன்னிய முதலீடு, மக்கள் உயிர் குடிக்கும். போராடு-ஐ படிப்பதைத் தொடரவும்.

இது கார்ப்பரேட் முதலாளிகளின் பகற்கொள்ளைக்கான ஜனநாயகம்!

ஓட்டுப் போடாதே! புரட்சி செய்!! அன்பார்ந்த உழைக்கும் மக்களே, காண்டிராக்டர்கள், ரியல் எஸ்டேட் முத்லாளிகள், தொழிலதிபர்கள், சுயநிதிகல்விக் கொள்ளையர்கள், மணல் கொள்ளையர்கள், கந்துவட்டி பைனான்சுக்காரர்கள் இவர்கள் தான் எல்லாக் கட்சிகளின் சார்பிலும் போட்டியிடும் வேட்பாளர்கள். அனைவருமே கோடீசுவரர்கள் தான். கோடீசுவரன் என்பவன் யோக்கியனாக இருக்க் முடியது. அதிலும் தேர்தலில் போட்டியிடுபவன் அயோக்கியனாக மட்டுமே இருக்க இயலும். இவர்களுக்கோ இவர்களுடைய கட்சிக்கோ கொள்கையும் கிடையாது; லட்சியமும் கிடையாது. இவர்களைப் பொருத்தவரை தேர்தல் என்பது ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நாட்டை … இது கார்ப்பரேட் முதலாளிகளின் பகற்கொள்ளைக்கான ஜனநாயகம்!-ஐ படிப்பதைத் தொடரவும்.

ஊழல்கள் உரத்துக் கூவுகின்றன, உள்வாங்கிக்கொள்வோர் உண்டா?

அடுத்தடுத்து கரையில் மோதும் அலைகளைப்போல், ஊழல்கள் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன. மக்கள் மனதில் தைத்து உறைந்து கிடக்கும் கோபத்தை உசுப்பிவிடும் தகுதியை ஊழல்கள் என்றோ இழந்துவிட்டன. காரணம், கட்சி வேறுபாடின்றி அனைத்துக் கட்சிகளுமே தமக்குள் ஊழல் வரலாறுகளைக் கொண்டிருக்கின்றன. ஊழலுக்காக கட்சியோ, கட்சிக்காரர்களோ தண்டிக்கப்படுவதில்லை. மட்டுமல்லாது உள்ளுறையாக மக்களே ஊழல்மயப்படுத்தப்பட்டுவிட்டனர். காற்றுள்ளபோதே தூற்றிக்கொள் என்று சந்தர்ப்பவாதமாக ஓட்டுக்குப் பணம் தொடங்கி, சுயநலமாக, காரியவாதமாக தமக்கு என்ன லாபம்? எனும் கேள்வியில் தொங்கிக் கொண்டு வாழும்படி மக்கள் பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறார்கள். … ஊழல்கள் உரத்துக் கூவுகின்றன, உள்வாங்கிக்கொள்வோர் உண்டா?-ஐ படிப்பதைத் தொடரவும்.

அலைக்கற்றை ஊழல்: ராஜா வால், தலை எங்கே?

இதுவரை வெளிவந்த ஊழல்களிலேயே தொகையில் மிகப்பெரிய ஊழலாக வெளிவந்திருக்கிறது அலைக்கற்றை ஊழல். ஒரு வாரமாக நாடாளுமன்ற நடவடிக்கைகளை முடக்கி, கூச்சலிட்டு, நெருக்கடி கொடுத்து ஒரு வழியாக ராஜா பதவி விலகிவிட்டார். 2008 லிருந்து ஸ்பெக்ட்ரம் எனும் இந்த அலைக்கற்றை ஊழல் பேசப்பட்டு வந்தாலும் ஒரு எல்லையைத்தாண்டி இதில் மக்கள் கவனம் பதிந்துவிடாதபடி தேசிய அளவில் காங்கிரசும், தமிழக அளவில் திமுகவும் பார்த்துக்கொண்டன. இடையில் திமுகவில் ஏற்பட்ட குடும்பச்சண்டையில் இந்த ஊழல் பரவலாக பேசப்பட்டாலும் சமாதானத்தின் பின் ஈரத்துணியில் … அலைக்கற்றை ஊழல்: ராஜா வால், தலை எங்கே?-ஐ படிப்பதைத் தொடரவும்.

தொழிற்சங்கங்களின் வேலை நிறுத்தம்: யாரை எதிர்த்து யார்?

நாடு மறுகாலனியாக்கத்தில் மூழ்கிக்கொண்டிருக்கிறது. இதை நேரடியாக மறுக்கும் முதலாளித்துவவாதிகளைத் தவிர ஏனைய அனைவரும் இதை ஒப்புக்கொள்வார்கள். மறுகாலனியாக்கம் எனும் சொல்லில் பேதம் கொண்டிருப்போரும் அதன் உள்ளார்ந்த சாரத்தில் பேதமேதும் கொண்டிருக்க மாட்டார்கள். நாட்டின் அனைத்துத் துறைகளும் தனியார்மயப் படுத்தப்பட்டிருக்கின்றன, படுத்தப்பட்டுக்கொண்டிருக்கின்றன. இதன் விளைவுகள் அனைத்துத் தரப்பு மக்களின் முதுகுகளிலும் அடையாளமாய் பதிந்திருக்கிறது. மக்கள் தன்னெழுச்சியாக போராட்டங்களை நடத்திக்கொண்டிருக்கிறார்கள். போராட்டச் செய்திகள் என்றாலே கசந்து காததூரம் போகும் செய்தி ஊடகங்களிலும் தவிர்க்கவே முடியாமல் தினசரி ஏதேனும் போராட்டச் செய்திகள் … தொழிற்சங்கங்களின் வேலை நிறுத்தம்: யாரை எதிர்த்து யார்?-ஐ படிப்பதைத் தொடரவும்.

பட்ஜெட்: வலுத்தவனுக்கு மானியம் உழைப்பவனுக்கு வரிச்சுமை

பொருளாதார வளர்ச்சி என்ற பெயரில், முதலாளிகளுக்கு வழங்கப்படும் வரிச்சலுகைகள் நியாயப்படுத்தப்படுகின்றன. "இந்த பட்ஜெட் விவசாயிகள், தொழில் முனைவோர், முதலீட்டாளர்கச்ளுக்கு உரியது" என 2010-11 ஆம் ஆண்டுக்கான மைய அரசின் வரவு செலவு அறிக்கை பற்றி நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி குறிப்பிட்டுள்ளார். இதில் ஒரு பாதி உண்மை; இன்னொரு பாதியோ திரித்துக் கூறப்பட்டிருக்கிறது. விவசாயிகள் என அவர் குறிப்பிடுவது நமக்குத்தெரிந்த குப்பன், சுப்பன் போன்ற சிறு நடுத்தர விவசாயிகளையோ, விவசாய கூலித்தொழிலாளர்களையோ குறிக்கவில்லை. ஏற்றுமதியை குறிவைத்து விவசாயத்தில் குதித்துள்ள … பட்ஜெட்: வலுத்தவனுக்கு மானியம் உழைப்பவனுக்கு வரிச்சுமை-ஐ படிப்பதைத் தொடரவும்.

கம்யூனிசமே வெல்லும்

கம்யூனிசம் என்றால் என்ன? நாட்டில் இருக்கும் பல ஓட்டுக்கட்சிகளை போல அதுவும் ஒரு ஓட்டுக்கட்சி. உலகில் இருக்கும் பல கொள்கைகளை போல அதுவும் ஒரு கொள்கை. பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு உலகியல் பார்வை. முதலாளித்துவத்திற்கு எதிரான கூட்டு நடவடிக்கை. இப்படி பலவாறான மதிப்பீடுகள் கம்யூனிசத்தைப் பற்றி மக்களிடம் இருக்கிறது. ஆனால் கம்யூனிசம் என்பது ஒரு இயல்பு. மனிதர்களின் இயல்பான ஒரு உணர்வு. சாலையில் நடந்து செல்லும் ஒருவர் அங்கு ஒருவன் மற்றொருவனை அடித்து உதைத்துக்கொண்டிருப்பதை கண்டால், … கம்யூனிசமே வெல்லும்-ஐ படிப்பதைத் தொடரவும்.

புரிந்தவர்களுக்கு ஆபரேசன் கிரீன்ஹன்ட் புரியாதவர்களுக்கு குடியரசு தினம்.

இன்று ஜனவரி 26. குடியரசுதினம் என்று வெகுகாலமாய் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். குடியரசு என்றால் குடிகளுக்கான அரசு என்று பொருள், அதாவது குடிமக்களுக்கான அரசு. ஆனால் தங்களின் செயல்களால் இது குடிமக்களுக்கான அரசல்ல என அறிவித்துக்கொண்டு குடியரசுதினம் எப்படி கொண்டாடமுடியும்? 90களில் பாராளுமன்றத்திற்கு தெரியாமல் கொல்லைப்புற வழியில் திணிக்கப்பட்ட ஒப்பந்தங்களுக்கு பிறகு லட்சக்கணக்கான விவசாயிகள் விவசாயம் செய்யமுடியாமல் தற்கொலை செய்துகொண்டு மாண்டிருக்கிறார்கள். உயிருடன் இருக்கும் விவசாயிகள் இடுபொருள் விலையை குறையுங்கள், தண்ணீர் கிடைக்கச்செய்யுங்கள், விளை பொருளுக்கு உரிய விலை … புரிந்தவர்களுக்கு ஆபரேசன் கிரீன்ஹன்ட் புரியாதவர்களுக்கு குடியரசு தினம்.-ஐ படிப்பதைத் தொடரவும்.