சாத்தான்குளம் தந்தை மகனான ஜெயராஜ் பெனிக்ஸ் படுகொலையில் ஈடுபட்ட காவல் துறையினர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். எதிர்க்கட்சியும், மக்களும், சமூக ஊடகங்களின் பங்களிப்புமே இதை சாத்தியப்படுத்தி இருக்கிறது என்பது மிகையல்ல. என்றாலும் இது மகிழ்வை பகிர்ந்து விட்டு முடித்துக் கொள்ளும் நிலையில் இல்லை. காவலர்களை தவிர இந்தப் படுகொலைகளுக்கு உடந்தையாய் இருந்த மருத்துவர், நீதிமன்ற நடுவர் ஆகியோர் குறித்து எந்த விவாதமும் இல்லாமல், எந்தச் சாட்டும் இல்லாமல், அடக்கப்பட்டிருக்கிறது. இதை நீதி கிடைத்திருக்கிறது என்பதை விட … பெனிக்ஸ் கொலையின் முடிச்சுகள்-ஐ படிப்பதைத் தொடரவும்.