சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் தொடங்கி தமிழர்களின் அடையாளமாக, மாமன்னர்களாக காட்டப்படும் யாரும் திருவள்ளுவர் குறித்து எந்தக் குறிப்பையும் தரவில்லை. திருக்குறளை அறியச் செய்ய எந்த முயற்சியும் எடுக்கவில்லை. அதற்கு ஆங்கிலேயர்கள் வரவேண்டியிருந்தது. முதன்முதலில் சீகன் பால்கு பாதிரியார் தான் திருவள்ளுவரையும், திருக்குறளையும் பற்றிய குறிப்பைத் தந்திருக்கிறார். வீரமாமுனிவர் தான் திருக்குறளை முதன்முதலில் லத்தீன் மொழியில் மொழிபெயர்த்திருக்கிறார். இதன் பின்னர் தான் தமிழறிஞர்கள் திருக்குறளைப் பற்றி பேசியிருக்கிறார்கள். அப்போதும் கூட திருவள்ளுவர் யார்? எந்த ஜாதியைச் சேர்ந்தவர் … திருவள்ளுவர் யார்?-ஐ படிப்பதைத் தொடரவும்.
குறிச்சொல்: திருக்குறள்
உடல் எனும் பொதுவுடமை சமூகம்
கொரோனா எனும் தொற்று நோய் அச்ச உணர்வு எனும் ஆயுதம் கொண்டு உலகை ஆண்டு கொண்டிருக்கும் காலகட்டம் இது. கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக இந்தியா மட்டுமன்றி உலக நாடுகளில் பெரும்பாலானவை ஊரடங்கு எனும் போர்வையை இழுத்துப் போர்த்திக் கொண்டு சமூகத்தை பார்க்காமல் அல்லது பார்க்க முடியாமல் முடங்கிக் கிடக்கின்றன. அனைத்துக்கும், இந்த ஆறு மாத காலங்களில் 50 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவுக்கு ஆட்பட்டிருப்பதும், மூன்று லட்சத்துக்கும் அதிகமானோர் இறந்து போனதும் காரணமாக இருக்கிறது. இந்த நோய்க்கு … உடல் எனும் பொதுவுடமை சமூகம்-ஐ படிப்பதைத் தொடரவும்.