“அவர்கள் போராடுவது இனி பயனற்றது என இந்த உலகிற்கு சொல்ல நினைக்கிறார்கள்(…) அதற்காகத்தான் இதைச் செய்கிறார்கள். இந்த சமூக அமைப்பு ஒரு மோசடி; நம்மை காப்பாற்றுவதற்காக உருவாக்கப்பட்டதாக சொல்லப்படும் இந்த சமூக அமைப்பு நம்மை காப்பாற்றவில்லை; இந்த அரசு, இந்த விஞ்ஞானிகள் யாரும் நம்மை காப்பாற்றவில்லை. நாம்தான் நம்மை பாதுகாத்துள்ளோம். மக்கள்தான் மக்களைப் பாதுகாத்துள்ளோம்.” டார்க் வாட்டர்ஸ் திரைப்படத்தின் இறுதிக் காட்சிக்கு முன்பாக வரும் காட்சியின் வசனங்கள் இவை. சூழலியல் பற்றிய ஒரு திரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ளது … டார்க் வாட்டர்ஸ்: மக்களுக்கு மக்களே காவல்-ஐ படிப்பதைத் தொடரவும்.
குறிச்சொல்: திரைப்படம்
பிம்பச் சிறை
எம்.ஜி.ஆர் - எதிர்க் கட்சிகளும் விமர்சிக்கத் தயங்கும் ஒரு பெயர். சிறந்த முதல்வர் என்பதால் அல்ல, அடித்தட்டு மக்களிடம் இவர் மீதான மயக்கம் இன்னமும் முடிந்து போய்விடவில்லை என்பதால். சாராய வியாபாரிகளும், ரவுடிகளும் உருமாறி அதிகாரம் மிக்கவர்களாக உலவரத் தொடங்கியது இவரிடமிருந்து தான். வெளிப்படையாக காவல்துறையின் அத்துமீறல்களை ஆதரித்ததற்கும் இவரே தொடக்கப்புள்ளி. ஆனாலும் மரணிக்கும் வரை அசைக்க முடியாத தலைவராய் வலம் வந்தார். அது எப்படி? என்று ஆராய்கிறது இந்த நூல். இந்நூலில் ஓரிடத்தில் குறிப்பிடப்பட்டிருப்பது போல், … பிம்பச் சிறை-ஐ படிப்பதைத் தொடரவும்.
எந்தப் பொன்மகள் வரவேண்டும்?
பொன்மகள் வந்தாள். வெளிவருவதற்கு முன்பே பல விவாதங்களை கிளப்பி விட்ட திரைப்படம். இனி சூர்யா நடிக்கும் திரைப்படங்களுக்கு திரைக்கூடங்களை ஒதுக்க மாட்டோம் என உரிமையாளர்கள் மிரட்டினார்கள். அதையும் மீறி OTT தளத்தில் வெளிவந்திருக்கிறது இத் திரைப்படம். இதற்கு முன்பே கமலஹாசன் நடித்த விஸ்வரூபம் திரைப்படத்திலும் கிட்டத்தட்ட இதே பிரச்சனை ஏற்பட்டு பின், பின்வாங்கப்பட்டு திரைக்கூடங்களில் வெளியானது. இயக்குனர் சேரன் கூட இதே திசையில் D2H எனும் நிறுவனத்தை தொடங்கி ஆதரவில்லாமல் கைவிட்டார். இது ஒரு வகையில் புதிய … எந்தப் பொன்மகள் வரவேண்டும்?-ஐ படிப்பதைத் தொடரவும்.
Interstellar: திரைப்படத்தை முன்வைத்து
இண்டர்ஸ்டெல்லர் என்றால் விண்மீன்களுக்கு இடையேயான பயணம் என்று பொருளாம். அறிவியல் புனைகதைகள் ஈர்ப்பு மிக்கவைகள். அவைகளின் கதைக் களம் மூன்றாம் தர மசாலை நெடியுடன் இருந்தாலும் எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கும் அறிவியல் புனைவு நம் கற்பனைகளை விரிக்கும் என்பதால், அறிவியல் மீதான ஆர்வத்தை தூண்டும் என்பதால் அவைகளின் மீதான ஈர்ப்பு குறைவதில்லை. அந்த வகையில் இண்டர்ஸ்டெல்லர் மிகச் சிறந்த படமாக கொள்ளலாம். இது 2014ல் வெளிவந்த படம். ஆங்கிலப் படங்களை பார்த்து தோராயமாக புரிந்து கொள்ள மட்டும் தான் … Interstellar: திரைப்படத்தை முன்வைத்து-ஐ படிப்பதைத் தொடரவும்.
கபாலி, காலா, அசுரன்… எங்கே தோற்கிறார்கள்?
சமூகம் தன் ஒவ்வாமைகளை உதறும் ஒரே வழியாக அறிவினை மட்டுமே கொள்ள முடியும். அவ்வகையில் தலித் என்ற அடையாளத்துக்கு வரலாற்று விளக்கங்களையோ வரிசைப்படுத்தப்பட்ட தரவுகளையோ அளிப்பதை இக்கட்டுரைகள் நோக்கமாக கொண்டிருக்கவில்லை. மாறாக அவ்வடையாளம் பெருஞ்சமூகத்தில் உருவாக்கும் மிக நுண்ணிய அசௌகரியத்தை உணர்ந்து அதற்கான காரணங்களை ஆராய முயல்கிறது. அதன் வழியே தரவுகளும் சமூக அசைவுகளும் விவரிக்கப்படுகின்றன. தலித்துக்கள் குறித்து வாசிக்க ஒவ்வாமை உடைய பேரரறிவாளிகளும் அணுகுவதற்கு அஞ்சும் சிக்கலான அதே நேரம் மயக்கம் தரும் வசீகரமான மொழிநடையைக் … கபாலி, காலா, அசுரன்… எங்கே தோற்கிறார்கள்?-ஐ படிப்பதைத் தொடரவும்.
ஜோக்கர்: நாம் எதற்கு ஆயத்தமாய் இருக்கிறோம்?
அண்மையில் மக்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்ற படம் என்றால் அது ஜோக்கர் தான். சமூக வலைத் தளங்கள் எழுதப்பட்ட மதிப்புரைகள், பார்த்தவர்களிடம் கேட்ட கருத்துகள் அனைத்துமே சிறப்பான படம், சமகால அரசியலை படம் பிடித்துக் காட்டும் படம் என்பதாகவே இருந்தன. இவையே, படத்தை பார்க்க வேண்டும் எனும் எண்ணத்தை ஏற்படுத்தியது, கூடவே, ‘வாழ்வது தான் கஷ்டம் என்றால் இப்போது பேலுவதும் கஷ்டமாகி விட்டது’ எனும் அதன் விளம்பர வாசகம். சிறந்த அரசியல் நையாண்டிப் படமாகவே இருக்கிறது. ஆனாலும், … ஜோக்கர்: நாம் எதற்கு ஆயத்தமாய் இருக்கிறோம்?-ஐ படிப்பதைத் தொடரவும்.
கபாலி: சில கற்பிதங்களை முன்வைத்து
வழக்கமான ரஜினி பட அலம்பல்களைத் தாண்டி கபாலி எனும் புதிய படம் வேறொரு தளத்தில் ஆதரிக்கவும், எதிர்க்கவும் செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறது. தமிழ் திரை உலகைப் பொருத்தவரை பல்வேறு விதங்களில் விமர்சனங்கள் செய்யப்படுகின்றன. தொழில்நுட்பத்தை முதன்மையானதாக வைத்து, கலைஞர்களின் நடிப்புத்திறனை முதனமையானதாக வைத்து, கதையை, திரைக்கதையை, ஒளிப்பதிவை, இசையை, இயக்குனரை என பல அம்சங்களை முன்வைத்து திரைப்படங்கள் விமர்சிக்கப்படுகின்றன. இவை எல்லாவற்றையும் கபாலி தாண்டியிருக்கிறது. ஒருவேளை இதுவும் கூட சாதனை தானோ, என்னவோ. பொதுவாக கலை என்பது, … கபாலி: சில கற்பிதங்களை முன்வைத்து-ஐ படிப்பதைத் தொடரவும்.
சென்னையில் ஒரு நாள்: இப்படி ஒரு நாள் தேவையா?
‘டிராஃபிக்’ என்ற பெயரில் மலையாளத்தில் வெளியான ஒரு படத்தின் மறுதயாரிப்பு ‘சென்னையில் ஒரு நாள்’ என்ற பெயரில் வெளிவந்து பரவலான கவனிப்பையும், இணைய உலகில் சமூக அக்கரையுள்ள படம் எனும் அடையையும் பெற்றிருக்கிறது. இந்தப் படத்திற்கு இணையப் பரப்பில் செய்யப்படும் விமர்சனங்களைப் படித்தபோது மறைந்த நாகேஷ் பேசிய ஒரு வசனம் தான் நினைவுக்கு வந்தது. “உடம்பை விட்டு விட்டு உயிரை மட்டும் தனியே உருவி எடுத்து விட்டாயே, எப்படி?” என்று ஏதோ ஒரு படத்தில் பேசியிருப்பார். அதேபோல் … சென்னையில் ஒரு நாள்: இப்படி ஒரு நாள் தேவையா?-ஐ படிப்பதைத் தொடரவும்.
தடியால் கனிய வைக்கப்படும் தேசபக்தி பழம்
மற்றொரு முறை நாட்டில் தேசபக்தி பொங்கி வழிந்தோடுகிறது. எல்லா ஓட்டுக்கட்சிகளும் இது குறித்து பேசுகின்றன. பாகிஸ்தானின் அட்டகாசம் எல்லை மீறிவிட்டதாக ஆளும் கட்சி எதிர்க் கட்சி பேதமின்றி அனைவரும் ஒத்த குரலில் சொல்கிறார்கள். இது கடினமான நேரம், பாகிஸ்தானுடனான உறவுகளை பரிசீலிக்கிறோம், அனைத்து சமாதான முயற்சிகளையும் நிருத்தி வைத்திருக்கிறோம் என்கிறது காங்கிரஸ். கார்கில் போல் இன்னொரு போரை நடத்தி பாகிஸ்தானை ஒடுக்குங்கள் என்பதோடு மட்டுமல்லாது ஆங்காங்கே சில போராட்டங்களையும் நடத்தியிருக்கிறது பாஜக. இராணுவ வீரரின் தலையை … தடியால் கனிய வைக்கப்படும் தேசபக்தி பழம்-ஐ படிப்பதைத் தொடரவும்.
Quest For Fire: பழங்கால மனிதனின் வாழ்வை அறிந்து கொள்ள
மனிதன் கண்டுபிடித்த முதல் அறிவியல் கருவி நெருப்பை உண்டாக்குவது. நெருப்பு என்பது இன்றைய காலத்தில் மிகவும் சாதாரணமான ஒன்று. ஆனால் பண்டைய காலத்தில் ……? நெருப்பு என்பது ஆயுதம், நெருப்பு என்பது ஆற்றல், நெருப்பு என்பது பாதுகாப்பு, நெருப்பு என்பது முன்னேற்றம், நெருப்பு என்பது வல்லமை, நெருப்பு என்பது வாழ்வு. இன்று கருவிகள் இல்லாமல் ஒரு நொடியும் இல்லை என்ற நிலையிலிருக்கும் மனிதன், தொடக்க கால மனிதர்கள் நெருப்போடு கொண்டிருந்த உறவை முழுமையாக அறிந்து கொள்ள முடியுமா? … Quest For Fire: பழங்கால மனிதனின் வாழ்வை அறிந்து கொள்ள-ஐ படிப்பதைத் தொடரவும்.