இரண்டு நாட்களுக்கு முன்பு தமிழ்நாடு சட்டப் பேரவையில் இரண்டு அறிக்கைகள் முன்வைக்கப்பட்டன. 1. தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பான அருணா ஜெகதீசன் அறிக்கை 2. ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகச்சாமி அறிக்கை. இந்த இரண்டு அறிக்கைகளின் மீதும் சட்டமன்றத்திலும் வெளியிலும் ஊடகங்களிலும் விவாதங்கள் நடந்து வருகின்றன. இதுபோன்ற விசாரணை கமிசன்கள் மீது பெரிய மதிப்பு எதுவும் இருப்பதில்லை. காரணம், அவை நிகழ்வுகள் மீதான மக்களின் எதிர்ப்புணர்வு, அரசாங்கங்களின் மீதான எதிர்ப்புணர்வாக மாறிவிடாமல் ஆற்றுப்படுத்துவதற்காக அமைக்கப்படுபவை. மட்டுமல்லாது அந்த … விசாரணை அறிக்கை: திமுக தொடங்கி வைக்குமா?-ஐ படிப்பதைத் தொடரவும்.
குறிச்சொல்: தூத்துக்குடி
போராட்டக் களத்தில்
ஸ்டெர்லைட் முதல் தே.பா.சட்டம் வரை பகுதி 3 இந்தப் போராட்டத்தின் இலக்கே மாவட்ட ஆட்சித் தலைவரிடம் ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி மனு கொடுப்பது தான். இதை போராட்ட நாளுக்கு பல நாட்களுக்கு முன்பே போராட்டக் குழு வெளிப்படையாக அறிவித்து உள்ளது. ‘லட்சம் பேர் கூடுவோம், ஸ்டெர்லைட்டை மூடுவோம்’ என்பது போராட்டத்தின் முழக்கம். ஆனால் போரட்டத்தில் லட்சத்துக்கும் அதிகமானோர் கூடி இருந்தனர். துல்லியமான எண்ணிக்கை தெரியாமல் போனாலும் இவ்வளவு அதிகமானவர்கள் போராட்டத்தில் கலந்து கொள்ளவிருக்கிறார்கள் என்பது முன்கூட்டியே … போராட்டக் களத்தில்-ஐ படிப்பதைத் தொடரவும்.
சிபிஐ எனும் ஸ்டெர்லைட்
பத்திரிக்கை செய்தி: மே.19, 2022: மோடி அரசின் நண்பர் அனில் அகர்வாலின் ஏவல்படையாக செயல்பட்ட காவல்துறையினரைக் காப்பாற்றும் சிபிஐ விசாரணையை கண்டிக்கிறோம்! நிராகரிக்கிறோம்! நீதி வேண்டும்! உயர்நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் மறு விசாரணை வேண்டும்! **************************************************** மே 22, 2018 ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் 15 பேர் கொல்லப்பட்டு 4 ஆண்டுகளுக்குப் பின் தனது மூன்றாவது இறுதி குற்றப் பத்திரிகையை மதுரை தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல் செய்திருக்கிறது. ஸ்டெர்லைட் நிர்வாகம், காவல்துறை வருவாய்த்துறை … சிபிஐ எனும் ஸ்டெர்லைட்-ஐ படிப்பதைத் தொடரவும்.
ஸ்டெர்லைட்: என்ன செய்யலாம்?
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களுக்குதமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தின் வேண்டுகோள் தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு வணக்கம்.தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில், ஸ்டெர்லைட் நிறுவன அடியாட்களை வைத்து கலவரத்தை தூண்டி சதித்தனமாக காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கும், காயம்பட்ட சிலருக்கும் தகுதி அடிப்படையில் அரசு வேலைகளை ஒதுக்கி உள்ளீர்கள். கைது செய்யப்பட்டு காவல் துறையால் கொடும் தாக்குதலுக்கும், சித்திரவதைகளுக்கும் உள்ளாக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடும் அறிவித்திருக்கிறீர்கள். இதை … ஸ்டெர்லைட்: என்ன செய்யலாம்?-ஐ படிப்பதைத் தொடரவும்.
1. போராட்டம் மகிழ்ச்சிகரமானது
ஸ்டெர்லைட் முதல் தே.பா.சட்டம் வரை பகுதி 2 முன் குறிப்பு: இதை தொடராக எழுதலாம் எனும் திட்டத்தில் கடந்த ஆண்டில் இதே நாளில் தொடங்கினேன். ஆனால் பல காரணங்களால் தொடர முடியவில்லை. தற்போது மீண்டும் தொடங்கியுள்ளேன். இனி இது தொடர்ந்து வெளிவரும். போராட்டம் என்பது ஒரு கொண்டாட்டம் போன்றது என்று மார்க்ஸ் கூறியதை சொந்த அனுபவத்தில் முழுமையாக உணர்ந்த நாள் அன்று. அன்றைக்கு முன் பல போராட்டங்களில் கலந்து கொண்டிருந்திருக்கிறேன். அப்போதெல்லாம் ஒரு கருத்தாக மனதில் இருக்குமே … 1. போராட்டம் மகிழ்ச்சிகரமானது-ஐ படிப்பதைத் தொடரவும்.
ஸ்டெர்லைட் முதல் தேசிய பாதுகாப்புச் சட்டம் வரை
முன்னுரை இந்தியாவில் அரசுக்கு எதிரான போராட்டங்கள் அதிகம் நடக்கும் மாநிலம் தமிழ்நாடு. எண்ணிக்கையில் மட்டுமல்லாது உள்ளடக்கத்திலும், வீரியத்திலும் ஒப்பீட்டளவில் இந்தியாவுக்கு முன்மாதிரி மாநிலம் தமிழ்நாடு என்பது மிகையான கூற்றல்ல. அவைகளில் குறிப்பிடத் தகுந்த போராட்டங்களில் ஒன்று ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடி மக்கள் 22 மே 2018 அன்று நடத்திய வீரஞ்செரிந்த போராட்டம். இயங்கிக் கொண்டிருக்கும் ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தை விரிவாக்கம் செய்ய மட்டுமல்லாது உற்பத்தியையே நடத்த முடியாத அளவுக்கு மக்களால் தடுத்து நிறுத்த முடியும் என … ஸ்டெர்லைட் முதல் தேசிய பாதுகாப்புச் சட்டம் வரை-ஐ படிப்பதைத் தொடரவும்.
முகிலன் எங்கே?
ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது நடத்தப்பட்டது என்ன? யார் அந்த சமூக விரோதிகள்?
நேற்று (18.02.2019) ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உத்திரவிட முடியாது என்று உச்சநீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. மட்டுமல்லாது, உச்ச நீதி மன்றத்துக்குப் பிறகு உயர் நீதி மன்றத்தில் வழக்கு நடத்தலாம் என்றும் கூறியிருக்கிறது. இது போராடிய மக்களுக்கு தற்காலிக வெற்றி தான் இன்னும் வழக்கு நீள்கிறது. சிறப்புச் சட்டம் இயற்றுவதே தீர்வு என்பது மாற்றுக் கருத்துக்கு இடமில்லாத மக்களின் விருப்பம். நிற்க. தீர்ப்பு வழங்கப்பட்ட இதே நேரத்தில் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. … ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது நடத்தப்பட்டது என்ன? யார் அந்த சமூக விரோதிகள்?-ஐ படிப்பதைத் தொடரவும்.