காஷ்மீர் எனும் ஒரு தேசம் மூன்று நாடுகளுக்குள் கடந்த வாரத்திலிருந்து காஷ்மீர் ஒரு செயற்கையான கொதிப்பு நிலைக்குள் திட்டமிட்டு தள்ளப்பட்டிருந்தது. இதற்கு ஏதேதோ காரணங்களை கூறிக் கொண்டிருந்தார்கள். அமர்நாத் யாத்திரைப் பாதையில் பாகிஸ்தான் புதை குண்டுகளை புதைத்து வைத்திருந்தது என்றார்கள். ஜெய்ஷ் இ முகம்மது தீவிரவாதிகள் ஊடுருவி விட்டார்கள் என்றார்கள். ஏழு பேரை சுட்டுக் கொன்று விட்டோம் வெள்ளைக் கொடிகளுடன் வந்து பொறுக்கிக் கொண்டு செல்லுங்கள் என்றார்கள். இந்தக் களேபரங்களுக்கு மத்தியில் அவர்கள் பாகிஸ்தானியர்கள் இல்லை என்று … காஷ்மீரிகள் உயிரை எடுத்தேனும் அதை கார்ப்பரேட்டாக்குவோம்-ஐ படிப்பதைத் தொடரவும்.
குறிச்சொல்: தேசம்
இந்தியப் பட்டியிலிருந்து முதலில் விடுபடுமா காஷ்மீர்?
கடந்த பத்து நாட்களாக காஷ்மீர் எரிந்து கொண்டிருக்கிறது. அதனை எரியவைத்துக் கொண்டிருக்கும் இந்திய இராணுவத்தின் கொடூர முகம் கண்டு சமூக நலன் பேணும் உள்ளங்களும் எரிந்து கொண்டிருக்கின்றன. உணர்வின் உந்துதலால் எடை மிகக் கூடிப் போயிருக்கும் காஷ்மீர் இளைஞர்களின் கையிலிருக்கும் சிறுகற்களும் எரிந்து கொண்டிருக்கின்றன. இந்த நெருப்பின் அண்மைக்கால தொடக்கப் புள்ளியாய் இருந்தது புர்ஹான் வானி. குளிர் ஏரிகளும், பனிமலையுமாய் சொர்க்க பூமியாய் தெரிந்த காஷ்மீர் தன் மேலோட்டைப் பிய்த்துக் கொண்டு எரிமலையாய் வெடித்துச் சீறிக் கொண்டிருக்கிறது … இந்தியப் பட்டியிலிருந்து முதலில் விடுபடுமா காஷ்மீர்?-ஐ படிப்பதைத் தொடரவும்.
தடியால் கனிய வைக்கப்படும் தேசபக்தி பழம்
மற்றொரு முறை நாட்டில் தேசபக்தி பொங்கி வழிந்தோடுகிறது. எல்லா ஓட்டுக்கட்சிகளும் இது குறித்து பேசுகின்றன. பாகிஸ்தானின் அட்டகாசம் எல்லை மீறிவிட்டதாக ஆளும் கட்சி எதிர்க் கட்சி பேதமின்றி அனைவரும் ஒத்த குரலில் சொல்கிறார்கள். இது கடினமான நேரம், பாகிஸ்தானுடனான உறவுகளை பரிசீலிக்கிறோம், அனைத்து சமாதான முயற்சிகளையும் நிருத்தி வைத்திருக்கிறோம் என்கிறது காங்கிரஸ். கார்கில் போல் இன்னொரு போரை நடத்தி பாகிஸ்தானை ஒடுக்குங்கள் என்பதோடு மட்டுமல்லாது ஆங்காங்கே சில போராட்டங்களையும் நடத்தியிருக்கிறது பாஜக. இராணுவ வீரரின் தலையை … தடியால் கனிய வைக்கப்படும் தேசபக்தி பழம்-ஐ படிப்பதைத் தொடரவும்.
பினாயக் சென் தேசத்துரோகி என்றால் தேசபக்தனாகும் தகுதி யாருக்குண்டு?
கடந்த 24/12/2010 வெள்ளியன்று ராய்ப்பூர் மாவட்ட அமர்வு நீதிமன்றம் மருத்துவர் பினாயக் சென்னுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்திருக்கிறது. நாட்டின் மீதும் மக்கள் மீதும் நேசம்கொண்டு உழைக்கும் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாகியிருக்கிறது இந்தத்தீர்ப்பு. அதேநேரம் இந்த அரசு யாருக்காக இருக்கிறது, யாரின் நலன்களுக்காக செயல்படுகிறது என்பதையும் அம்பலப்படுத்தியிருக்கிறது. தேசத்துரோக குற்றச்சாட்டின்கீழ் குற்றம் நிருப்பிக்கப்பட்டதாகக் கருதி இந்தத்தீர்ப்பை வழங்கியிருக்கிறது நீதிமன்றம். அதாவது மாவோயிஸ்டுகளுடன் தொடர்பு கொண்டிருந்ததாகவும், அவர்களுக்கு ஆதரவாக செயல்பட்டதாகவும் கூறப்படும் பொய்யான குற்றச்சாட்டின் கீழ் இந்த தண்டனையை வழங்கியிருக்கிறது. … பினாயக் சென் தேசத்துரோகி என்றால் தேசபக்தனாகும் தகுதி யாருக்குண்டு?-ஐ படிப்பதைத் தொடரவும்.