பாசிசத்தின் இந்திய முகம்

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வந்து கொண்டிருக்கின்றன. தற்போதைய முன்னணி நிலை விரும்பியவாறு இல்லை என்றாலும், திமுக தொடர்ந்து முன்னணியில் இருந்து கொண்டிருக்கிறது. இந்திய அளவில் ஐந்து மாநிலங்களில் நடந்த சட்டமன்ற தேர்தல்களில், அஸ்ஸாமை பாஜக தக்கவைக்கிறது என்று புதுச்சேரியில் கூட்டணியுடன் முன்னணிக்கு வருகிறது என்பதும் கவனிக்க வேண்டிய விதயங்கள். குறிப்பாக, புதுச்சேரியில் பாஜக ஆட்சியில் கை நனைப்பது என்பது தமிழ்நாட்டிலும் விரிவதற்கு வழிவகுக்கக் கூடும். போகட்டும். தேர்தல்களில் ஆதிக்கம் செலுத்துவது என்பது, அனைத்து இந்திய கட்டமைப்புகளின் … பாசிசத்தின் இந்திய முகம்-ஐ படிப்பதைத் தொடரவும்.

பீகார் தேர்தலில் வென்றது யார்?

நடந்து முடிந்த பீகார் மாநில தேர்தல் முடிவுகள் பல முரண்பாடுகளை உள்ளடக்கி வந்திருக்கிறது. தனிப்பெரும் கட்சியாக ராஷ்ட்ரிய ஜனதா தளம் மீண்டிருக்கிறது. கடந்த முறை முதல்வராக இருந்த, இந்த முறையும் முதல்வராகப் போகின்ற நிதீஷ் குமாரின் கட்சியான ஐக்கிய ஜனதா தளம் கடும் பின்னடைவை சந்தித்திருக்கிறது. அதன் கூட்டணிக் கட்சியான பாஜக ஐக்கிய ஜனதா தளத்தை விட மிக அதிகமான இடத்தை பெற்றிருக்கிறது. ஆனாலும் நிதீஷ் தான் முதல்வர் என அறிவித்திருக்கிறது. இந்த முரண்பாடுகளை இணைத்துப் பார்த்தால் … பீகார் தேர்தலில் வென்றது யார்?-ஐ படிப்பதைத் தொடரவும்.

பாஜக மெய்யாகவே வென்றதா?

குடியுரிமை திருத்தச் சட்டம் பெரும் விவாதமாகவும், நாடெங்கும் தணியாத போராட்டங்களாகவும் வடிவெடுத்திருக்கும் வேளை. வேறெந்த பிரச்சனைகளையும் விட, பொருளாதார பின்னடைவைக் கூட பின்னுக்குத் தள்ளி குடியிரிமை போராட்டங்கள் வெடித்துக் கிளம்பியிருக்கின்றன. இப் போராட்டங்களை தடுக்க வழக்கம் போல காவல்துறை மூலம் வன்முறையை கையிலெடுத்திருக்கிறது. அனைத்தையும் மீறித் தான் போராட்டங்கள் தொடர்கின்றன. ஏனென்றால், பிற எல்லாவற்றையும் விட குடியிரிமை சட்டத் திருத்தம் மக்களைப் பாதிக்கும் முதன்மையான பிரச்சனையாக இருக்கிறது. அந்த போராட்ட நெருப்பை அணையாமல் பாதுகாப்பதும், தொடர்ந்து முன்னெடுத்துச் … பாஜக மெய்யாகவே வென்றதா?-ஐ படிப்பதைத் தொடரவும்.

கர்நாடக தேர்தல் முடிவு சொல்வது என்ன?

  கர்நாடக சட்ட மன்றத்துக்கு நடந்த தேர்தலில் முடிவுகள் வெளிவந்து விட்டன. இந்த தேர்தல் முறை மக்களுக்கானது அல்ல. யார் வென்றாலும் அதனால் மக்களுக்கு எந்த நல்லதும் ஏற்படப் போவதில்லை என்பவை மறுக்க முடியாதவை. இவை ஒருபுறம் இருக்கட்டும். இந்த தேர்தலின் முடிவில் ஆட்சியமைக்கப் போவது யார்? பாஜக சுயேட்சைகளையோ, காங்கிரஸ், மஜத விலிருந்து சில எம்.எல்.ஏக்களையோ விலைக்கு வாங்கி ஆட்சியமைத்து விடுமா? அல்லது அதைத் தடுக்க காங்கிரசும், மஜத வும் சேர்ந்து கூட்டணி அமைக்குமா? என்பவைகளும் … கர்நாடக தேர்தல் முடிவு சொல்வது என்ன?-ஐ படிப்பதைத் தொடரவும்.

பட்ஜெட்: ஜெட்லி கிண்டிய அல்வா

  2018 -2019 ம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கை பாராளுமன்றத்தில் நிதியமைச்சர் ஜெட்லியால் அறிவிக்கப்பட்டது. நாட்டிலுள்ள அரசியல் கட்சியினரும், அறிவுத் துறையினரும் இன்னும் பிறரும்  நிதிநிலை அறிக்கை குறித்து அலசி ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள். இவர்களுடைய பொதுவான கருத்து என்னவாக இருக்கிறது என்றால், குஜராத் தேர்தலில் பாஜகவுக்கு கிடைத்த இழுபறியான வெற்றியினாலும், சில மாநிலங்களுக்கான தேர்தல்  அடுத்தடுத்து வரவிருப்பதாலும் தங்கள் மீது வெறுப்புற்று இருக்கும் விவசாயிகள், நடுத்தர மக்கள் மீது கரிசனம் கொண்டு நிதி நிலை அறிக்கையை … பட்ஜெட்: ஜெட்லி கிண்டிய அல்வா-ஐ படிப்பதைத் தொடரவும்.

தேர்தல் முடிவு: பின்வாயால் சிரிக்கும் மக்களாட்சி

உத்திரப்பிரதேசம், உத்தர்காண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா ஆகிய ஐந்து மாநிலங்களுக்கு பல கட்டங்களாக தேர்தல் நடந்து முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இவைகளில் உத்திரப்பிரதேசம், உத்தர்காண்ட் ஆகிய இரண்டு மாநிலங்களில் பாஜக பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியைப் பிடித்திருக்கின்றது. பஞ்சாப்பில் காங்கிரஸ் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியை பிடித்திருக்கிறது.  மணிப்பூர், கோவா ஆகிய மாநிலங்களில் காங்கிரசுக்கு பெரும்பான்மை பலம் கிடைக்காவிட்டாலும் அதிக இடங்களைப் பிடித்த கட்சியாக வந்துள்ளது. ஓட்டுக் கட்சிகள் தேர்தல்களை எப்படி எதிர் கொள்கின்றன என்பதற்கு புதிதாக விளக்கம் கூற வேண்டிய … தேர்தல் முடிவு: பின்வாயால் சிரிக்கும் மக்களாட்சி-ஐ படிப்பதைத் தொடரவும்.

ஓ.பி.எஸ் சசி பதவிச் சண்டை: அதிமுகவின் பிரச்சனையா?

மக்கள் அதிகாரம் பத்திரிக்கைச் செய்தி ஓ.பி.எஸ் சசி பதவிச் சண்டை: அதிமுகவின் அரசியல் நெருக்கடி மட்டுமல்ல. அனைத்து கட்சிகளும் முடிவெடுக்க முடியாமல் திணறுகின்றன. அது மட்டுமல்ல நாட்டின் மொத்த அரசு கட்டமைப்பும் எல்லா நிறுவனங்களுமே இம்மாதிரியான நெருக்கடியில் சிக்கி, எதற்கும் தீர்வு காண முடியாத நிலைக்கு வந்துள்ளன. கால் வைக்கும் இடமெல்லாம் முள் குத்தும் நெருஞ்சிக் காட்டில் சிக்கிக்கொண்டன. எந்தப் பிரச்சினையையும் தீர்க்கும் தலைமை இல்லை. கேடுகெட்ட பன்னீர் சசிகலா போன்றோர்களைத்தான் உருவாக்கவும் முன்னிறுத்தவும் முடிகிறது. மங்காத்தா போல … ஓ.பி.எஸ் சசி பதவிச் சண்டை: அதிமுகவின் பிரச்சனையா?-ஐ படிப்பதைத் தொடரவும்.

அதிமுக வெற்றி மக்கள் முடிவா?

பாராளுமன்ற முறை, ஜனநாயகம், ஓட்டுக் கட்சிகள் போன்ற விமர்சனங்களையும், யார் வென்றாலும் தோற்கப் போவது மக்கள் தான் போன்ற பொதுமைகளையெல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு சொல்லுங்கள். கடந்த ஐந்து ஆண்டு கால அதிமுகவின் ஆட்சியை மக்கள் அமைதியாக அங்கீகரித்திருக்கிறார்கள் என்று எடுத்துக் கொள்ளலாமா?  திரு. மணி கேள்வி பதில் பகுதியில் நண்பர் மணி, பாராளுமன்ற முறை மீது வைக்கப்படும் விமர்சனங்கள், தோற்கப் போவது மக்கள் தாம் என்பதெல்லாம் நாங்கள் கூறுபவை என்பதைத் தாண்டி அவை சமூகத்தில் நிலவும் யதார்த்தம் … அதிமுக வெற்றி மக்கள் முடிவா?-ஐ படிப்பதைத் தொடரவும்.

திமுக வை ஆதரிக்கிறதா பு.ஜ?

தி.மு.க.வையும் அ.தி.மு.க.வையும் சமப்படுத்துபவர்களின் நோக்கமென்ன? என்றொரு கட்டுரை புதிய ஜனநாயகம் ஏப்ரல் 2016 இதழில் வெளிவந்திருக்கிறது. பாராளுமன்ற தேர்தல் முறையை புறக்கணிக்கிறோம் என்பதால் அதில் இருக்கும் ஓட்டுக் கட்சிகளை ஒரே தட்டில் வைத்து சமமாகப் பார்க்க வேண்டும் என்று அவசியமில்லை என விளக்கப்பட்டிருக்கிறது. உடனே, தேர்தல் நேரத்தில் இப்படி ஒரு கட்டுரை தேவையா எனத் தொடங்கி இது திமுக வுக்கு ஆதரவான கட்டுரை என்பதினூடாக இதற்கு ஐ சப்போர்ட் திமுக என்று எழுதியிருக்கலாமே என்பது வரை பல்வேறான … திமுக வை ஆதரிக்கிறதா பு.ஜ?-ஐ படிப்பதைத் தொடரவும்.

கொள்ளயடிக்கணும் கொஞ்சம் செத்துப் போறீங்களா?

தமிழ்நாடு மின்சார வாரியம் நட்டமடைந்த வரலாற்றை பேசும் ஆவணப் படம் இது. இது ஏற்கனவே பலராலும், குறிப்பாக மின்சாரத்துறையில் இருக்கும் திரு. காந்தி போன்றவர்களால் கட்டுரைகளாக எழுதப்பட்டு, பரவலாக கவனத்துக்கு உள்ளான விசயம் தான் என்றாலும் தற்போது ஆவணப்படமாக வெளிவந்திருப்பது வெகு மக்கள் கவனத்தை பெறும், பெற வேண்டும். மின்சாரம் என்பது மக்களுக்கு இன்றியமையாத ஒரு உற்பத்திப் பொருள் என்பதிலிருந்து மாறி அரசியல்வாதிகளும், அதிகார வர்க்கமும் கொள்ளையடிப்பதற்கான கருவி என எப்படி மாறிப்போனது என்பதை ‘ஊழல் மின்சாரம்’ … கொள்ளயடிக்கணும் கொஞ்சம் செத்துப் போறீங்களா?-ஐ படிப்பதைத் தொடரவும்.