ஸ்டெர்லைட் முதல் தே.பா.சட்டம் வரை பகுதி 3 இந்தப் போராட்டத்தின் இலக்கே மாவட்ட ஆட்சித் தலைவரிடம் ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி மனு கொடுப்பது தான். இதை போராட்ட நாளுக்கு பல நாட்களுக்கு முன்பே போராட்டக் குழு வெளிப்படையாக அறிவித்து உள்ளது. ‘லட்சம் பேர் கூடுவோம், ஸ்டெர்லைட்டை மூடுவோம்’ என்பது போராட்டத்தின் முழக்கம். ஆனால் போரட்டத்தில் லட்சத்துக்கும் அதிகமானோர் கூடி இருந்தனர். துல்லியமான எண்ணிக்கை தெரியாமல் போனாலும் இவ்வளவு அதிகமானவர்கள் போராட்டத்தில் கலந்து கொள்ளவிருக்கிறார்கள் என்பது முன்கூட்டியே … போராட்டக் களத்தில்-ஐ படிப்பதைத் தொடரவும்.
குறிச்சொல்: தொடர்
ஸ்டெர்லைட் முதல் தேசிய பாதுகாப்புச் சட்டம் வரை
முன்னுரை இந்தியாவில் அரசுக்கு எதிரான போராட்டங்கள் அதிகம் நடக்கும் மாநிலம் தமிழ்நாடு. எண்ணிக்கையில் மட்டுமல்லாது உள்ளடக்கத்திலும், வீரியத்திலும் ஒப்பீட்டளவில் இந்தியாவுக்கு முன்மாதிரி மாநிலம் தமிழ்நாடு என்பது மிகையான கூற்றல்ல. அவைகளில் குறிப்பிடத் தகுந்த போராட்டங்களில் ஒன்று ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடி மக்கள் 22 மே 2018 அன்று நடத்திய வீரஞ்செரிந்த போராட்டம். இயங்கிக் கொண்டிருக்கும் ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தை விரிவாக்கம் செய்ய மட்டுமல்லாது உற்பத்தியையே நடத்த முடியாத அளவுக்கு மக்களால் தடுத்து நிறுத்த முடியும் என … ஸ்டெர்லைட் முதல் தேசிய பாதுகாப்புச் சட்டம் வரை-ஐ படிப்பதைத் தொடரவும்.
மார்ச் 8. உலக உழைக்கும் பெண்கள் நாள்
அன்பார்ந்த உழைக்கும் பெண்களே! "பெண்கள் இந்நாட்டின் கண்கள்" என்று சித்தரிக்கும் இந்த ஆணாதிக்கச் சமூகம் தான் பெண்களை வீட்டில் முடக்கிப் போட்டு, அவர்களின் சமூகப் பார்வையைக் குருடாக்கி வருகிறது. விண்ணைச் சாடி வெகுதூரம் பாய வேண்டிய பெண்ணைச் சிறகொடித்து சிறைப்படுத்தியும் வருகிறது. இக்கொடுமைகளைக் கண்டு கொதித்தெழாமல், தொலைக்காட்சிப் பெட்டியின் முன்னால் சீரழிந்த சீரியலுக்காகவும், சினிமாப் படங்களுக்காகவும், பாடல்களுக்காகவும் முடங்கிக்கிடப்பது ஏன்? இது கேவலமாகத் தெரியவில்லையா? அப்படி என்னதான் இவற்றில் இருக்கிறது? குடும்ப உறவுகளை, ஆண் … மார்ச் 8. உலக உழைக்கும் பெண்கள் நாள்-ஐ படிப்பதைத் தொடரவும்.
செங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் ௨
இஸ்லாம் கற்பனை: மறுப்புக்கு மறுப்பு பகுதி: ௨ நுழைவாயில் எடுத்துக்கொள்ளப்பட்ட நண்பர் இஹ்சாஸின் பதிவு நுழைவாயில் பகுதியில் இஸ்லாம் குறித்த தொடரை நான் ஏன் எழுதவிருக்கிறேன் என்பதை விளக்கும் விதமாக, ஒரு தோராயமான முன்னோட்டமாக அமைத்திருந்தேன். அதில் இஸ்லாமியர்கள் மத அடிப்படையில் ஒருங்கிணைவது பயன்தரத்தக்கதாய் இருக்காது என்பதை குறியீட்டுக்காரணமாய் கொண்டிருந்தேன். ஏனென்றால் அது உத்தி ரீதியில் பார்ப்பனீயத்திற்கு உதவிகரமாகவே இருக்கும் என நான் குறிப்பிட்டிருந்தேன். இது நண்பருக்கு விளங்கவில்லை, அதை அவரும் ஒத்துக்கொண்டிருக்கிறார். ஆக மதரீதியில் ஒன்றிணைவது … செங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் ௨-ஐ படிப்பதைத் தொடரவும்.