கொரோனாவில் மே நாள்: பொருளாதாரமும் புரட்சியும்

கொரோனா பரவத் தொடங்கிய தொடக்க நாட்களில் மத வழிபாட்டு இடங்கள் அனைத்தும் மூடப்பட்டன. குறிப்பாக, வாடிகன், மெக்கா, திருப்பதி போன்ற அனைத்து மத வழிபாட்டிடங்களும் காலவரம்பின்றி அடைக்கப்பட்டன. யாரும் வழிபாடு செய்ய வரவேண்டாம் என மத நிறுவனங்களாலேயே அறிவிக்கப்பட்டது. இது கடவுள் இல்லை அல்லது கடவுளுக்கு ஆற்றல் இல்லை எனும் விதமாக பகுத்தறிவுவாதிகளால் பரப்புரை செய்யப்பட்டது. இதில் கம்யூனிஸ்டுகளும் அடக்கம். ஆனால் இன்று உலகின் எந்த மூலையிலும் மேதினப் பேரணி நடைபெறப் போவதில்லை. கொரோனா அச்சத்துக்கு கம்யூனிஸ்டுகள் … கொரோனாவில் மே நாள்: பொருளாதாரமும் புரட்சியும்-ஐ படிப்பதைத் தொடரவும்.

கொரோனா: ஊரடங்கின் பிறகு? 2

இந்தக் கட்டுரையின் முதல் பகுதியை படித்து விட்டு இதை தொடர்வது பொருத்தமாக இருக்கும் என எண்ணுகிறேன். அதை இந்த இணைப்பில் சென்று படிக்கலாம்: கொரோனா: ஊரடங்கின் பிறகு? திருட்டு அதிகரித்து விட்டது அதானால் எல்லா இடங்களிலும் சிசிடிவி கேமராக்களை பொருத்தலாம். பிற நாட்டினர் இங்கு சட்ட விரோதமாக வசிக்கிறார்கள் அதனால் குடியுரிமை சட்டம் திருத்தப்படலாம். மக்கள் நலத் திட்டங்கள் முழுமையாக மக்களை சென்றடைகிறதா என்பதை கண்காணிக்க முடியவில்லை. முறைகேடு நடக்கிறது. அதனால், தேசிய அடையாள அட்டையை உருவாக்கி … கொரோனா: ஊரடங்கின் பிறகு? 2-ஐ படிப்பதைத் தொடரவும்.

கொரோனா: ஊரடங்கின் பிறகு?

உலகில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் லட்சக் கணக்கில் அதிகரிக்குமோ எனும் அளவுக்கு செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. ஊரடங்கு எனும் வீட்டுச் சிறைக்குள் மக்கள் தங்களைத் தாங்களே பிணைத்துக் கொண்டுள்ளார்கள். போக்குவரத்து முடக்கப்பட்டுள்ளதால் 200 கிமீ தூரம் கூட மக்கள் நடந்தே கடக்கிறார்கள் எனும் செய்திகளையும், ஊரடங்கு காலத்தில் இதுவரை பட்டினியால் 22 பேர் மரணமடைந்துள்ளார்கள் எனும் செய்தியையும், விளைந்தும் அறுவடை செய்ய முடியாத, கறந்த பாலை சாக்கடையில் கொட்டும் செய்திகளையும் காணும் போது, மழுங்கிய … கொரோனா: ஊரடங்கின் பிறகு?-ஐ படிப்பதைத் தொடரவும்.

ஊரடக்கின் முரண்கள்

கொரோனா பரவியிருக்கும் நாடுகள் ஊரடக்கின் மூன்றாம் நாள் இன்று. கொரோனாவின் தாக்குதல் மிகக் கடுமையாய் இருக்கிறது. பன்னாட்டளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை ஐந்து லட்சத்தை தொடுகிறது. 22,000க்கும் அதிகமானோர் மரணமடைந்திருக்கிறார்கள். இந்தியாவில் அறுநூறுக்கும் அதிகமானோருக்கு கொரோனா தாக்குதல் கண்டறியப் பட்டிருக்கிறது. பத்து பேர் மரணமடைந்திருக்கிறார்கள். இதுவே தமிழ்நாட்டில் பாதிக்கப்பட்டோர் 30 பேராகவும் மரணமடைந்தது இரண்டு பேராகவும் இருக்கிறார்கள். கொரோனா பரவும் வேகம் அச்சமூட்டக் கூடியதாக இருக்கிறது. சற்றேறக் குறைய 90 நாளில் ஐந்து லட்சம் பேருக்கு பரவியிருக்கிறது. … ஊரடக்கின் முரண்கள்-ஐ படிப்பதைத் தொடரவும்.