உலகின் கொரோனாக்களுக்கு ஒரே தடுப்பூசி

இன்றைக்கு நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்பு 1870ல் இதே நாளில் (ஏப்ரல் 22) ரஷ்யாவில் ஓடும் வால்கா ஆற்றின் கரையோரம் உள்ள சிம்பிர்ஸ்க் எனும் நகரத்தில் இல்யா உல்யானவ் - மாயா உல்யானவ் தம்பதிகளுக்கு ஓர் ஆண்குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்கு விளாடிமிர் இலீச் உல்யானவ் என்று பெயரிட்டனர் பெற்றோர். பின்னர் அந்தக் குழந்தை வளர்ந்து தனக்குத் தானே ஒரு பெயரைச் சூட்டிக் கொண்டது. உலகத் தொழிலாளர்களின் ஒப்புயர்வற்ற தலைவனும், மார்க்சிய கோட்பாடுகளை செழுமைப்படுத்தியதோடு மட்டுமன்றி, சோவியத் புரட்சி … உலகின் கொரோனாக்களுக்கு ஒரே தடுப்பூசி-ஐ படிப்பதைத் தொடரவும்.

பொது வேலை நிறுத்தத்தை ஆதரிப்போம்

இன்று ஜனவரி 8. பத்து மத்திய தொழிற்சங்கங்கள் இணைந்து இந்திய அளவிலான பொது வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளன. பொதுவாக, 1991 க்குப் பிறகு இந்திய அளவிலான பொது வேலை நிறுத்தங்கள் நடந்ததே இல்லை. ஆனால், பொது வேலை நிறுத்தங்களை நடத்த வேண்டிய தேவை முன்னெப்போதையும் விட 1991க்குப் பிறகு அதிகம் ஏற்பட்டுள்ளது என்பதே உண்மை. இந்த முரண்பாடான சமூக நிலைக்கு இரண்டு காரணங்கள் இருக்கின்றன. ஒன்று, எண்பதுகளின் பிற்பகுதியில் தீவிரமாக அமல்படுத்தப்பட்ட உலகமயக் கொள்கையால், வேலை செய்தால் … பொது வேலை நிறுத்தத்தை ஆதரிப்போம்-ஐ படிப்பதைத் தொடரவும்.

குருதிச்சூடான வரலாற்றின் சொந்தங்களே!

இன்று மேதினம். ஏதோ ஒரு வேலையில் ஒட்டிக் கொண்டிருக்கும் அனைவருமே ஒரு நாள் வேலை நேரம் என்பது எட்டு மணி நேரம் என்பதை தெரிந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவ்வாறு வரையறை செய்வதற்கு தொழிலாளர்கள் செய்த போராட்டங்கள், தியாகங்கள் பற்றி தெரிந்திருக்கிறதா என்றால் இல்லை என்பதே பதில். மட்டுமல்லாமல் அவ்வாறு போராடி, தியாகங்கள் செய்து பெற்ற பல உரிமைகள் படிப்படியாக அழிக்கப்பட்டு வருகின்றன. மேதினத்தின் வரலாறு தெரியாததால் தான் உரிமைகள் பறிக்கப்படும் போது நாமென்ன செய்ய முடியும் எனும் … குருதிச்சூடான வரலாற்றின் சொந்தங்களே!-ஐ படிப்பதைத் தொடரவும்.

மே நாளில் சூளுரை ஏற்போம்

அடிமைகளின் எழுச்சி! ரோமானிய கனவான்கள், பிரபுக்கள் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.. ரோமானியப் பேரரசு ஆறாயிரத்திற்கு மேற்பட்ட அடிமைகளை சிலுவைகளில் அறைந்து, உயிரோடு சித்திரைவதை செய்து, நரமாமிசத்தினை தின்று தீர்த்தாலும் நிம்மதியாக தூங்கவில்லை. நித்தம் கனவில் அடிமைகளின் உரமேறிய கைகள். எத்தனை நாளைக்குத்தான் செத்து செத்து பிழைப்பது. ஆயிரக்கணக்கான அடிமைகளின் உழைப்பில் உல்லாசமாக வாழ்ந்த சொர்ணபுரியின் கனவான்கள் அதை எளிதில் இழக்க விரும்புவார்களா? ஆனால் காலம் அதை தொடராக அனுமதித்துதான் விடுமா? ஆண்டைகள் விரும்பித்தான் ஆகவேண்டும். அடிமைகள்! இனியும் அவர்களை … மே நாளில் சூளுரை ஏற்போம்-ஐ படிப்பதைத் தொடரவும்.

சுதந்திரம் என்றொரு கற்பிதம்

இன்று 64 ஆம் சுதந்திர தினமாம். உள்ளீடற்று சடங்காய் பின்பற்றப்படும் பண்டிகை போல் ஆண்டுதோறும் ஆகஸ்டு 15 வந்துவிட்டால் சுதந்திரமும் நினைவுக்கு வந்துவிடுகிறது. சில நாட்களுக்கு முன்பிருந்தே ஊடகங்கள் கொண்டாட்டங்கள் பற்றியும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றியும் நீட்டி முழக்கி வருகின்றன. சென்னையை மட்டும் 5000 காவலர்கள் பாதுகாக்கப் போகிறார்களாம். கண்காணிப்பு கேமராக்கள் ஆயுதப் படை உள்ளிட்ட கெடுபிடிகளுக்கு மத்தியில் கொண்டாடப்படப்போகும் விழாவின் பெயர் சுதந்திர தின விழா. முரண்தொடைக்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு இது. சுதந்திரம் என்றால் என்ன? … சுதந்திரம் என்றொரு கற்பிதம்-ஐ படிப்பதைத் தொடரவும்.

பட்ஜெட்: வலுத்தவனுக்கு மானியம் உழைப்பவனுக்கு வரிச்சுமை

பொருளாதார வளர்ச்சி என்ற பெயரில், முதலாளிகளுக்கு வழங்கப்படும் வரிச்சலுகைகள் நியாயப்படுத்தப்படுகின்றன. "இந்த பட்ஜெட் விவசாயிகள், தொழில் முனைவோர், முதலீட்டாளர்கச்ளுக்கு உரியது" என 2010-11 ஆம் ஆண்டுக்கான மைய அரசின் வரவு செலவு அறிக்கை பற்றி நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி குறிப்பிட்டுள்ளார். இதில் ஒரு பாதி உண்மை; இன்னொரு பாதியோ திரித்துக் கூறப்பட்டிருக்கிறது. விவசாயிகள் என அவர் குறிப்பிடுவது நமக்குத்தெரிந்த குப்பன், சுப்பன் போன்ற சிறு நடுத்தர விவசாயிகளையோ, விவசாய கூலித்தொழிலாளர்களையோ குறிக்கவில்லை. ஏற்றுமதியை குறிவைத்து விவசாயத்தில் குதித்துள்ள … பட்ஜெட்: வலுத்தவனுக்கு மானியம் உழைப்பவனுக்கு வரிச்சுமை-ஐ படிப்பதைத் தொடரவும்.