மீண்டும் நான்

தோழர்களுக்கு, நண்பர்களுக்கு வணக்கம். கடந்த 20 நாட்களாக பதிவு எதையும் நான் வெளியிடவில்லை. ஏன் என்று சிலர் செல்லிடப்பேசியிலும், பகிரியிலும் (வாட்ஸாப்) கேட்டிருந்தனர். நான் பயன்படுத்திக் கொண்டிருந்த மடிக்கணிணி பழுதாகி விட்டது. நான் தொடக்கத்தில் பயன்படுத்திக் கொண்டிருந்த மடிக்கணிணியை ஸ்டெர்லைட் போராட்ட வழக்கின் போது காவல்துறையினர் எடுத்துச் சென்று வழக்கில் சேர்த்து விட்டனர். இன்றுவரை அது கையில் கிடைக்கவில்லை. அதன் பிறகு அரசு தந்த மடிக்கணிணியைத் தான் பயன்படுத்தி வந்தேன். ஏற்கனவே இரண்டு முறை அந்த மடிக்கணிணி … மீண்டும் நான்-ஐ படிப்பதைத் தொடரவும்.

தோழர் பாலன் புரட்சிகர மக்கள் எழுச்சியின் நாயகன்

செப்டம்பர் 12 தியாகிகளின் நாள். தோழர் அப்பு பாலன் நினைவுகளை உள்வாங்க வேண்டிய நாள். இந்த நாளில் தோழர் பாலன் வாழ்வை சுருக்கமாக கூறும் இந்நூலை படித்துப் பாருங்கள். பதிப்புரையிலிருந்து புரட்சியாளர்களின் வரலாறு வெறும் மையால் எழுதப்படுவதில்லை, அது குருதி கொண்டு எழுதப்படுகிறது. அது வெறும் காகிதங்களில் அச்சிடப்படுவதில்லை, உழைக்கும் மக்களின் இதயங்களில் அச்சிடப்படுகிறது. தியாகிகளின் பௌதிக வாழ்வு முடிவடைந்தாலும், அவர்கள் புரட்சியின் ஆன்ம பலமாக உயிர்த்திருக்கிறார்கள், உழைக்கும் வர்க்கத்தின், ஒடுக்கப்பட்ட மக்களின் ஒவ்வொரு போராட்டத்திலும், புரட்சிக்கான … தோழர் பாலன் புரட்சிகர மக்கள் எழுச்சியின் நாயகன்-ஐ படிப்பதைத் தொடரவும்.

பொறுக்கிகளை கல்லால் அடித்து விரட்டுவது நம் பண்பாடில்லையா?

நவம்பர் எட்டாம் தேதி மோடியிடமிருந்து கிளம்பிய பணத்தாள் மதிப்பிழப்பு எனும் ஓங்கலை (சுனாமி) மக்களின் வாழ்வாதாரத்தை வாரிச் சுருட்டிக் கொண்டது, இன்னமும் சுருட்டிக் கொண்டிருக்கிறது. ஆனால் மோடியும் அதன் வீழ்படிவுகளும், அரசும் அதன் காலாட்படைகளும் அது சரியான நடவடிக்கை என்று தடிக் கம்புகளால் நம்மை கனிய வைக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள்.   கடந்த ஆண்டின் இறுதி நாளன்று, மோடி விதித்த 50 நாள் கெடு முடிந்த பின்னரும் நிலமை சீரடையவில்லை என்பதால் மோடியைக் கண்டித்து இந்திய ஜனநாயக … பொறுக்கிகளை கல்லால் அடித்து விரட்டுவது நம் பண்பாடில்லையா?-ஐ படிப்பதைத் தொடரவும்.

நம்புங்க! பாஸ் நம்புங்க! இஸ்லாம் கண்ணியமான மதம் தான்!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் என்ற பெயரிலுள்ள மதபிழைப்புவாதக் கும்பல் அன்மையில் காணொளி ஒன்றை வெளியிட்டது. இப்படி காணொளிகளையும், கேட்பொலிகளையும் அடிக்கடி வெளியிடுவது அந்த மதபிழைப்புவாதக் கும்பலுக்கு வாடிக்கை தான் என்றாலும் இந்த முறை அவர்கள் வெளியிட்டது வினவு தோழர்களை எதிர்த்து. அந்த காணொளியை கண்டு நமக்கு அதிர்ச்சி ஏதும் ஏற்படவில்லை. ஏனென்றால் ஏற்கனவே அவர்கள் வெளியிட்ட பல காணொளிகளை கண்டு தொலைத்த அனுபவம் நமக்கு இருக்கிறது என்பதாலும், இது அந்த மதவாதக் கும்பலுக்கு வழக்கமான ஒன்று என்பதாலும் … நம்புங்க! பாஸ் நம்புங்க! இஸ்லாம் கண்ணியமான மதம் தான்!-ஐ படிப்பதைத் தொடரவும்.