செப்டம்பர் 12 தியாகிகளின் நாள். தோழர் அப்பு பாலன் நினைவுகளை உள்வாங்க வேண்டிய நாள். இந்த நாளில் தோழர் பாலன் வாழ்வை சுருக்கமாக கூறும் இந்நூலை படித்துப் பாருங்கள். பதிப்புரையிலிருந்து புரட்சியாளர்களின் வரலாறு வெறும் மையால் எழுதப்படுவதில்லை, அது குருதி கொண்டு எழுதப்படுகிறது. அது வெறும் காகிதங்களில் அச்சிடப்படுவதில்லை, உழைக்கும் மக்களின் இதயங்களில் அச்சிடப்படுகிறது. தியாகிகளின் பௌதிக வாழ்வு முடிவடைந்தாலும், அவர்கள் புரட்சியின் ஆன்ம பலமாக உயிர்த்திருக்கிறார்கள், உழைக்கும் வர்க்கத்தின், ஒடுக்கப்பட்ட மக்களின் ஒவ்வொரு போராட்டத்திலும், புரட்சிக்கான … தோழர் பாலன் புரட்சிகர மக்கள் எழுச்சியின் நாயகன்-ஐ படிப்பதைத் தொடரவும்.
குறிச்சொல்: தோழர் பாலன்
இந்திய ஆக்கிரமிப்பின் கரங்கள்
இலங்கைப் பிரச்சனை அல்லது தமீழீழப் பிரச்சனை அல்லது விடுதலைப் புலிகள் பிரச்சனை என்பதை அதற்காக போராடும் அமைப்புகளும், மக்களும் - இலங்கையில் இருக்கும் அமைப்புகளானாலும் தமிழகத்தில் இருக்கும் அமைப்புகளானாலும் - எப்படிப் பார்க்கிறார்கள் என்பது முதன்மையான விசயம். இராஜீவ் காந்திக்கு முன் இராஜீவ் காந்திக்குப் பின் என்று பிரித்துப் பார்ப்பவர்கள் உண்டு. அவர்களைப் பொருத்தவரையில் இராஜீவ் கொலை நடந்திராவிட்டால் .. .. .. என்றொரு கற்பனாவாதமே அனைத்திற்குமான மையப் புள்ளி. இலங்கையில் சீனா ஊடுருவிக் கொண்டிருக்கிறது. இந்தியா … இந்திய ஆக்கிரமிப்பின் கரங்கள்-ஐ படிப்பதைத் தொடரவும்.