பெரியார் தடியா? ஜெண்டில் பேயா?

இட ஒதுக்கீடு, பெரியார், தகுதி போன்றவை குறித்து தெரிந்திருக்காத இன்றைய பதின்ம வயதினருக்கு அவை குறித்த ஒரு அறிமுகத்தை பொட்டில் அடித்தாற் போல் புரிய வைக்கும் ஓர் எளிய குறும்படம். திருவள்ளுவரை காவியாக்கத் துடிக்கும் பார்ப்பன பாசிசங்களுக்கு வாலை நசுக்கும் ஆப்பறைய, இது போன்ற நிறைய குறும்படங்கள் பல தலைப்புகளில், பல அரசியல் விவரங்களைத் தாங்கி வர வேண்டும். அது இன்றைய பதின்ம வயதினருக்கு அரசியல் ஆர்வத்தை தூண்டும். நக்கலைட்ஸ் குழுவினருக்கு பாராட்டுதல்கள். மகிழ்ச்சி. பாருங்கள். பகிருங்கள். … பெரியார் தடியா? ஜெண்டில் பேயா?-ஐ படிப்பதைத் தொடரவும்.

கோமியோ கேர்: காவிகளை காறித் துப்பும் நக்கலைட்ஸ்

‘நக்கலைட்ஸ்’ நண்பர்களின் அடுத்த அரசியல் நகைச்சுவை வீடியோ “கோமியோ கேர்”. ஆர்.எஸ்.எஸ் ஆட்சியில் சர்வரோக நிவாரணியாக திணிக்கப்படும் மாட்டு மூத்திரத்தின் மணத்தை மரண மாஸாக நாறடிக்கிறது இந்தப் படம். புகையிலை பழக்கத்தால் புற்று நோயுடன் மும்பை மருத்துவமனையில் இறந்து போன முகேஷை நினைவிருக்கிறதா? எட்டு ஆண்டுகளுக்கு முன்பு திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிய புகையிலை அபாயத்தினை எச்சரிக்கும் அரசு விளம்பரம் அது. இங்கேயும் ஒரு முகேஷ். அதே போன்றொதொரு ஒடிசலான தேகத்துடன். உடல்நலமற்று மருத்துவரிடம் செல்லும் போது அங்கே … கோமியோ கேர்: காவிகளை காறித் துப்பும் நக்கலைட்ஸ்-ஐ படிப்பதைத் தொடரவும்.