பதின்ம வயது தொடங்கி, மரணம் வரை பொதுமை மெய்யியலை உயர்த்திப் பிடித்து, அதற்காகவே இயல்பாக இருந்த வாழ்விலிருந்து விலகி நின்று, திருமணம் உள்ளிட்ட எந்த சட்டகங்களுக்குள்ளும் சிக்காமல், உழைத்த ஒரு தோழரை இழந்திருக்கின்றோம். தோழருடன் நேரடியாக எனக்கு எந்தப் பழக்கமும் இல்லை. சில முறைகளைத் தவிர சந்தித்ததும் இல்லை. இரண்டைத் தவிர மற்ற அனைத்தும் பொதுச் சந்திப்புகள் தாம். வகுப்புகளில், தலைப்புகளில். இரண்டு முறை மட்டுமே தனியாக சந்தித்து உரையாடியிருக்கிறேன். என்ன சொன்னாலும், அதை எப்படிச் சொன்னாலும் … தோழருக்கு செவ்வஞ்சலி-ஐ படிப்பதைத் தொடரவும்.
குறிச்சொல்: நக்சல்பாரி
பயங்கரவாத பீதியூட்டும் பயங்கரவாதிகள்
கேரளாவில் நக்சல் பயங்கரவாதிகள் ஊடுறுவி விட்டதாக மன்மோகன் சிங் பத்திரிக்கையாளர்களைக் கூட்டி அண்மையில் அறிவித்திருக்கிறார். குற்றால மலையில் பாதுகாப்பை பலப்படுத்தியிருப்பதாக தமிழக காவல்துறை தெரிவிக்கிறது. உள்நாட்டு அச்சுறுத்தல் எல்லைமீறி போய்விட்டதாக ப.சிதம்பரம் அவ்வப்போது திருவாய் மலர்ந்தருளுகிறார். சல்வாஜுடும் போன்ற ஆயுதக் குழுக்களை மாநில அரசுகள் கட்டியமைத்திருக்கின்றன. பல்லாயிரம் கோடி செலவில் ‘ஆப்பரேசன் கிரீன் ஹண்ட்’ எனும் படையெடுப்பை சொந்த மக்களின் மீது ஏவி விட்டிருக்கிறது மைய அரசு. என்னதான் நடந்து கொண்டிருக்கிறது நாட்டில்? எது … பயங்கரவாத பீதியூட்டும் பயங்கரவாதிகள்-ஐ படிப்பதைத் தொடரவும்.
தனியார்மயக் கொள்ளையைத் தடுப்போம் வாருங்கள்.
அன்பார்ந்த உழைக்கும் மக்களே, மே தினம் - முதலாளி வர்க்கத்திற்கு எதிராக தொழிலாளி வர்க்கம் தனது உரிமைகளை ரத்தம் சிந்தி போராடி நிலை நாட்டிக் கொண்ட நாள். எட்டு மணிநேர வேலை என்ற உரிமை மட்டுமல்ல, குறைந்தபட்ச ஊதியம், பணி நிரந்தரம், இலவசக் கல்வி, இலவச மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு உரிமைகளை உலகெங்கும் மக்கள் போராடித்தான் பெற்றிருக்கிறார்கள். அவ்வாறு போராடிப் பெற்ற பல உரிமைகள் இன்று நேரடியாக பறிக்கப்படுவதுடன், பல மறைமுகமான வழிகளிலும் நம் … தனியார்மயக் கொள்ளையைத் தடுப்போம் வாருங்கள்.-ஐ படிப்பதைத் தொடரவும்.
புரிந்தவர்களுக்கு ஆபரேசன் கிரீன்ஹன்ட் புரியாதவர்களுக்கு குடியரசு தினம்.
இன்று ஜனவரி 26. குடியரசுதினம் என்று வெகுகாலமாய் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். குடியரசு என்றால் குடிகளுக்கான அரசு என்று பொருள், அதாவது குடிமக்களுக்கான அரசு. ஆனால் தங்களின் செயல்களால் இது குடிமக்களுக்கான அரசல்ல என அறிவித்துக்கொண்டு குடியரசுதினம் எப்படி கொண்டாடமுடியும்? 90களில் பாராளுமன்றத்திற்கு தெரியாமல் கொல்லைப்புற வழியில் திணிக்கப்பட்ட ஒப்பந்தங்களுக்கு பிறகு லட்சக்கணக்கான விவசாயிகள் விவசாயம் செய்யமுடியாமல் தற்கொலை செய்துகொண்டு மாண்டிருக்கிறார்கள். உயிருடன் இருக்கும் விவசாயிகள் இடுபொருள் விலையை குறையுங்கள், தண்ணீர் கிடைக்கச்செய்யுங்கள், விளை பொருளுக்கு உரிய விலை … புரிந்தவர்களுக்கு ஆபரேசன் கிரீன்ஹன்ட் புரியாதவர்களுக்கு குடியரசு தினம்.-ஐ படிப்பதைத் தொடரவும்.
இந்தப்போர் எங்களோடு தொடங்கவுமில்லை, எங்களோடு முடியப்போவதுமில்லை: பகத்சிங்
மார்ச் 23. அடிமைப்பட்டிருந்த இந்திய அரசியல் வானின் விடிவெள்ளி பகத்சிங் இதே நாளில் தான் தூக்கிலிடப்பட்டார். அவரோடு தொடங்கப்படாத அந்தப்போர், அவரோடு முடிந்தும்விடாத அந்தப்போர் இப்போது நக்சல்பாரிகளின் கைகளில். அவர் கண்களின் நெருப்பு இன்னும் அணைந்துவிடவில்லை. இந்த வெளியீடு அந்த நெருப்பை உங்களுக்கு அறிமுகம் செய்கிறது. இன்னும் விரிவாக தெரிந்துகொள்ள புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி யை சுட்டுங்கள். பகத்சிங் -ஒரு அறிமுகம் இந்தியா ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு அடிமையாக (காலனியாக) இருந்த காலம் அது. ஆங்கிலேயர்கள் … இந்தப்போர் எங்களோடு தொடங்கவுமில்லை, எங்களோடு முடியப்போவதுமில்லை: பகத்சிங்-ஐ படிப்பதைத் தொடரவும்.