நவ.7: கொண்டாடும் தகுதி வேண்டும்

இன்று ரஷ்யப் புரட்சி நாள். தோழர் லெனின் தலைமையில் பரந்துபட்ட நாட்டில், பல்வேறு கட்சி அமைப்புகளை ஒன்றுபடுத்தி, எஃகுறுதியான கட்சியைக் கட்டி, பாட்டாளி மக்களின் அதிகாரத்தை வென்றெடுத்த நாள். நூறாண்டுகளைக் கடந்த பின்பும், நினைக்குந்தோறும் அந்தப் பெருமிதம் நம் நெஞ்சை நிறைத்து வழிகிறது. இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் கடந்தாலும் யாராலும் உலகின் முதல் சோசலிச அரசு அமைந்த அந்த நாளை, உழைக்கும் மக்களின் உவகை ஊற்றெடுத்த அந்த நாளை மறக்கவோ, மறைக்கவோ, மறுக்கவோ முடியாது. அதேநேரம் இந்த … நவ.7: கொண்டாடும் தகுதி வேண்டும்-ஐ படிப்பதைத் தொடரவும்.

மார்க்சியம் மட்டுமே தீர்வு

இன்று நவம்பர் ஏழு. உலகப் பாட்டாளி வர்க்கத்தின் மிகவும் மதிப்பு வாய்ந்த நாள் இன்று. அரசு தோற்றம் கொண்ட காலத்திலிருந்து உழைக்கும் வர்க்கம் சுவைத்தறியாத நிர்வாக அதிகாரத்தை சமைத்தறிந்த நாள். மனிதன் உருவாகி வந்த தொடக்கத்திலிருந்து சாதாரண மக்கள் பாவித்திராத வசதிகளையும் வாய்ப்புகளையும் அவர்களுக்கு உருவாக்கித் தந்த நாள். 102 ஆண்டுகளுக்கு முந்திய அந்த நாளின் தனித் தன்மை இன்றும் மக்களின் உயிரோடு கலந்திருக்கிறது. மீண்டும் அந்த நாள் வாராதா? எனும் ஏக்கத்தை மக்களின் மனதில் ஏற்றிக் … மார்க்சியம் மட்டுமே தீர்வு-ஐ படிப்பதைத் தொடரவும்.

உழைக்கும் மக்களின் வெற்றியைச் சாதிப்போம்!

தோழர்கள் நண்பர்கள் அனைவருக்கும் நவம்பர் புரட்சி தின வாழ்த்துக்கள். இந்தியாவிலும் அப்படியான புரட்சியைக் கட்டியமைக்க நாம அனைவரும் செங்கற்களாவோம்.   https://youtu.be/jtis45ReK5k    

கார்ல் மார்க்சின் மூலதனம் நூல் – 150 வது ஆண்டு ! ரசியப் புரட்சி – 100 வது ஆண்டு !!

  அன்பார்ந்த உழைக்கும் மக்களே, கார்ல் மார்க்ஸின் மூலதனம் நூல் வெளியிடப்பட்டதற்கு இது 150 -வது ஆண்டு. அந்நூலில் பாட்டாளி வர்க்கத்தின் எதிர்காலம் குறித்து மார்க்ஸ் வெளியிட்ட கணிப்பை மெய்ப்பித்தது ரசியப் புரட்சி. அந்த ரசிய சோசலிசப் புரட்சிக்கு இது 100-வது ஆண்டு. ஆலைகள் உள்ளிட்ட உற்பத்தி சாதனங்கள் அனைத்தும் பொதுவுடைமை ஆக்கப்படுமானால், அரசு அதிகாரம் தொழிலாளர்கள், விவசாயிகளின் கைக்கு மாறுமானால் ஒரு நாடு எத்தகைய சாதனைகளையெல்லாம் நிகழ்த்த இயலும் என்பதை ரசிய சோசலிசம் நிரூபித்துக் காட்டியது. … கார்ல் மார்க்சின் மூலதனம் நூல் – 150 வது ஆண்டு ! ரசியப் புரட்சி – 100 வது ஆண்டு !!-ஐ படிப்பதைத் தொடரவும்.

மனித குலத்தின் ஆகப் பெருங்கனவை நனவாக்கிய நாள்!

வால்கா புதிய மனித சமுதாயத்தின் முகத்தில் தன்னை கழுவிக் கொண்டது.   பூமிப்பந்து முதன் முதலாய் மனிதப் பண்பின் உச்சத்தில் தன்னை தழுவிக் கொண்டது. அன்றலர்ந்த மலர்களுக்கு தன்னிலும் மென்மையான இதயங்களைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. பரந்து விரிந்த வானம் சோசலிசத்தின் உள்ளடக்கத்தில் தன்னை உணர்ந்து கொண்டது. அலைஓயா கடல்கள் கம்யூனிச பொதுஉழைப்பின் மனதாழம் பார்த்து வியந்தது! சுரண்டலின் நகங்களால் அவமானக் கீறலோடு அலைந்த காற்றுக்கு வரலாற்றில் முதலாய் மனித சுவாசத்தின் மதிப்பு கிடைத்தது! இயற்கையின் மகிழ்ச்சியாய் … மனித குலத்தின் ஆகப் பெருங்கனவை நனவாக்கிய நாள்!-ஐ படிப்பதைத் தொடரவும்.

சோவியத் யூனியனின் அற்புதங்கள்!

தொன்னூற்று மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தோழர் லெனின் தலைமையில் உழைக்கும் மக்களுக்கான ஒரு பொன்னுலகு இந்த பூமியில் கட்டியமைக்கப்பட்டது. அந்த சோசலிச சமூகத்தில் விவசாயிகளும், தொழிலாளர்களும் சுரண்டலற்ற புதியதொரு தலைமுறையையே உருவாக்கினார்கள். சுரண்டல் என்றால் என்ன என்றே அறியாத, முதலாளிகளை நேரிலேயே பார்த்தறியாத சமூகமாக கம்யூனிசத்தின் புதிய தலைமுறை உருவாக்கப்பட்டது. இன்று சோசலிசம் பின்னடைவுக்குள்ளாகியிருப்பதால் கம்யூனிசம் தோற்றுவிட்டது என்றோ, முதலாளித்துவம் வென்று விட்டது என்றோ அர்த்தம் அல்ல. முதலாளித்துவம் வெல்லவில்லை அது மக்களை கொல்லும் என்பதற்கு தமிழகத்தில் … சோவியத் யூனியனின் அற்புதங்கள்!-ஐ படிப்பதைத் தொடரவும்.