நீதியும் ஜனநாயகமும் படும் பாடு

விக்டோரியா கௌரி நியமனத்தை வழக்குரைஞர்கள் ஏன் எதிர்க்கிறார்கள்? கொலீஜியத்துக்கும் NJAC வுக்கும் இடையிலான முரண்பாட்டின் பின்னணி என்ன? இந்த நியமனத்தின் பின்னிருக்கும் நோக்கம் என்ன? ஜான் சத்யன் ஏன் நியமிக்கப்படவில்லை? விளக்குகிறது இந்தக் காணொளி https://www.youtube.com/watch?v=f6e3ZLyWZ20

வதைபடும் நாடாளுமன்றம்

வரலாறு காணாத வகையில் வதைபடும் நாடாளுமன்ற ஜனநாயகம்..! ”விவாதிக்க வேண்டுமா..? – முடியாது!” ”பேச வேண்டுமா – அனுமதி கிடையாது!” ”இவை அநீதியான சட்டங்கள் மக்கள் பாதிக்கப்படுவார்களே” ”நீங்கள் பேசிய எதுவும் சபை குறிப்பில் இடம் பெறாது..” ”நாங்க பேசும் எதையும் காதில் வாங்க மாட்டீர்களா..? அப்ப எதுக்கு சபை?” ”உட்காருங்க, நீங்க சபை விதிகளை மீறுகிறீர்கள்!” ”மக்கள் விரோத சட்டங்களை தனி நபர்கள் ஆதாயத்திற்காக கொண்டு வருகிறீர்கள்! பிரதமரும், உள் துறை அமைச்சரும் ஏன் சபைக்கு … வதைபடும் நாடாளுமன்றம்-ஐ படிப்பதைத் தொடரவும்.

தாவீந்தர்: நாடாளுமன்ற தாக்குதல் நாடகத்தின் முடிச்சு

அப்சல் குரு கடந்த 12ம் தேதி காஷ்மீரில் தீவிரவாதிகளுக்கு உதவினார் என்பதற்காக காவல்துறை துணை கண்காணிப்பாளராக இருக்கும் தாவீந்தர் சிங் என்பவரை கைது செய்தனர். மேலோட்டமாக பார்த்தால் இது சாதாரண செய்தி போல கடந்து போகத் தோன்றும். ஏனென்றால், காஷ்மீரில் இராணுவமும் போலீசும் நடத்தி வரும் வெறியாட்டங்களை அறிந்திருப்பவர்களுக்கு, இது அதிர்ச்சி தரத்தக்க செய்தியாக இருக்காது. அதேநேரம், இந்திய அரசையும், காவி பயங்கரவாதிகளையும் புரிந்திருப்பவர்களுக்கு இதில் முக்கியமான செய்தி இருகிறது. தாவீந்தர் சிங்கை விசாரித்த அதிகாரிகள் கூட, … தாவீந்தர்: நாடாளுமன்ற தாக்குதல் நாடகத்தின் முடிச்சு-ஐ படிப்பதைத் தொடரவும்.

கிரிக்கெட் தேசபக்தர்களே! இந்தியா அமெரிக்காவின் அடிமையான கதை தெரியுமா?

தமிழகத்தில் இது தேர்தல் காலம். யாருக்கு ஓட்டுப் போடுவது;  யாரை வீட்டுக்கு அனுப்பித் ‘தண்டிப்பது’  குறித்தெல்லாம் இப்போது ஒரு முடிவுக்கு வந்திருப்பீர்கள். மாறி மாறி வரும் ஆட்சியாளர்களிடையே அவர்கள் கட்சிக் கொடியில் காணப்படும் வண்ணங்களைத் தாண்டி வேறெந்த வித்தியாசத்தையும் நீங்கள் உணர்ந்திருக்க மாட்டீர்கள் – அவ்வாறு வித்தியாசப்படுத்திக் காட்டுமாறு உங்களிடம் கேட்டால் உங்களால் மௌனத்தைத் தவிற வேறு பதில் எதையும் சொல்லிவிடவும் முடியாது தானே. ஆனாலும் நீங்கள் ஓட்டுப் போட்டுத் தேர்ந்தெடுக்கும் கட்சி இனி ஐந்தாண்டுகளுக்கு நாட்டை … கிரிக்கெட் தேசபக்தர்களே! இந்தியா அமெரிக்காவின் அடிமையான கதை தெரியுமா?-ஐ படிப்பதைத் தொடரவும்.

ராசா கைது ஊழலுக்கு எதிரான நடவடிக்கையா? ஆதரவான நடவடிக்கையா?

  ஒருவழியாக முன்னாள் அமைச்சர் ராசா கைது செய்யப்பட்டுவிட்டார். அனைத்து ஊடகங்களும் இந்த கைது நடவடிக்கையைச் சுற்றியே தங்கள் புல்லரிக்கும் புலனாய்வுகளைச் செய்து செய்திகளாக பீய்ச்சியடிக்கின்றன. இந்தவகைச் செய்திகளைப் படித்தே நாட்டு நடப்பை அறிந்துகொள்ளும் மக்களோ. அவை அடுத்த செய்தியை கொடுக்கும் வரை இதையே தங்கள் அரசியலாக, சமூக அக்கரையாக; இவற்றை அலசுவதையே தங்கள் நாட்டுப்பற்றாக, தார்மீக‌ கடமையாக செய்துகொண்டிருக்கிறார்கள். ஆனால் இந்த ஆர்ப்பரிப்பின் பின்னே மக்கள் அறியவேண்டியவைகள் மங்கிப் போகின்றன.   பண்டைய சுக்ராம் தொடங்கி … ராசா கைது ஊழலுக்கு எதிரான நடவடிக்கையா? ஆதரவான நடவடிக்கையா?-ஐ படிப்பதைத் தொடரவும்.

ஊழல்கள் உரத்துக் கூவுகின்றன, உள்வாங்கிக்கொள்வோர் உண்டா?

அடுத்தடுத்து கரையில் மோதும் அலைகளைப்போல், ஊழல்கள் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன. மக்கள் மனதில் தைத்து உறைந்து கிடக்கும் கோபத்தை உசுப்பிவிடும் தகுதியை ஊழல்கள் என்றோ இழந்துவிட்டன. காரணம், கட்சி வேறுபாடின்றி அனைத்துக் கட்சிகளுமே தமக்குள் ஊழல் வரலாறுகளைக் கொண்டிருக்கின்றன. ஊழலுக்காக கட்சியோ, கட்சிக்காரர்களோ தண்டிக்கப்படுவதில்லை. மட்டுமல்லாது உள்ளுறையாக மக்களே ஊழல்மயப்படுத்தப்பட்டுவிட்டனர். காற்றுள்ளபோதே தூற்றிக்கொள் என்று சந்தர்ப்பவாதமாக ஓட்டுக்குப் பணம் தொடங்கி, சுயநலமாக, காரியவாதமாக தமக்கு என்ன லாபம்? எனும் கேள்வியில் தொங்கிக் கொண்டு வாழும்படி மக்கள் பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறார்கள். … ஊழல்கள் உரத்துக் கூவுகின்றன, உள்வாங்கிக்கொள்வோர் உண்டா?-ஐ படிப்பதைத் தொடரவும்.

அணுவிபத்து இழப்பீடு மன்னிக்கவும் தப்பவைக்கும் மசோதா நிறைவேறியது

கடந்த சில நாட்களாக அனைத்து ஊடகங்களாலும் பரபரப்பாக பேசப்பட்ட அணுவிபத்து இழப்பீடு மசோதா நாடாளுமன்றத்தில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியுள்ள‌து. இதை நிறைவேற்றுவதற்கு முன் நாடாளுமன்றத்தில் விவாதம்(!)  நடைபெற்றது. இந்த மசோதாவின் உயிரோட்டம் குறித்து விவாதம் செய்வதை இடதுசாரிகள் என தம்மை அழைத்துக்கொள்வோர் உட்பட எல்லா ஓட்டுக்கட்சிகளும் மிகக்கவனமாக தவிர்த்துக்கொண்டன. மாறாக அவர்கள் விவாதித்ததெல்லாம் தொகையை அதிகரிக்கவேண்டும் என்பன போன்ற சில்லரை விசயங்களைத்தான். இழப்பீடு மசோதவில் மத்திய அரசு கொண்டு வரும் புதிய திருத்தம் தேசிய நலனுக்கு … அணுவிபத்து இழப்பீடு மன்னிக்கவும் தப்பவைக்கும் மசோதா நிறைவேறியது-ஐ படிப்பதைத் தொடரவும்.