2018 நாட்காட்டி தரவிறக்கம்

2018 cover

 

தோழர்கள், நண்பர்களுக்கு வணக்கம்.

கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் நாட்காட்டியை வடிவமைத்துள்ளேன்.  ஜனவரி முதல் நாளில் வெளியிட எண்ணியிருந்தேன், இரண்டு நாட்கள் தாமதமாகி விட்டது. கடந்த ஆண்டில் நண்பர்கள் தோழர்கள் தெரிவித்திருந்த யோசனைகளில் சிலவற்றை ஏற்று மாற்றம் செய்திருக்கிறேன். சிலவற்றை தவிர்த்திருக்கிறேன். மீண்டும் உங்கள் ஆலோசனைகளை வரவேற்கிறேன்.

போராட்டக் காட்சிகளை முகப்புப் படங்களாக வைத்திருக்கிறேன். கடந்த ஆண்டு நடைபெற்ற முக்கியமான போராட்டங்களை நினைவுகூரும் வகையில் தொகுத்துள்ளேன். விமர்சனங்கள் இருந்தால் பதிவு செய்யலாம்.

ஏ3 அளவில் வண்ணத்தில் அச்செடுத்து பயன்படுத்திக் கொள்க.

 

2018 நாட்காட்டி தரவிறக்கம்

2017 நாட்காட்டி தரவிறக்கம்

2017-calendar

நண்பர்கள் தோழர்கள் அனைவருக்கும் வணக்கம்.

 

2017 ஆம் ஆண்டுக்கான நாட்காட்டியை வடிவமைத்திருக்கிறேன். கடந்த ஆண்டே இப்படி ஒரு முயற்சியை செய்ய வேண்டும் என எண்ணியிருந்தேன். சில காரணங்களால் அதை நடைமுறைப்படுத்த முடியாமல் போனது. இந்த ஆண்டும் கூட டிசம்பர் கடைசி வாரத்தில் வெளியிட வேண்டும் என திட்டமிட்டிருந்தேன். இப்போதும் இரண்டு வாரங்கள் தள்ளிப் போய் விட்டது. கிடைத்த நேரத்தையும், தெரிந்த நுட்பத்தையும் பயன்படுத்தியே இதைச் செய்திருக்கிறேன். ஆகவே, இதில் சில குறைபாடுகளும் இருக்கின்றன. ஆர்வமுள்ளவர்கள் தக்க ஆலோசனைகளைத் தரலாம்.

 

ஒவ்வொரு மாதத்திலும் ஒரு மார்க்சியப் பொன்மொழி, அரிய புகைப்படம், அரசு விடுமுறை தினம், சிறப்பு நாட்கள் என அனைத்தையும் இணைத்துள்ளேன். அரசு விடுமுறை நாட்களை கூடியவரை தமிழ்ப்படுத்தியும் நேர்ப்படுத்தியும் சேர்த்துள்ளேன். எடுத்துக்காட்டாக பக்ரீத் என்பதை ஆட்டுப் பெருநாள் எனவும், தீபாவளி என்பதை நரகாசுரன் நினைவு நாள் எனவும் மாற்றியுள்ளேன். சிறப்பு நாட்களைப் பொருத்தவரை அனைத்திலும் அந்தந்த ஆண்டுகளை சேர்த்துள்ளேன். புகைப்படங்களைப் பொருத்தவரை பெரும்பாலானவை கருப்பு வெள்ளைப் புகைப்படங்கள். எனவே, கருப்பு வெள்ளையில் A3 அளவில் அச்செடுத்து பயன்படுத்திக் கொள்க.

2017 நாட்காட்டியை தரவிறக்க

தரவிறக்கம் 2 

%d bloggers like this: