வரிசையான பண்டிகை கொண்டாட்டங்களுக்கு மத்தியில் இன்னுமொரு பண்டிகையாக வந்திருக்கிறது குடியரசு தினம். ஆனால் ஏனைய பண்டிகைகளை விட இந்த பண்டிகைக்கு அரசு காட்டும் முனைப்பு மக்களிடையே பீதியூட்டுவதாக இருக்கும். தொடர்ந்து அப்படித்தான் இருந்து கொண்டிருக்கிறது. குடிமக்களுக்கான அரசு இது அதை குலைப்பதற்காக தீவிரவாதிகள் முயல்கிறார்கள், அவர்களிடமிருந்து மக்களை பாதுகாக்கவே இத்தகைய கெடுபிடிகள் என்பது வழக்கமாக அரசு கூறும் காரணம். சென்னையில் மட்டும் கடந்த சில நாட்களில் 800 க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தியாவெங்கும் பாதுகாப்பு … பெயரில் குடியரசு செயலில் முடியரசு-ஐ படிப்பதைத் தொடரவும்.
குறிச்சொல்: நாட்டுப்பற்று
கொடியேற்று, கொண்டாடு. குடியரசு தினம்
நாளை 61 வது குடியரசு தினமாம். பாதுகாப்பு ஏற்பாடுகள், பய பீதிகள் என கடந்த வாரம் முதலே பரபரப்பு காட்டப்படுகிறது. ஒரு கொண்டாட்ட மனோநிலைக்கு மக்கள் ஆயத்தப்படுத்தப்படுகிறார்கள். கொண்டாட்டங்களை நுகர்வைக்கொண்டே அளக்கமுடியும் என்பதால் வர்த்தக நிறுவனங்கள் தங்கள் விழாக்கால தள்ளுபடியை குடியரசு தினத்திற்கும் நீட்டுகின்றன. தொலைக்காட்சி நிறுவனங்கள் 'தேசபக்த' நடிகைகளை "வந்தே மாட்றோம்" என்று கூறவைத்து நம்மை கொண்டாட தூண்டுகின்றன. இதையே இன்னும் விரிவான அளவில் யாராவது வெளிநாட்டு தலைவர்களை அழைத்துவந்து இராணுவ தளவாடங்களை ஓடவிட்டுக் காட்டி … கொடியேற்று, கொண்டாடு. குடியரசு தினம்-ஐ படிப்பதைத் தொடரவும்.