பெருவெளியின் விரிவில் ஒரு தூசில் ஒட்டிக் கொண்டிருக்கும் தூசு நான். பெருங்கடலின் பரப்பில் மழையின் இடையே பறந்து கொண்டிருக்கும் ஒரு கொசு நான். மலர்த் தோட்டத்தின் அண்மையில் கோடி மலர்களின் மணங்களூடே ஒற்றை மலரில் நிறைந்து போகும் ஒரு தேனீ நான். என்னை நான் எப்படிப் பார்ப்பது? எப்படிப் பார்க்க நான் அனுமதிப்பது? பேரண்டத்தின் நுணுக்கமே ஆனாலும் என் அடைவுக்கும் பொருள் உண்டென்று அறிவித்து விடட்டுமா? துளிகளிடையே புகுந்து பறந்தாலும் நனைந்து விட்டால் தலை துவட்டுங்களென்று கோரிக்கை … பெருவெளியின் தூசு-ஐ படிப்பதைத் தொடரவும்.