இந்த ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு ஒரு வாரத்துக்கும் மேலாகிறது. இந்த நாட்களில் இயல்புக்கு மாறான இரண்டு விசயங்கள் காணக் கிடைக்கின்றன. இதை, இருவேறு இடங்களிலிருந்து வெளிப்படும் ஒரே மாதிரியான வெளிப்பாடு என்று கூறினால் அது மிகத் துல்லியமானதாக இருக்கும். முதலில், பாஜக பக்கத்திலிருந்து இந்த நிதிநிலை அறிக்கை குறித்த இறும்பூறெய்தல்களை அடக்கி வாசிக்கிறார்கள். நிர்மலா சீதாராமனை நிதிநிலை அறிக்கையை வெளியிடப் போகும் இந்தியாவின் முதல் பெண் நிதியமைச்சர் என்றார்கள். இந்திரா காந்தி இருந்திருக்கிறார் … பட்ஜெட்: யானை மிதித்து விழுந்த நிதி ஓட்டை-ஐ படிப்பதைத் தொடரவும்.
குறிச்சொல்: நிதிநிலை அறிக்கை
பட்ஜெட்: ஜெட்லி கிண்டிய அல்வா
2018 -2019 ம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கை பாராளுமன்றத்தில் நிதியமைச்சர் ஜெட்லியால் அறிவிக்கப்பட்டது. நாட்டிலுள்ள அரசியல் கட்சியினரும், அறிவுத் துறையினரும் இன்னும் பிறரும் நிதிநிலை அறிக்கை குறித்து அலசி ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள். இவர்களுடைய பொதுவான கருத்து என்னவாக இருக்கிறது என்றால், குஜராத் தேர்தலில் பாஜகவுக்கு கிடைத்த இழுபறியான வெற்றியினாலும், சில மாநிலங்களுக்கான தேர்தல் அடுத்தடுத்து வரவிருப்பதாலும் தங்கள் மீது வெறுப்புற்று இருக்கும் விவசாயிகள், நடுத்தர மக்கள் மீது கரிசனம் கொண்டு நிதி நிலை அறிக்கையை … பட்ஜெட்: ஜெட்லி கிண்டிய அல்வா-ஐ படிப்பதைத் தொடரவும்.