ராக்கெட் விட்டவர்களின் ராக்கெட்

கடந்த 25 ம் தேதி இஸ்ரோ கடவுள்கள் ஏவிய ஜிஎஸ்எல்வி ராக்கெட் சிவகாசி ராக்கெட்டாகிப் போனதில் கடவுளர்களுக்கு மட்டுமல்லாது பக்தர்களுக்கும் ஏக வருத்தம். ஏனென்றால் முன்பு உள்ளூர் தயாரிப்பு என்று ஏழுமலையானையெல்லாம் ஏவலுக்கு கூப்பிட்ட பிறகும் அவன் அழுத்தமாக போட்ட கோவிந்தாவின் இழுப்பு ஏப்ரலிலிருந்து டிசம்பர் வரை நீண்டுவிட்டதே. ஒரு செயற்கைக்கோள் ஏவல் வெற்றிகரமாக சுற்றுவட்டப்பாதையில் நிலை நிறுத்தப்படும்போது அது ஒரு செய்தியாக முடிந்துவிடுகிறது. ஆனால் அதுவே தோல்வியில் முடியும்போது அதனுடன் தேசபக்தியும் கலந்துவிடுவதால் அதன் பரப்பெல்லை … ராக்கெட் விட்டவர்களின் ராக்கெட்-ஐ படிப்பதைத் தொடரவும்.

நிலவை உடைத்து ஒட்டிய அல்லா

இஸ்லாம்: கற்பனைக்கோட்டையின் விரிசல்கள் வழியே பகுதி ௨௫ நிலா பூமியின் ஒரே துணைக்கோள். சராசரியாக‌ 3,84,403 கிமீ தூரத்தில் நீள்வட்டப்பாதையில் தன்னைத்தானே சுற்றிக்கொண்டு பூமியையும் சுற்றிவருகிறது. புவியின் ஈர்ப்பு விசையில் ஆறில் ஒரு பங்கே கொண்டிருந்தாலும், நிலவின் தாக்கம் பூமியில் குறிப்பிடத்தகுந்த அளவு செயல்படுகிறது. வானவியல் ஆய்வுகளில் மனிதர்களின் முன்னேற்றம் பிரபஞ்சத்துடன் ஒப்பிடுகையில் குறைவு என்றாலும், மனித வரலாற்றுடன் ஒப்பிடுகையில் மீப்பெரும் சாதனைகள் வானவியலில் நிகழ்த்தப்பட்டிருக்கின்றன. விண்கற்களின் மோதல்கள் தொடங்கி நெபுலாக்கள், புழுத்துளைகள் ஈறாக வானவியல் மாற்றங்களை … நிலவை உடைத்து ஒட்டிய அல்லா-ஐ படிப்பதைத் தொடரவும்.