செய்தி வாசிப்பு: இந்த வழக்கு நீதிபதி முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழ்நாடு அரசு மற்றும் டி.ஜி.பி. தரப்பில் மூத்த வக்கீல் என்.ஆர்.இளங்கோ, மாநில தலைமை அரசு குற்றவியல் வக்கீல் அசன் முகமது ஜின்னா ஆகியோர் ஆஜராகி, ''தமிழ்நாட்டில் நிலவும் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை மற்றும் உளவுத்துறை அறிக்கையின் அடிப்படையில் 24 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்துக்கு அனுமதி வழங்க மறுக்கப்பட்டுள்ளது. 23 இடங்களில் உள் அரங்கில் கூட்டம் நடத்தலாம், கடலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி ஆகிய 3 … ஆர்.எஸ்.எஸ் ஊர்வலமும் நீதி மன்றமும்-ஐ படிப்பதைத் தொடரவும்.
குறிச்சொல்: நீதிபதி
வரம்பு மீறும் நீதிமன்றங்கள்
நீதி மன்றத்தின் அல்லது நீதிபதியின் ஆளுமை வரம்பு என்ன? எந்த அடிப்படையில் தீர்ப்பு கூறப்படுகிறது? கூறப்படும் தீர்ப்பிற்கு வழிகாட்டலாக இருக்கக் கூடியது என்ன? இதுபோன்ற கேள்விகளெல்லாம் நீதிபதிகளுக்கு எழுமா? எழாதா? நீதிபதிகள் தங்களைத் தாங்களே கடவுள்களாக கருதிக் கொள்ள முடியுமா? அவ்வாறாக கருதிக் கொள்ளும் நீதிபதிகளின் தீர்ப்புகள் சட்டங்களாக ஆகுமா? நீதிபதிகளின் தீப்புகள் சட்டங்களுக்கான விளக்கங்களா? அல்லது சட்டங்களை மேலாதிக்கம் செய்யும் அளவுக்கு ஆற்றல் கொண்டவையா? அண்மையில் நீதி மன்றங்களின் தீர்ப்புகள் தொடர்ந்து விவாதத்திற்கு உள்ளாகி வருகின்றன. … வரம்பு மீறும் நீதிமன்றங்கள்-ஐ படிப்பதைத் தொடரவும்.
வானிலிருந்து குதித்தார்களா நீதிபதிகள்?
நாட்டில் இலவசங்கள் குறித்து விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. இது குறித்து சில நாட்களுக்கு முன் மோடி நாட்டின் பொருளாதாரம் சீரழிகிறது என்று திருவாய் மலர்ந்தருளி தொடங்கி வைத்தார். அதனை பாஜக வழக்குறைஞர் அசுவினி உபாத்யாயா வழக்காக வழிமொழிந்தார். இன்னும் ஒருபடி மேலே சென்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா, “திமுக மட்டும் தான் புத்திசாலித்தனமான கட்சி என்று நினைக்காதீர்கள். நீங்கள் பேசுவதையெல்லாம் பற்றி நாங்கள் எதுவும் சொல்லாததால் எங்களுக்கு எதுவும் தெரியாது என நினைக்க வேண்டாம்” … வானிலிருந்து குதித்தார்களா நீதிபதிகள்?-ஐ படிப்பதைத் தொடரவும்.
மாரிதாஸின் வழக்குரைஞரா நீதிபதி..?
நேர்மையான விமர்சனங்கள், மாற்றுக் கருத்துகளுக்கே இடமின்றி தடாலடியாக அவதூறு பரப்புவதும், மததுவேஷ கருத்துக்களை விதைப்பதும், குறிப்பிட்ட ஒரு அரசியல் இயக்கத்தை அழிப்பதே என் நோக்கம் என பிரகடனப்படுத்தி இயங்குவதும் மாரிதாஸின் இயல்பாக உள்ளது. மக்கள் சந்திக்கும் அடிப்படையான பல பிரச்சினைகளை பின்னுக்கு தள்ளி சதா சர்வ காலமும் என்ன வேண்டுமானாலும் பேசுவது, அவதூறுகளை அள்ளிவிடுவது என இயங்கி வருபவருக்கு எப்படிப்பட்ட பின்புலம் இருக்கிறது என்பதற்கு இன்றைக்கு அவர் மீதான வழக்கு ரத்து செய்யப்பட்டு, நீதிபதியே அவரது வக்கீலாக … மாரிதாஸின் வழக்குரைஞரா நீதிபதி..?-ஐ படிப்பதைத் தொடரவும்.
எந்தப் பொன்மகள் வரவேண்டும்?
பொன்மகள் வந்தாள். வெளிவருவதற்கு முன்பே பல விவாதங்களை கிளப்பி விட்ட திரைப்படம். இனி சூர்யா நடிக்கும் திரைப்படங்களுக்கு திரைக்கூடங்களை ஒதுக்க மாட்டோம் என உரிமையாளர்கள் மிரட்டினார்கள். அதையும் மீறி OTT தளத்தில் வெளிவந்திருக்கிறது இத் திரைப்படம். இதற்கு முன்பே கமலஹாசன் நடித்த விஸ்வரூபம் திரைப்படத்திலும் கிட்டத்தட்ட இதே பிரச்சனை ஏற்பட்டு பின், பின்வாங்கப்பட்டு திரைக்கூடங்களில் வெளியானது. இயக்குனர் சேரன் கூட இதே திசையில் D2H எனும் நிறுவனத்தை தொடங்கி ஆதரவில்லாமல் கைவிட்டார். இது ஒரு வகையில் புதிய … எந்தப் பொன்மகள் வரவேண்டும்?-ஐ படிப்பதைத் தொடரவும்.
நீதிமன்ற நெருக்கடி உணர்த்துவது என்ன?
உச்ச நீதி மன்றத்தின் மூத்த நீதிபதிகளான செல்லமேஸ்வர், ரஞ்சன்கோகோய், மதன்.பி.லோகுர், குரியன் ஜோசப் ஆகியோர் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பை நடத்தி நீதித்துறை சுதந்திரம் – ஜனநாயகத்திற்கு பேராபத்து நேர்ந்திருப்பதாகவும் மக்கள் தான் இந்த பேரபாயத்திலிருந்து நீதிமன்றத்தின் மாண்பை காப்பாற்ற வேண்டும் என அறிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. நாட்டின் உயரிய நிலையில் இருக்கும் நீதிபதிகள் இவ்வாறு கூறியிருப்பது, மக்களிடத்தில் மிகப் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்க வேண்டும். நாட்டின் நிர்வாகம் தன்னைத்தானே சுய மதிப்பீடு செய்து … நீதிமன்ற நெருக்கடி உணர்த்துவது என்ன?-ஐ படிப்பதைத் தொடரவும்.
எத்தனை நாள் தான் சகிப்பது நீதித்துறையின் அயோக்கியத்தனத்தை?
அப்சல் குருவுக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பெழுதிய நீதிபதி(!)கள், குற்றம் நீரூபிக்கபடவில்லை என்றாலும் இந்திய கூட்டு மனசாட்சியை திருப்திப்படுத்த மரண தண்டனை விதிக்கிறோம் என்றார்கள். சுவாதி கொலை செய்யப்பட்ட வழக்கில், 90 நாட்களை நெருங்கியும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய முடியாதிருந்த நிலையில், இன்னும் ஓரிரு நாட்களில் பிணை கிடைத்துவிடும் என்ற நிலையில், ராம்குமார் தற்கொலை செய்து கொண்டார் என்றது சிறைத்துறை. இந்த இரண்டு நிகழ்வுகளிலும் வெளிப்படும் கிடக்கை என்னவென்றால், அப்சல் குரு வழக்கைப் பொருத்தவரை தண்டனை கொடுப்பது … எத்தனை நாள் தான் சகிப்பது நீதித்துறையின் அயோக்கியத்தனத்தை?-ஐ படிப்பதைத் தொடரவும்.
ரவுடித்துறையை என்ன செய்யப் போகிறோம்?
சுவாதி கொலை வழக்கில் எந்த ஒரு ஆதாரமும் இல்லாமல் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராம்குமார் சிறைக்குள்ளேயே கொல்லப்பட்டு விட்டார். மூன்று நாட்களுக்குப் முன்பு, கார்த்திக் என்பவரை காவல் நிலையத்தில் வைத்து அடித்துக் கொன்று விட்டு அதை மறைப்பதற்காக அவரின் பெற்றோருக்கு ஒன்றரை லட்சம் ரூபாய் கொடுத்து சரிக்கட்ட முயற்சித்திருக்கிறார்கள் காவல்துறை அதிகாரிகள். கடந்த வாரத்தில் நிகழ்ந்த இவை வெறும் தகவல்கள் அல்ல. மக்கள் மீது காவல்துறை கொண்டிருக்கும் மதிப்பீடு. காலங்காலமாக தொடர்ந்து கொண்டிருக்கும் இதுபோன்ற மனிதத்தன்மையற்ற … ரவுடித்துறையை என்ன செய்யப் போகிறோம்?-ஐ படிப்பதைத் தொடரவும்.
ஏன் அவர்களால் பதில் கூற முடியவில்லை?
கடந்த 6ம் தேதி நீதிமன்ற அடக்குமுறைக்கு எதிராக வழக்குறைஞர்கள் பேரணி சென்னையில் வெற்றிகரமாக நடந்தது. ஊழலுக்கு எதிரான வழக்குறைஞர்களின் பேரணி, ஹெல்மெட் பிரச்சனை, விசாரணை என்ற பெயரில் மூத்த வழக்குறைஞர்களுக்கு அவமரியாதை. இந்த விசயத்தில் எந்த சட்ட, நீதிமன்ற மரபுகளும் பின்பற்றப்படாதது, எல்லாவற்றையும் விட, எட்டு மாதங்களுக்கும் மேலாக 43 வழக்குறைஞர்கள் வழக்குகளை நடத்த விடாமல் தடுக்கப்பட்டிருப்பது என, பல மாதங்களாக வழக்குறைஞர்களுக்கு எதிரான நீதிமன்ற நடவடிக்கைகள் விவாதங்களுக்கு உள்ளாகி வருகிறது. இதன் தொடர்ச்சியாக உச்ச நீதிமன்றத்தின் … ஏன் அவர்களால் பதில் கூற முடியவில்லை?-ஐ படிப்பதைத் தொடரவும்.
சட்டமும் நீதிமன்றங்களும் புனிதமானவைகளா?
ஏழு மாவட்ட விவசாயிகளும் தங்கள் எதிர்ப்புக் குரலை தொடர்ச்சியாக பதிவு செய்திருந்தும் கெயில் நிறுவனம் விவசாய நிலத்தில் குழாய் பதிப்பது தொடர்பான வழக்கில் நேற்று நீதிமன்றம் தமிழக அரசின் மனுவை தள்ளுபடி செய்து குழாய் பதிக்கும் வேலைகளுக்கு அனுமதியளித்து உத்தரவிட்டிருக்கிறது. தமிழகத்தின் வழக்குறைஞர் ஏன் நீதிமன்றத்துக்கு செல்லவில்லை? நீதிபதிகள் எந்த அடிப்படையில் அனுமதி வழங்கினார்கள்? போன்றவைகள் ஒரு பக்கம் இருக்கட்டும். அரசின் திட்டம் மக்களை பாதிக்கிறது எனவே, அதை தடுக்க வேண்டும் என நீதிமன்றங்களின் கதவைத் தட்டினால், … சட்டமும் நீதிமன்றங்களும் புனிதமானவைகளா?-ஐ படிப்பதைத் தொடரவும்.