வானிலிருந்து குதித்தார்களா நீதிபதிகள்?

நாட்டில் இலவசங்கள் குறித்து விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. இது குறித்து சில நாட்களுக்கு முன் மோடி நாட்டின் பொருளாதாரம் சீரழிகிறது என்று திருவாய் மலர்ந்தருளி தொடங்கி வைத்தார். அதனை பாஜக வழக்குறைஞர் அசுவினி உபாத்யாயா வழக்காக வழிமொழிந்தார். இன்னும் ஒருபடி மேலே சென்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா, “திமுக மட்டும் தான் புத்திசாலித்தனமான கட்சி என்று நினைக்காதீர்கள். நீங்கள் பேசுவதையெல்லாம் பற்றி நாங்கள் எதுவும் சொல்லாததால் எங்களுக்கு எதுவும் தெரியாது என நினைக்க வேண்டாம்” … வானிலிருந்து குதித்தார்களா நீதிபதிகள்?-ஐ படிப்பதைத் தொடரவும்.

ஞான்வாபி: ‘எச்’ராஜா மன்றங்கள்

நீதி மன்றங்களின் உத்தரவுகள் எந்தவித திடுக்கிடலையும் ஏற்படுத்தவில்லை. ஏனென்றால், அவை பெயரில் மட்டுமே நீதி மன்றங்கள் எனும் புரிதல் உண்டு. ஊடகங்கள் .. .. இந்தச் சொல்லை உச்சரிக்காமல் இருப்பதே நம்மை தாழ்த்திக் கொள்ளாமல் இருக்கும் வழி. ஆனால், அரசியல் கட்சிகள் ..? இந்தியாவிலிருக்கும் எந்த அரசியல் கட்சியும் இந்த அநீதியான, அராஜகமான, அறுவெறுப்பான, அலட்சியமான இந்த நீதிமன்ற உத்தரவுகள் குறித்து எந்தவித கருத்தையும் சொல்லாமல், முணுமுணுக்கக் கூட இல்லாமல் அசிங்கமான அமைதியைக் காக்கின்றனவே ஏன்? சில … ஞான்வாபி: ‘எச்’ராஜா மன்றங்கள்-ஐ படிப்பதைத் தொடரவும்.

நீதிமன்றம் .. .. .. ஹா .. ஹா..

மாண்புமிகு உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி திரு. N V ரமணா அவர்களுக்கு வணக்கம் .. இந்தியாவின் எல்லா மாநிலங்களைக் காட்டிலும் பேரமைதி மிக்க மாநிலமான தமிழகத்தில் இருந்து ஊடகவியலாளர் B.R. அரவிந்தாக்ஷன் எழுதுகிறேன் 2018-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 10 -ம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் ( மனு எண் W.P.SR.No.94430/2018 ) பாலியல் பலாத்தகார புகார் குறித்த வழக்கில் உத்தரவு ஒன்றை பிறப்பித்தது.தமிழக லஞ்சஒழிப்புத்துறை இணை இயக்குனராக இருந்த முருகன் IPS தன் … நீதிமன்றம் .. .. .. ஹா .. ஹா..-ஐ படிப்பதைத் தொடரவும்.

ஜக்கியின் சட்டவிரோத சாம்ராஜ்யம்

கோயம்புத்தூரில் ஜக்கி வாசுதேவ் எப்படி தனது ஆசிரமத்தையும் ஈஷா அமைப்பையும் சட்டவிரோதமாக உருவாக்கினார் என்பது குறித்து news laundry இணையதளம் நீண்ட கட்டுரையை வெளியிட்டிருக்கிறது. இது அதன் மொழிபெயர்ப்பு. கோயம்புத்தூரின் இக்கரை பொலுவம்பட்டியில் 150 ஏக்கர் பரப்பளவுக்கு மிகப் பெரிய ஆசிரமத்தை உருவாக்கிவைத்திருக்கிறார் ஜக்கி வாசுதேவ். ஆங்கிலத்தில் சரளமாக உரையாடும் இந்த சாமியாரின் ஆசிரமம் பல்வேறு முறைகேடுகள் செய்து கட்டப்பட்டது என்ற குற்றச்சாட்டுகள் தொடர்ந்து இருந்து வருகின்றன. இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்துக் கேட்கும்போதெல்லாம், "இவையெல்லாம் நிரூபிக்கப்பட்டவையா?" என்று … ஜக்கியின் சட்டவிரோத சாம்ராஜ்யம்-ஐ படிப்பதைத் தொடரவும்.

நாட்டாம தீர்ப்ப (மாத்தி) சொல்ல வேண்டாம், கம்முனு இருந்தா போதும்.

செய்தி; உச்ச நீதிமன்றத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், விவசாய சட்டங்களுக்கு எதிராகவும் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளின் விசாரணை, இன்று (ஜனவரி 11) தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே மற்றும் நீதிபதிகள் போப்பண்ணா, ராமசுப்ரமணியன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, “மூன்று வேளாண் சட்டங்கள் மீதான விவசாயிகளின் ஆட்சேபம் தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்தக் குழு அமைக்கப்படும்வரை, வேளாண் சட்டங்களை மத்திய அரசு தற்காலிகமாக நிறுத்தவில்லையென்றால், அதை நாங்கள் நிறுத்த வேண்டியிருக்கும். இவ்விவகாரத்தை மத்திய அரசு கையாண்ட விதம் ஏமாற்றத்தைத் தருகிறது. ஏனென்றால் … நாட்டாம தீர்ப்ப (மாத்தி) சொல்ல வேண்டாம், கம்முனு இருந்தா போதும்.-ஐ படிப்பதைத் தொடரவும்.

எந்தப் பொன்மகள் வரவேண்டும்?

பொன்மகள் வந்தாள். வெளிவருவதற்கு முன்பே பல விவாதங்களை கிளப்பி விட்ட திரைப்படம். இனி சூர்யா நடிக்கும் திரைப்படங்களுக்கு திரைக்கூடங்களை ஒதுக்க மாட்டோம் என உரிமையாளர்கள் மிரட்டினார்கள். அதையும் மீறி OTT தளத்தில் வெளிவந்திருக்கிறது இத் திரைப்படம். இதற்கு முன்பே கமலஹாசன் நடித்த விஸ்வரூபம் திரைப்படத்திலும் கிட்டத்தட்ட இதே பிரச்சனை ஏற்பட்டு பின், பின்வாங்கப்பட்டு திரைக்கூடங்களில் வெளியானது. இயக்குனர் சேரன் கூட இதே திசையில் D2H எனும் நிறுவனத்தை தொடங்கி ஆதரவில்லாமல் கைவிட்டார். இது ஒரு வகையில் புதிய … எந்தப் பொன்மகள் வரவேண்டும்?-ஐ படிப்பதைத் தொடரவும்.

17 பேர் கொலை : ஏவல் துறையின் அடாவடி

17 பேர் கொலை : செய்ய வேண்டியது என்ன? பகுதி 2 மேட்டுப் பாளையத்தில் நடந்த 17 பேர் கொலையை ஒரு பேச்சுக்காக அதை விபத்து என்றே கொள்வோம். 17 பேர் மரணமடைந்துள்ள ஒரு விபத்தில் அதனைத் தொடர்ந்து நடந்த நிகழ்வுகளில் காவல் துறை நடந்து கொண்ட விதம் எப்படி இருந்தது? நடந்தது வெறும் விபத்தில்லை என்று பாதிக்கப்பட்டவர்கள் பக்கம் நின்று சிலர் போராட்டம் நடத்துகிறார்கள். இதில் காவல் துறை நடந்து கொண்ட விதம் சரியா? இப்படி … 17 பேர் கொலை : ஏவல் துறையின் அடாவடி-ஐ படிப்பதைத் தொடரவும்.

போக்குவரத்து வேலை நிறுத்தம்: மிச்சமிருப்பது என்ன?

  போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டம் 7 நாட்களை கடந்து தொடர்ந்து கொண்டிருக்கிறது. இன்னும் குடும்பத்தினர் போராட்டம், மக்களின் ஆதரவு என தொடர்ந்து விரிவடைந்து கொண்டும், வீரியமடைந்து கொண்டும் இருக்கிறது. இந்தப் போராட்டம் திடீரென நடைபெறவில்லை, தொடர்ச்சியாக நடைபெற்று வந்த போராட்ட முயற்சிகளின் தொடரியாகவே இந்த காலவரையற்ற போராட்டம் தற்போது நடந்து கொண்டிருக்கிறது என்பதையும், இந்தப் போராட்டத்தில் இருக்கும் நியாயத்தையும் மக்கள் உணர்ந்து கொண்டிருக்கிறார்கள். 7 நாட்களைக் கடந்த பின்பும் மக்கள் எதிர்ப்பு எதையும் பெரிதாக காட்டாதிருப்பத்லிருந்தே இது … போக்குவரத்து வேலை நிறுத்தம்: மிச்சமிருப்பது என்ன?-ஐ படிப்பதைத் தொடரவும்.

விவசாயி, மாநில உரிமை, சாய்பால் ஜானா எல்லாமே நாய்ச் சங்கிலி தான் இந்தியாவுக்கு

முகநூல் நறுக்குகள் 7-12   செய்தி: கிரானைட் கொள்ளை வழக்குகள் இரண்டில் இருந்து பி.ஆர்.பழனிச்சாமி, அவருடைய மகன் ஆகியோரை மேலூர் கோர்ட்டு விடுவித்தது உத்தரவிட்டுள்ளது. மட்டுமல்லாது, அரசு அனுமதி பெற்று ஐ.ஏ.எஸ். அதிகாரி அன்சுல்மிஸ்ரா மீது நடவடிக்கை எடுக்கவும் கோர்ட்டு உத்தரவிட்டு் தீர்ப்பளித்துள்ளது. இம்சை அரசன் 24ம் புலிகேசி: யாரங்கே துப்புகிற துப்பலில் நீதி மன்றங்கள் மூழ்கி தத்தளிக்க வேண்டாமா? .. .. .. ம்ம்ம்.. .. .. கிளப்புங்கள். மேலூர் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி … விவசாயி, மாநில உரிமை, சாய்பால் ஜானா எல்லாமே நாய்ச் சங்கிலி தான் இந்தியாவுக்கு-ஐ படிப்பதைத் தொடரவும்.

சட்டத்தைக் கூட மதிக்காத நீதிபதிகளை நாம் மதிக்க வேண்டுமா?

தமிழ்நாடு பல விசயங்களில் இந்தியாவுக்கு முன்னோடியாக இருந்திருக்கிறது. இந்திய விடுதலைப் போர் தமிழகத்திலிருந்து தான் தொடங்கியது. பார்ப்பனீயத்துக்கு எதிராக சளைக்காமல் போராடியது, இந்தி திணிப்பை எதிர்த்தது என சொல்லிக் கொண்டே போகலாம். அந்த அட்டவணையில் புதிதாக இன்னும் ஒரு விசயமும் சேர்ந்திருக்கிறது. கடந்த 10/09/2015 அன்று மதுரையில் ஆயிரத்து ஐநூற்றுக்கும் மேற்பட்ட வக்கீல்கள் கலந்து கொண்டு நடத்திய நீதிபதிகளின் ஊழல்களுக்கு எதிரான பேரணி. அதன் முடிவில் ஊழல் நீதிபதிகளின் முதல் பட்டியல் வெளியிடப்பட்டது. நீதிபதிகளின் ஊழல் போக்கு … சட்டத்தைக் கூட மதிக்காத நீதிபதிகளை நாம் மதிக்க வேண்டுமா?-ஐ படிப்பதைத் தொடரவும்.