அண்மையில் சென்னை சென்றிருந்த போது பழங்காசு. சீனிவாசன் ஐயாவை சந்தித்திருந்தேன். அதுவரை, அவரின் சேகரிப்பில் அரிய நூல்கள் பல இருக்கின்றன என்பது தெரியும் என்றாலும், நேரில் பார்த்த போது பெருவியப்பாக இருந்தது. எத்தனையெத்தனை தலைப்புகளில், எவ்வளவு நூல்கள் .. .. ஒரு தனி மனிதரால் சாத்தியமா? என்பதைவிட அவரின் மன ஓட்டம், அதற்கு முழுமையாய் ஒத்துழைக்கும் அவரின் குடும்ப உறுப்பினர்கள் என யாராலும் வியக்காமல், நம்மிடம் இது போன்ற உத்வேகம் இல்லையே எனும் ஏக்கம் எழாமல் தவிர்க்கவே … 35 ஆயிரம் புத்தகங்கள்-ஐ படிப்பதைத் தொடரவும்.
குறிச்சொல்: நூலகம்
திப்பு: விடுதலைப் போரின் முன்னோடி
எதிர்வரும் நவம்பர் 20ம் தேதி திப்புவின் பிறந்த நாள். திப்பு என்றாலே பார்ப்பனியத்துக்கு வேப்பங்காயாய் கசக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன்னால் கர்நாடக மாநிலத்தில் அரசு தொலைக்காட்சியில் இராமாயணம் ஒளிபரப்பட்டுக் கொண்டிருந்த போது, திப்புவின் வரலாற்றுத் தொடரை ஒளிபரப்ப முன்வந்தது ஒரு தொலைகாட்சி நிறுவனம். அதற்கு எழுந்த எதிர்ப்புகள் காரணமாக, இது கற்பனைக் கதை எனும் முன்னொட்டுடன் திப்புவின் வரலாறு ஒளிபரப்பப்பட்டது. அதாவது, நடந்தது என்பதற்கு எந்தவித் சான்றும் இல்லாத, வெறும் புராணமான இராமாயணம் எந்த முன்னொட்டும் இல்லாமல் … திப்பு: விடுதலைப் போரின் முன்னோடி-ஐ படிப்பதைத் தொடரவும்.
உயிர்க் கொல்லி நோய்கள்
மருத்துவ அறிவியல் உண்மையிலேயே வளர்ந்து வருகிறதா? அல்லது நாம் மருத்துவ அறிவியலைத் தவற விட்டு விட்டு கருவிகளின் பின்னால் சென்று கொண்டிருக்கிறோமா? இன்றைய விஞ்ஞானத்தைத் தீர்மானிக்கும் ஒற்றைச்சக்தியாக நாம் ஆங்கில மருத்துவத்தை மட்டுமே நம்பியிருக்கிறோம். ஆங்கில மருத்துவத்திற்கு எதிராகப்பேசும் எந்த ஒரு முறையையும் ‘அறிவியல் பூர்வமானது இல்லை’ என்ற நம் பொதுப்புத்தியில் ஏற்றி வைக்கப்பட்ட கருத்தால் புறந்தள்ளுகிறோம். அறிவியல் என்பது கருவிகளைக் கடந்தும் இருக்கலாம் என்பதை ஏற்றுகொள்கிற பக்குவம் நமக்கு வரவேண்டும். இப்படியான சிந்தனைதான் அறிவியலை அதன் … உயிர்க் கொல்லி நோய்கள்-ஐ படிப்பதைத் தொடரவும்.
இந்திய சீனப் போர்
இந்தியாவும் சீனாவும் எல்லைகளில் படையை குவித்து வருவதாக செய்திகள் வந்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில் 1962ல் நடந்த இந்திய சீனப் போர் குறித்து அறிந்து கொள்வது தேவையாக இருக்கிறது. இன்று இரு நாடுகளிடையே இருக்கும் முறுகலான இந்த சூழலில் ஊடகங்களில் இரண்டு பக்க செய்திகளும் இடம்பெறுகிறதா என்றால் கேள்விக்குறிதான். அது மட்டுமல்ல, சீனா பக்க செய்தியை வெளியிட்டால் அது தேச விரோதமான செய்தியாக தேச விரோத ஊடகமாக பார்க்கப்படும் அளவுக்கு இங்கு சூழல் திட்டமிட்டு கெடுக்கப்பட்டிருக்கிறது. அமைச்சர்களின், … இந்திய சீனப் போர்-ஐ படிப்பதைத் தொடரவும்.
கோவில் நிலம் சாதி
பல்வேறு நாளிதழ்களுக்கு இடையில் ஒத்த செய்திகள் ஒரே மாதிரி இருக்கிறதா? ஒரு தொலைக்காட்சி சேனல் காட்டிய செய்தியை இன்னொரு சேனல் காட்டுகிறதா? கண்முன்னே நிகழும் செய்திகளிலேயே இத்தனை வேறுபாடுகள் இருக்கின்றன என்றால், ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட வரலாறு எப்படி இருந்திருக்கும்? நந்தன் வரலாறுஇடங்கை வலங்கை மோதல்கள்களப்பிரர்கள் யார்?பக்தி இலக்கியம் ஏன் தோன்றியது?தமிழ் வரலாற்று ஆய்வாளர்களின் கண்ணோட்டம் எப்படி?பழைய காலத்தில் நிர்வாக இயந்திரம் எப்படி இயங்கியது?நிர்வாகவியலில் கோவில்களின் பங்கு என்ன? இப்படி இதுவரை நாம் கொண்டிருந்த அத்தனை கருத்துகளிலும் … கோவில் நிலம் சாதி-ஐ படிப்பதைத் தொடரவும்.
தமிழகத்தில் RSS வளர்ந்தது எப்படி?
சைக்கிள் கேப்பில் லாரி ஓட்டுவது என்று கேலியாக பேசிக் கொள்வார்கள். ஆனால் சங்கிகள் விமானத்தையே ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள். இன்றைய மோடி அரசாங்கமும், பார்ப்பன மயமாக்கப்பட்டிருக்கும் இந்திய அரசும், அதன் மூலம் கிடைத்திருக்கும் அதிகாரமும், பொருளாதார பலமும் சங்கிகளை எல்லாவித சோதனை முயற்சிகளையும் செய்து பார்க்கத் தூண்டியிருக்கின்றன. எல்லா இடங்களிலும் செய்து பார்க்கத் தூண்டியிருக்கின்றன. ஒப்பீட்டளவில் வட இந்தியாவை விட தெனிந்தியா குறிப்பாக தமிழ்நாடு பார்ப்பனியத்துக்கு எதிராகவே தன்னுடைய கலை, பண்பாட்டு, சமூக விழுமியங்களின் சிந்தனையை கொண்டிருக்கிறது. ஆனால், … தமிழகத்தில் RSS வளர்ந்தது எப்படி?-ஐ படிப்பதைத் தொடரவும்.
சிவாஜி யார்?
கோவிந்த் பன்சாரே. கடந்த 2015 ஆம் ஆண்டு பிப்ரவரி 16 ம் தேதி காலை நடை பயிற்சியை மேற்கொண்டிருந்த போது சுட்டுக் கொல்லப்பட்ட மராட்டிய கம்யூனிச தலைவர்களில் ஒருவர். சரியாக ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் இதே நாட்களில் அவர் மருத்துவமனையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். 20ம் தேதி மரணமடைந்தார். ஏன் அவர் கொல்லப்பட்டார்? பார்ப்பனியத்தை கடுமையாக எதிர்த்துக் கொண்டிருந்தவர். கொல்லப்படுவதற்கு ஒரு மாதத்துக்கு முன்னர் கோட்சேவை ஆராதிக்கும் மனோநிலையின் ஆபத்து குறித்து உரையாற்றினார். அப்போது ஏபிவிபி குண்டர்களால் … சிவாஜி யார்?-ஐ படிப்பதைத் தொடரவும்.
நூலகம்: அறிவு வளங்களை பாதுகாப்போம்
சிறு வயதில் ஒருவன் கற்கும் நூல்களே பின்னர் அவனை ஆற்றுப்படுத்துகின்றன, அவனுக்கான கண்ணோட்டத்தை வந்தடைய உதவுகின்றன. வழி நடத்தும் தோழனாகின்றன. நூல்களின் சுவை கண்ட யாரும் ஒற்றை ஒரு நாளேனும், இந்த வாசிப்புப் பழக்கத்தை மக்களிடம் எப்படி ஏற்படுத்துவது என்று சிந்திக்காமல் இருந்திருக்க முடியாது. அந்த அளவுக்கு சரியான நூல்கள் மக்களின் உள்ளொளியை பற்றிக் கொள்கின்றன. இதை விரிவாக்குவதும், அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு கடத்துவதும் யார் பொறுப்பு? ஐயம் சிறிதும் இல்லாமல், இது அரசின் கடமையே. ஆனால் அரசு … நூலகம்: அறிவு வளங்களை பாதுகாப்போம்-ஐ படிப்பதைத் தொடரவும்.