அன்பார்ந்த நண்பர்களே, தோழர்களே, நூல்கள் வாசிக்கத் தொடங்கிய பள்ளிப் பருவத்திலிருந்தே, நாமும் இதுபோல் நூல்கள் எழுத வேண்டும் என்பது ஒரு விருப்பமாக, அறுந்து விடாத நூலாக உள்ளுக்குள் இருந்து கொண்டே இருந்தது. வாசிப்பை நேசிக்கும் அனைவருள்ளும் இப்படி ஓர் இழை ஊடும் பாவுமாக ஓடிக்கொண்டிருக்கும் என்றே எண்ணுகிறேன். கல்லூரி நாட்களில் இரண்டு நாவல்கள் எழுதி சுற்றுக்கு விட்டதும், அதற்கு கிடைத்த வரவேற்பும் தனி மகிழ்வை தந்தது. பின்னர் கவிதைகள் எழுதித் திரிந்ததும் ஒரு கனாக் காலமாக கடந்தது. … என்னுடைய நூல்கள்-ஐ படிப்பதைத் தொடரவும்.
குறிச்சொல்: நூல்கள்
IITகளில் என்ன நடக்கிறது?
முனைவர் வசந்தா கந்தசாமி முனைவர் வசந்தா கந்தசாமி. 130 தலைப்புகளில் நூல்கள் வெளியீடு, 600 மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகள் எழுதியிருக்கும் IIT-Mன் ஓய்வு பெற்ற பேராசிரியரான முனைவர் வசந்தா கந்தசாமி சென்னை ஐஐடி யில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை முகத்தில் அறைந்தாற்போல் வெளிப்படுத்துகிறார். மனுநீதி தான் அங்கே கோலோச்சுகிறது, ஜனநாயகம் என்பதே இல்லை. கருப்பாக இருக்கும் யாரும் அங்கே படித்து தேர்ச்சி பெற முடியாது. இதுவரை ஒரு கண்டுபிடிப்பு கூட அங்கிருந்து வெளியாகவில்லை. பேராசிரியர்களாய் இருப்போரின் … IITகளில் என்ன நடக்கிறது?-ஐ படிப்பதைத் தொடரவும்.
நூலகம்: அறிவு வளங்களை பாதுகாப்போம்
சிறு வயதில் ஒருவன் கற்கும் நூல்களே பின்னர் அவனை ஆற்றுப்படுத்துகின்றன, அவனுக்கான கண்ணோட்டத்தை வந்தடைய உதவுகின்றன. வழி நடத்தும் தோழனாகின்றன. நூல்களின் சுவை கண்ட யாரும் ஒற்றை ஒரு நாளேனும், இந்த வாசிப்புப் பழக்கத்தை மக்களிடம் எப்படி ஏற்படுத்துவது என்று சிந்திக்காமல் இருந்திருக்க முடியாது. அந்த அளவுக்கு சரியான நூல்கள் மக்களின் உள்ளொளியை பற்றிக் கொள்கின்றன. இதை விரிவாக்குவதும், அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு கடத்துவதும் யார் பொறுப்பு? ஐயம் சிறிதும் இல்லாமல், இது அரசின் கடமையே. ஆனால் அரசு … நூலகம்: அறிவு வளங்களை பாதுகாப்போம்-ஐ படிப்பதைத் தொடரவும்.
ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்
"உலகமயமாக்கல் மூலமாக உலகமே இன்றொரு சிறிய கிராமமாக மாறி விட்டது...மக்கள் அனைவரின் நலன்களும் மேம்படுத்தப்பட்டுக் கொண்டு இருக்கின்றன...நாடுகள் முன்னேற்றம் அடைந்து கொண்டு இருக்கின்றன" என்று சிலர் ஓயாது கூறிக் கொண்டு இருக்கும் பொழுது அக் கூற்றினை மறுக்கின்றார் இந்த நூலின் ஆசிரியரான ஜான் பெர்கின்ஸ் அவர்கள். "உலகமயமாக்கல் என்ற பெயரில் உங்களின் நாட்டினை நாங்கள் கொள்ளையிட்டுக் கொண்டு இருக்கின்றோம். உங்கள் நாட்டின் இயற்கை வளங்கள், நீர் ஆதாரங்கள், மனித வளங்கள் ஆகியவற்றை உலகில் உள்ள பெரு … ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்-ஐ படிப்பதைத் தொடரவும்.
சமூகத்தை நேசிப்பவர்களின் நூல்
ஒரு சொல்லின் பொருள் என்பது வெறுமனே அந்தச் சொல் அடையாளப் படுத்தும் ஒன்றோடு முடிந்து விடுவதில்லை. பல்லாயிரம் மக்களின் உழைப்பிலிருந்தே அந்தப் பொருள் வடிவம் பெற்றிருக்கிறது. அந்தப் பல்லாயிரக் கணக்கான மக்களின் உழைப்பை விலக்கி விட்டு அந்தச் சொல்லை மட்டும் எடுத்துக் கொண்டால் அதன் பொருள் ஒரு போதும் முழுமை பெறாது. பாசிசம் எனும் சொல்லை எடுத்துக் கொள்வோம், முதலாளித்துவத்தின் நெருக்கடியின் போது மிகவும் பிற்போக்கான, ஆக்கிரமிப்புத் தன்மை கொண்ட சக்திகளின் அரசியல் போக்கு என்று … சமூகத்தை நேசிப்பவர்களின் நூல்-ஐ படிப்பதைத் தொடரவும்.
மாவோவின் குழந்தைப்பருவம் ௨
ஒரு கம்யூனிஸ்டின் உருவாக்கம் பகுதி ௪ இறுதியாக எனக்கு 13 வயதாக இருக்கும்போது நான் ஆரம்ப பாடசாலையை விட்டு நீங்கினேன். கூலிக்கு அமர்த்தப்பட்ட தொழிலாளிக்கு உதவியாக நீண்ட நேரம் எங்கள் பண்ணையில் நான் வேலை செய்யத்தொடங்கினேன். பகலில் ஒரு தொழிலாளியின் முழு அளவு வேலையையும் இரவில் தந்தையாரின் கணக்குப்புத்தகம் எழுதும் வேலையையும் செய்தேன். புராதன இலக்கிய நூலைத்தவிர கிடைக்கக்கூடிய அனைத்து நூல்களையும் விரும்பிப்பயின்றேன். இது எனது தந்தையாருக்கு கவலையூட்டியது, அவர் புராதன இலக்கிய நூலில் நான் சிறந்த … மாவோவின் குழந்தைப்பருவம் ௨-ஐ படிப்பதைத் தொடரவும்.
மாவோவின் குழந்தைப்பருவம் ௧
ஒரு கம்யூனிஸ்டின் உருவாக்கம் பகுதி ௩ பல்வேறு விசயங்கள் சம்பந்தமாக நான் ஒப்படைத்த ஐந்து அல்லது ஆறு தொகுதி கேள்விகளைப்பற்றி, தலைவர் மாவோ 12 இரவுகள் வரை என்னுடன் கதைத்திருக்கிறார். ஆனால் அதில் குறிப்பிட்ட சில சம்பவங்களில் தனது சொந்தக்கடமைகள் பற்றி அல்லது தன்னைப்பற்றி அவர் ஒருபோதும் குறிப்பிட்டதில்லை. அத்தகைய தகவல்களை அவர் எனக்கு தருவார் என்று நான் எதிர்பார்ப்பது பயனற்றது என்று நான் நினைக்கத் தொடங்கியிருந்தேன். தனிப்பட்டவர்கள் அல்லது அவர்களின் செயற்பாடுகள் வெகு முக்கியத்துவம் குறைந்தவை … மாவோவின் குழந்தைப்பருவம் ௧-ஐ படிப்பதைத் தொடரவும்.