35 ஆயிரம் புத்தகங்கள்

அண்மையில் சென்னை சென்றிருந்த போது பழங்காசு. சீனிவாசன் ஐயாவை சந்தித்திருந்தேன். அதுவரை, அவரின் சேகரிப்பில் அரிய நூல்கள் பல இருக்கின்றன என்பது தெரியும் என்றாலும், நேரில் பார்த்த போது பெருவியப்பாக இருந்தது. எத்தனையெத்தனை தலைப்புகளில், எவ்வளவு நூல்கள் .. .. ஒரு தனி மனிதரால் சாத்தியமா? என்பதைவிட அவரின் மன ஓட்டம், அதற்கு முழுமையாய் ஒத்துழைக்கும் அவரின் குடும்ப உறுப்பினர்கள் என யாராலும் வியக்காமல், நம்மிடம் இது போன்ற உத்வேகம் இல்லையே எனும் ஏக்கம் எழாமல் தவிர்க்கவே … 35 ஆயிரம் புத்தகங்கள்-ஐ படிப்பதைத் தொடரவும்.

புத்தகங்களே துணை

இது 24.11.2017 அன்று தமிழ்நாடு அறிவியல் இயக்கம் நடத்திய புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவில் எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் அவர்கள் புத்தகங்களே துணை எனும் தலைப்பில் ஆற்றிய சிறப்புரை. நூல்களை வாசிப்பது, நூல்களை நேசிப்பது, நூல்களை சுவாசிப்பது என்று படிப்படியாக நூல்களுக்குள் நுழைவதை ஒரு அழகியல் ஒழுங்கோடு புதிய வாசகனுக்கு எப்படி பரிமாறுவது என்று எப்போதாவது சிந்தித்திருக்கிறீர்களா? ஆம் என்றால் இது நீங்கள் கேட்க வேண்டிய ஓர் உரை. இந்த உரையைக் கேட்கும் யாருக்கும் நாமும் நூல்களை வாசிக்க … புத்தகங்களே துணை-ஐ படிப்பதைத் தொடரவும்.

மாமேதை ஏங்கல்ஸ்

28 நவம்பர் 2019. இந்த நாளிலிருந்து மாமேதை ஏங்கல்சின் 200வது பிறந்த ஆண்டு தொடங்குகிறது. கம்யூனிசம் குறித்தும், மார்க்சிய ஆசான்கள் குறித்தும் அறிந்து கொள்ள, உலகம் புதிய உத்வேகத்துடன் தேடிக் கொண்டிருக்கிறது என்பதை முதலாளித்துவ அறிஞர்களாலும் கூட மறைக்க முடியவில்லை. ஆங்காங்கே மார்க்சிய படிப்பு வட்டங்கள் உருவாகிக் கொண்டிருக்கின்றன. அந்த வகையில் ஒரு வாசிப்பு அனுபவத்தை ஏற்படுத்தும் விதமாக ஏங்கல்சின் படைப்புகளில் ஒன்றான ‘குடும்பம் தனிச் சொத்து அரசு ஆகியவற்றின் தோற்றம்’ எனும் நூல் எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கிறது. … மாமேதை ஏங்கல்ஸ்-ஐ படிப்பதைத் தொடரவும்.