பாஜக, ஆர்.எஸ்.எஸ், பார்ப்பனியம். சமூகத்தில் பார்ப்பனியத்தின் மேலாதிக்கத்துக்காக உருவாக்கப்பட்ட அமைப்பு தான் ஆர்.எஸ்.எஸ். இதன் அரசியல் பிரிவு தான் பாஜக. ஆனால் அது தன்னை இந்துக்களின் பாதுகாவலன் என்று கூறிக் கொள்கிறது. இந்து என்பது யாரைக் குறிக்கும்? இஸ்லாம் என்பது போல், கிருஸ்துவம் என்பது போல் இந்து என்பது ஒரு மதமல்ல. யார் இந்து? எனும் கேள்விக்கு அரசியல் சாசனம் கத்தரிக்காய் வணிகம் செய்திருக்கிறது என்பது எல்லோருக்கும் தெரிந்தது தான். நடைமுறையில் யார் இந்து என்றால் அதன் … நான் இந்துவல்ல.. .. .. நீங்கள்?-ஐ படிப்பதைத் தொடரவும்.
குறிச்சொல்: நூல்
பெண்களின் அந்தரங்கம்
கோவை பள்ளி மாணவி தற்கொலை தொடர்பாக சின்மயா வித்யாலயா பள்ளியின் முதல்வர் மீரா ஜாக்சனும், ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தியும் கைது செய்யப்பட்டுள்ளார்கள். ஓரிரு மாதங்களுக்கு முன்னர் வேறுசில பள்ளிகளில் இதே குற்றச்சாட்டுகளால் ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டார்கள். ஒவ்வொரு நாளும் இது போன்ற செயல்கள் நடைபெற்றுக் கொண்டே இருக்கின்றன. பள்ளிகளின் மட்டுமல்ல வாய்ப்பு கிடைக்கும் எல்லா இடங்களிலும் பெண்களுக்கு எதிரான மட்டுமீறல் என்பது இயல்பாகவே நடந்து வருகிறது. இது போன்ற நிகழ்வுகளில் வெளியில் தெரியவருவது மட்டும் ஒரு நாளுக்கு … பெண்களின் அந்தரங்கம்-ஐ படிப்பதைத் தொடரவும்.
இஸ்லாம் : கற்பனைக் கோட்டையின் விரிசல்கள் வழியே.. .. ..
அன்பார்ந்த நண்பர்களே, தோழர்களே, இஸ்லாம் கற்பனைக் கோட்டையின் விரிசல்கள் வழியே எனும் கட்டுரைத் தொடரை 2008ல் தொடங்கினேன். மிகுந்த வரவேற்பையும், பெரும் விவாதங்களையும் கிளப்பிய தொடர் அது. பின்னர் அத்தொடர் சூழல் கருதி முடிக்கப்படாமல் இடையில் நிறுத்தப்பட்டது. அதை முழுமைப்படுத்தி நூலாக கொண்டுவர வேண்டும் எனும் ஆவல் தொடர்ந்து கொண்டே இருந்தாலும், இரண்டு காரணங்கள் அதை தள்ளிப் போட்டுக் கொண்டே வந்தன. இஸ்லாம் எனும் மதத்தை விமர்சித்து எழுதப்பட்ட இதை பிற மதவாதிகள் தங்களுடைய வெறுப்பு அரசியலுக்கு … இஸ்லாம் : கற்பனைக் கோட்டையின் விரிசல்கள் வழியே.. .. ..-ஐ படிப்பதைத் தொடரவும்.
தன்னிலை விளக்கம்
அன்பார்ந்த தோழர்களே, நண்பர்களே, கடந்த ஒரு மாதமாக செங்கொடி தளத்தில் புதிய பதிவுகள் எதுவும் இடப்படவில்லை. அதற்கான காரணமோ விளக்கமோ எதுவும் பதிவு செய்யப்படவும் இல்லை. இது குறித்து தோழர்கள் சிலர், “என்னாச்சு?” என்று கேள்வி எழுப்பியதால், அதுகுறித்த சிறு தன்னிலை விளக்கமே இந்தப் பதிவு. முன்னர் சிலமுறை ஓரிரு நாட்கள் அல்லது ஒரு வாரம் எனும் அளவுக்கு பதிவுகள் இடாமல் இருந்ததுண்டு. அப்போதெல்லாம் ஒரு வலைப்பதிவில் இயல்பாக வரும் இடைவெளி என்பதாக கடந்து விடும். மாதக்கணக்கிலும் … தன்னிலை விளக்கம்-ஐ படிப்பதைத் தொடரவும்.
மொகஞ்சதரோ அல்லது சிந்துவெளி நாகரீகம்
சிந்து நதி சமவெளி நாகரீகம் குறித்து தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. அது திராவிட நாகரீகம் என்பதும் இன்று ஐயந்திரிபற நிறுவப்பட்டுள்ளது. ஆனால் தொடக்கத்தில், அதாவது இந்த நாகரீகம் அகழ்ந்து கண்டெடுக்கப்பட்ட காலத்தில் அது ஆரிய நாகரீகம் என்றே அறிவிக்கப்பட்டது. பத்து ஆண்டுகளுக்கும் மேலாக நிலவிவந்த அந்தப் பொய்யை ஹிராஸ் பாதிரியார் என்பவர் தான் உடைத்து அது திராவிட நாகரீகம் என உறுதியாக வெளிப்படுத்தினார். அண்மையில், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில், தெற்காசிய தொல்லியல் துறையில் சிந்து சமவெளி மக்களின் … மொகஞ்சதரோ அல்லது சிந்துவெளி நாகரீகம்-ஐ படிப்பதைத் தொடரவும்.
மயக்க பிஸ்கட்
தமிழக மக்க்களே, காவிகளைப் புரிந்து கொள்ளுங்கள்: சிந்திக்க சில கேள்விகள்! “தேசியம் காக்க - தமிழினம் காக்க புறப்படுவோரே, பதில் கூறுங்கள்!” மயக்க பிஸ்கெட்டுகள் ஓர் எச்சரிக்கை தெய்வீக தமிழக சங்கம் (திருச்சி) என்ற பெயரில் ஒரு வெளியீடு வீட்டுக்கு வீடு வழங்கப்படுகிறது. இரயில் பயணங்களில் மயக்க பிஸ்கெட்டுகள் கொடுத்து பயணிகளை மயங்கச் செய்து அவர்களின் உடமைகளை கொள்ளையடிப்பது போல, உண்மைக்கு மாறான தகவல்களை வெளியிட்டு மூளைச் சலவை செய்து, காவிக் கட்சிக்கு ஆள் திரட்டும் தந்திரம் … மயக்க பிஸ்கட்-ஐ படிப்பதைத் தொடரவும்.
புதிய வேளாண் சட்டங்களும் விளைவுகளும்
புதிய வேளாண் சட்டங்கள் என்ற பெயரில் பாஜக அரசு மூன்று சட்டத் திருத்தங்களை கொண்டு வந்த நாளிலிருந்து அதற்கெதிராக விவசாயிகள் போராடி வருகிறார்கள். கடந்த இரண்டு வாரங்களாக ‘தில்லி சலோ’ போராட்டத்தையும் முன்னெடுத்து வருகிறார்கள். திரும்பப் பெறாமல் திரும்ப மாட்டோம் என்று தீரத்துடன் போராடி வரும் அந்தப் போராட்டத்தால் மக்கள் எழுச்சியடைந்து வருகிறார்கள். அந்தச் சட்டம் குறித்து, கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்தி பலரும் விளக்கி இருக்கிறார்கள். அந்த வகையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் பெ.சண்முகம் எழுதி … புதிய வேளாண் சட்டங்களும் விளைவுகளும்-ஐ படிப்பதைத் தொடரவும்.
திப்பு: விடுதலைப் போரின் முன்னோடி
எதிர்வரும் நவம்பர் 20ம் தேதி திப்புவின் பிறந்த நாள். திப்பு என்றாலே பார்ப்பனியத்துக்கு வேப்பங்காயாய் கசக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன்னால் கர்நாடக மாநிலத்தில் அரசு தொலைக்காட்சியில் இராமாயணம் ஒளிபரப்பட்டுக் கொண்டிருந்த போது, திப்புவின் வரலாற்றுத் தொடரை ஒளிபரப்ப முன்வந்தது ஒரு தொலைகாட்சி நிறுவனம். அதற்கு எழுந்த எதிர்ப்புகள் காரணமாக, இது கற்பனைக் கதை எனும் முன்னொட்டுடன் திப்புவின் வரலாறு ஒளிபரப்பப்பட்டது. அதாவது, நடந்தது என்பதற்கு எந்தவித் சான்றும் இல்லாத, வெறும் புராணமான இராமாயணம் எந்த முன்னொட்டும் இல்லாமல் … திப்பு: விடுதலைப் போரின் முன்னோடி-ஐ படிப்பதைத் தொடரவும்.
மீளும் வரலாறு: அறியப்படாத நந்தன் கதை
நந்தன் யார்? என்றொரு கேள்வியை எழுப்பினால் தில்லை நடராஜர் கோவிலோடு இணைத்து ஒரு பெரிய கதை சொல்லப்படும். இந்தக் கதைக்கு என்ன ஆதாரம் என்று கேட்டால், அப்படி எதுவும் கிடைக்காது. சேக்கிழாரின் திருத் தொண்ட புராணத்திலிருந்து தொடங்குகிறது இங்கு வழங்கப்படும் நந்தனின் கதை. ஆனால் நந்தன் ஒரு மன்னன். அந்தனை மன்னனை சூழ்ச்சி செய்து கொன்ற வரலாறு, தமிழ்நாட்டில் பௌத்த சமண மதங்களின் அழிவினோடும், சைவ மத மேலோங்கலோடும் தொடர்புடையது. இதை விளக்குவது தான் இரவிகுமாரின் இந்த … மீளும் வரலாறு: அறியப்படாத நந்தன் கதை-ஐ படிப்பதைத் தொடரவும்.
தமிழ் சங்கம் டு காவிச் சங்கம்
காவி கவ்வத் துடிக்கும் இன்றைய சூழலில் இந்த நூல் காவிகள் துரத்தியடிக்கப்பட்ட கதையை கூறுகிறது. ஆழமாக இல்லாமல் மேலோட்டமாக இருப்பது இந்நூலின் பெருங்குறை என்றாலும், ஒரு பருந்துப் பார்வையில் அந்த வரலாற்றை கூறுவதால், இன்றைய இளைஞர்கள் புரிந்து கொள்வதற்கும், ஆழமாக பயணிக்க தூண்டுதலாக அமையலாம் என்பதாலும் இந்நூல் இங்கு பதிவு செய்யப்படுகிறது. இது ஆதனூர் சோழன் எழுதி நக்கீரன் இணையத்தில் தொடராக வெளிவந்தது. முன்னுரையிலிருந்து .. .. .. ஆரியர்களைப் போற்றி சொந்த் மக்களை வாட்டிய காலம் … தமிழ் சங்கம் டு காவிச் சங்கம்-ஐ படிப்பதைத் தொடரவும்.