விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்று சொல்வதன் பொருள் என்ன? யார் அவ்வாறு கூறுகிறார்கள், அவர்களின் பின்னணி என்ன? விடுதலை புலிகளின் அழிவில் செயல்பட்ட இலங்கை, இந்திய உலக அரசியல் காரணிகள் என்ன? இப்போது அதை மீண்டும் பேசுவதின் உள்ளடக்கம் என்ன? போன்ற விவரங்களை அலசும் காணொளி https://www.youtube.com/watch?v=OZaFtaVBROY
குறிச்சொல்: நெடுமாறன்
ஒரு பெண் புலியின் குமுறல் உணர்த்தும் புரிதல்கள்
அண்மையில் ஆனந்த விகடன் இதழில் “ஒரு பெண் போராளியின் மனக் குமுறல்” என்ற தலைப்பில் ஒரு பெண் புலியின் செவ்வி வெளியாகியிருந்தது. பரவலாக கவனத்தை ஈர்த்த, அதிர்வலைகளை ஏற்படுத்திய கட்டுரையாக அது இருந்தது. அந்த செவ்வியின் மெய்த்தன்மையில் எனக்கு ஐயம் உண்டு. அது புனைவாகக் கூட இருக்கலாம். அதன் நோக்கம் பரிதாபம் காட்டுவது எனும் போர்வையிலான கேவலப்படுத்தலாகக் கூட இருக்கலாம். ஏனென்றால், உயிருடன் கைது செய்யப்பட்ட ஈழப் புலிப் போராளிகள் கைக்கூலிகளாக செயல்பட ஒப்புக் கொண்ட … ஒரு பெண் புலியின் குமுறல் உணர்த்தும் புரிதல்கள்-ஐ படிப்பதைத் தொடரவும்.