நாய்களா நாங்கள்? குமுறும் தொழிலாளர்கள், பேரழிவில் இந்தியா

இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான உத்தரப்பிரதேசத்தின் தலைநகரான லக்னோவுக்கு வெளியே உள்ள பரபாங்கி நெடுஞ்சாலையில் ஒரு வசந்த காலையில் இரண்டு ஆண்கள் ஒரு மரத்தின் கீழ் தூங்குகிறார்கள். அவற்றில் ஒருவன் வண்ணமயமான கோடுகளுடன் உள்ள கருப்பு விரிப்பில் படுத்திருக்கிறான்; மற்றொறுவன் பைகள் இணைக்கப்பட்ட மிதிவண்டிகளுக்கு அருகில் தூக்கிப் போடப்பட்ட வெள்ளை சாக்கில் படுத்திருக்கிறான். இதேபோன்ற ஏற்பாடுகளில் மேலும் மூன்று ஆண்கள் சிறிது தூரம் தொலைவில் தூங்குகிறார்கள். அவர்களின் உடைகளும், தலையும் அழுக்கடைந்துள்ளது, பயணத்தின் அழுக்கு மற்றும் வியர்வை அவர்களின் … நாய்களா நாங்கள்? குமுறும் தொழிலாளர்கள், பேரழிவில் இந்தியா-ஐ படிப்பதைத் தொடரவும்.

அம்பேத்கரியர்கள்: நெருக்கடியும் சவால்களும்

அம்பேத்கரியர்களையும், கம்யூனிஸ்டுகளையும் எதிர்ரெதிராக நிறுத்தும் முயற்சி தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறது. அதன் பின்னாடும் அரசியல் சதிகளை காணாமல், காணச் செய்யாமல், தூண்டி விடப்படும் உணர்ச்சிகளை பற்றிக் கொள்வது இரண்டுக்குமே பலன் தரப்போவதில்லை. அம்பேத்கரா? மார்க்ஸா? யார் பெரியவர் எனும் கேள்வியும், சாதி ஒழிப்பா? புரட்சியா? எது முதலில் எனும் கேள்வியும், முட்டையா கோழியா எது முதலில்? எனும் கேள்வியின் தரத்துக்கு பொருளற்றும், ஊள்ளீடற்றும், நோக்கமின்றியும், திசையின்றியும் முன்வைக்கப்பட்டு விவாதிக்கப்பட்டு வருகிறது. ஆனால் தேவை என்ன? நாம் … அம்பேத்கரியர்கள்: நெருக்கடியும் சவால்களும்-ஐ படிப்பதைத் தொடரவும்.

ஊரடங்கின் பின் மக்களின் பாடு

நடந்தே சென்றதால் வெடித்த பாதங்களுடன் கொரோனா பரவலை தடுக்கும் முகமாக இரண்டாவது ஊரடங்கு காலம் நடப்பில் இருக்கிறது. மக்கள் பெரும்பாலும் நோய்த் தொற்றின் அச்சத்தால் வீடுகளுக்குள் முடங்கி இருக்கிறார்கள். காய்கறி உள்ளிட்ட தள்ள முடியாத தேவைகளுக்கு மக்கள் வெளியில் வந்தாக வேண்டியதிருக்கிறது. மக்களின் இந்த தேவையை மதிக்காத அரசு, அவர்களின் தேவையை வீடுகளுக்கே சென்று தீர்த்து வைக்க முடியாத அரசு, மக்கள் மீது சமூக விலக்கலை மதிக்காமல் அலைகிறார்கள் என்று குற்றம் சுமத்துவதற்கு ஏதாவது அறுகதை இருக்கிறதா? … ஊரடங்கின் பின் மக்களின் பாடு-ஐ படிப்பதைத் தொடரவும்.

மூடு டாஸ்மாக்கை!

குடி கெடுக்கும் அரசிடம் கெஞ்சியது போதும்! கெடு விதிப்போம் ஆகஸ்டு 31! அருகதை இழந்தது அரசுக் கட்டமைப்பு! இதோ, ஆள வருகுது மக்கள் அதிகாரம்!! அன்புடையீர்! வணக்கம், தமிழகத்தில் பெண்கள் தாலியறுக்க, மாணவர்கள், இளைஞர்கள் வாழ்வை இருட்டாக்க அரசே டாஸ்மாக் சாராயக் கடைகளை நடத்தி வருகிறது. எங்கள் ஊருக்கு சாராயக் கடை வேண்டாம் என மனுக் கொடுத்தோம், மன்றாடினோம், பட்டினி கிடந்தோம், சாராயக் கடைக்கு பூட்டு போட்டோம், கல்லால் அடித்தோம். ஆனால், போலீசு காவலோடு மீண்டும் சாராயக் … மூடு டாஸ்மாக்கை!-ஐ படிப்பதைத் தொடரவும்.

ஆந்திர துப்பாக்கிக் குண்டுகளை விடக் கொடிய குண்டுகள்

கடந்த 7ம் தேதி செம்மரக் கட்டைகளைக் கடத்தினார்கள் என்று கூறி ஆந்திர காவல்துறை ரவுடிகள் 20 தொழிலாளர்களை சுட்டுக் கொன்றார்கள். இந்தக் கொலைகள் போலியாக நடத்தப்பட்ட மோதல் கொலைகள் தாம் என்பது ஐயத்துக்கு இடமற்ற வகையில் தகவல்கள், ஆதாரங்கள் வெளிப்பட்டுள்ளன. இது குறித்து சமூக வலைதளங்களில் பொங்கித் தீர்த்து விட்டார்கள் மக்கள். பழைய செம்மரக் கட்டைகளைக் கிடங்குகளிலிருந்து கொண்டுவந்து பழைய பதிவு எண்களை அழித்துவிட்டு காட்டியிருப்பது தொடங்கி, உடல்களில் தீக்காயங்கள் இருப்பது வரை பல்வேறு ஆதாரங்கள் இவ்வளவு … ஆந்திர துப்பாக்கிக் குண்டுகளை விடக் கொடிய குண்டுகள்-ஐ படிப்பதைத் தொடரவும்.